நடிகர் விஜய்யின் கரூர் பரப்புரையின்போது 41 அப்பாவிகள் உயிரிழந்த துயரம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதயம் உள்ள அனைவரையும் உலுக்கி எடுத்தது அந்த துயரம். ஆனால், இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று குறைந்தபட்சம் வருத்தமோ, இரங்கலோ தெரிவிக்கவில்லை விஜய். இதனை கண்டிக்கும் வகை யில், விஜய்யின் மனிதநேயமற்ற செயலையும், அவரின் மமதையையும் நக்கீரன் யூ டியூப் சேனலில் காணொலிக் காட்சி மூலமாக அம்ப லப்படுத்தினார் நக்கீரன் ஆசிரியர். அந்த காணொலி லட்சக்கணக்கான வர்களை சென்றடைந்தது. மேலும், கரூர் துயர சம்பவம் குறித்து நக்கீரன் ஆசிரியர் கொடுத்த சமூக ஊடகப் பேட்டிகளும், விஜய்யின் முகமூடியை கிழித்தெறிந்தது.
இந்த நிலையில், விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கான க்ளை மாக்ஸ் காட்சிக்காக கரூர் சம்பவத் தை பிரமாண்டப்படுத்தவே திட்ட மிட்டு கூட்ட நெரிசல் ஏற்படுத்தப்பட் டது என்பதை ஒரு காணொலிக் காட்சியில் அம்பலப்படுத்தினார் நக்கீரன் ஆசிரியர். அதேசமயம், நக்கீரன் காணொலியிலும், சமூக ஊடக பேட்டிகளிலும் ஆசிரியர் வைத்த வாதங்கள், ஆதாரங்கள், சுட்டிக்கட்டிய சம்பவங்கள் அனைத் தும் விஜய் தரப்பினரை கேள்விக் குள்ளாக்கியது.
கரூர் சம்பவத்தின் உண்மை களை நக்கீரன் அம்பலப்படுத்து வதைக் கண்டு விஜய் கோபமடைந் திருக்கிறார். இந்த காணொலியை விஜய்யால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அவரது கோபத்தை, த.வெ.க. நிர்வாகிகள் வைரலாக்கி யிருக்கின்றனர். இந்த நிலையில் தான், சென்னையிலுள்ள நக்கீரன் அலுவலகம், சென்னை மற்றும் அருப்புக்கோட்டையிலிருக்கும் நக்கீரன் ஆசிரியரின் வீடுகள் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வெடிகுண்டு மிரட்டல் தகவல் தமிழக உளவுத்துறையினருக்கு தெரிந்ததும், அதனை தமிழக காவல்துறை டி.ஜி.பி.க் கும், சம்பந்தப்பட்ட சரக காவல்துறை உயரதிகாரிகளுக்கும் தகவல் தந்து உஷார்படுத்தியது உளவுத்துறை. மேலும், நக்கீரன் ஆசிரியரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். இன்ச் பை இன்ச் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கவனமாக இருக்கும் படி அறிவுறுத்தினர் போலீசார். விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யின் உத்தரவின் பேரில் அருப்புக்கோட்டை வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விஜய் கட்டமைத்த அரசியல் பிம்பத்தை நக்கீரன் ஆசிரியர் தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருவதையும், ஜனநாயகன் படத்திற்காக கூட்ட நெரிசல் உருவாக்கப்பட்டிருப்பதையும் நக்கீரன் ஆசிரியர் அம்பலப்படுத்தியதை ஜீரணிக்க முடியாத விஜய்யின் கோழை ரசிகர்களால் விடுக்கப்பட்டதுதான் இந்த வெடிகுண்டு மிரட்டல் என தெரிய வருகிறது.
38 ஆண்டுகால பத்திரிகை உலகத் தொடர் பயணத்தில் இது போன்ற பல மிரட்டல்களை எதிர்கொண்டு நெருப்பாற்றில் நீந்திக் கடந்து வந்திருக்கிறது நக்கீரன். நடிகர் விஜய் தரப்பிலிருந்து வரும் மிரட்டல்களையும் நக்கீரன் எதிர்கொள்ளும். இந்த மாதிரி மிரட்டல்களுக்கெல்லாம் நக்கீரன் பயப்படாது என்பதை கோழை விஜய் புரிந்துகொள்ள வேண்டும்.
-இளையர்