Advertisment

வி.சி.க. நிர்வாகி மர்ம மரண சர்ச்சை! -திருவண்ணாமலை பதட்டம்!?

vv

ரணம் எப்படி நடந்தது, விபத்தா? கொலையா? தற்கொலையா? என எதுவும் உறுதியாகவில்லை. ஆனால் சாதிப் பாசத்தில் குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறார்கள் என எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது குற்றம்சாட்டி பிணத்தை வைத்துக்கொண்டு 4 நாட்கள் வி.சி.க.வினர் நடத்திய போராட்டம் ஆளும்கட்சியினரிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

Advertisment

vck

திருவண்ணாமலை மாவட்டம் தேவனாம்பட்டு காட்டுப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்-ரேணு தம்பதி மகன் இளங்கோவன். 35 வயதான இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி விடியற்காலை பலத்த தீக்காயங்களுடன் தேவனாம்பட்டு குட்டை அருகில் உயிருக்கு போராடிக்கொண்டிருந் துள்ளார். அதனைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியாகி திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி இறந்தார்.

அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக ஊர்வந்த நிலையில்,

அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக ஊர்வந்த நிலையில், அதனை அவரது உறவினர்கள், வி.சி.க.வினர் வாங்கமறுத்து நாயுடுமங்கலம் கூட்டுச்சாலையில் சாலைமறிய லில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள், டி.ஆர்.ஓ. பேச்சுவார்த்தை நடத்தியபோது, இது கொலை, குற்றவாளிகளை கைது செய்யும்வரை சடலத்தை வாங்கமாட்டோம் எனச்சொல்லி மூன்று நாட்களாக உடலை வாங்கவில்லை, ஆம்புலன்ஸிலேயே இருந்தது. நான்காவது நாள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வி.சி.க. போராட்டம் நடத்தியது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தந்த உத்தரவாதத்தையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு அக்டோபர் 7-ஆம் தேதி உடலை அடக்கம்செய்தனர்.

Advertisment

vv

இதுகுறித்து நம்மிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் நாகராசன், “"கிராமம் காட்டின் அருகே இருப்பதால் காட்டுப் பன்றிகள் நிலத் திற்குள் புகுந்து பயிர்களை சேதமாக்காம லிருக்க மின்வேலி அமைத்து இரவில் மின்சாரம் வைப்பார்களாம். அப்படி வைத்த மின்வேலியில் இளங்கோவன் சிக்கியுள்ளார். கரன்ட் ஷாக்கடித்து விட்டது. என்னைத் தூக்கிவந்து பெட்ரோல் ஊத்தி எரித்தார்கள் எனச்சொல்லிய வீடியோ உள்ளது. ஆதிக்க சாதியினர்தான் இந்த குற்றத்தைச் செய்துள்ளார்கள். ஒருவர் கேனில் பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கிவந்துள்ளார், அவரது நிலத்தி லுள்ள மாமரத்தின் கீழே வைத்து எரித்ததற்கான தடயம் உள்ளது, மோப்ப நாய் அவர் நிலத்தின் வழியேதான் வருகிறது. இதுபற்றி எல்லாம் போலீஸ் சரியாக விசா ரிக்கவில்லை. போலீஸ் மெத்தனத்தால்தான் போராட்டம் நடத்தினோம்''’ என்றார்.

மாவட்டம் முழுவதிலுமிருந்து வந்திருந்த வி.சி.க. நிர்வாகிகள் போராட்டத்தின்போது, அதே ஊரைச்சேர்ந்த திருவண்ணாமலை தொகுதி எம்.பி. அண்ணாதுரை, கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வான துணைசபாநாயகர் பிச்சாண்டிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

திருவண்ணாமலை தொகுதி எம்.பி. அண்ணாதுரையை நாம் தொடர்புகொண் டோம், அவர் நமது லைனை எடுக்கவில்லை. அவருக்கு நெருக்கமானவரிடம் கேட்டபோது, "இந்த விவகாரத்தில் எம்.பி. மனக்கஷ்டத்தில் இருக்கிறார். இளங்கோவன் எப்படி இறந்தார்? யார் எரித்தார்கள்?, எதனால் எரித்தார்கள் என இதுவரை தெரியவில்லை. சந்தேகத்தின் பேரிலேயே புகார் தந்துள்ளார்கள். இறந்தவருக்கு எம்.பி. அஞ்சலி செலுத்தச் செல்லும்முன்பே, அவர் குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறார் என குற்றம்சாட்டி வி.சி.க.வினர் மைக்கில் பேசுகிறார்கள். பிறகு எப்படி அவர் அங்கே செல்வார்? குற்றவாளி யாரென்றே தெரியாத ஒருவரை எம்.பி. எப்படி காப்பாற்ற முயற்சி செய்வார்? குற்றவழக்கில் எம்.பி. எப்படி தலையிடுவார்? தனது கிராமத்தின் அருகில் கள்ளச்சாராயம் விற்பவர்கள், கஞ்சா விற்பவர்களால் குற்றச்சம்பவங்கள் நடக்கக் கூடாது என பல இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தியுள்ளார். இந்த பிரச்சனையில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என்றே போலீஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இதற்கு முன்பு இதேபோல் இரண்டு மின்சார மரணங்கள் நடை பெற்றன. அவை போலீஸ் - இறந்தவர் குடும்பம் - நிலஉரிமையாளர்கள் பஞ்சாயத் துப் பேசி பணம் செட்டிலாகி முடித்துக் கொண்டார்கள். இதெல்லாம் சரியில்லை, தப்பு செய்தவர்கள் தண்டனை பெறட்டும் எனச் சொன்னவர் எம்.பி. அப்படிப்பட்டவர்மீது சாதி பார்த்து செயல்படுகிறார் என குற்றம்சாட்டிப் பேசியுள்ளார்கள் வி.சி.க. நிர்வாகிகள் சிலர். எம்.பி பெயரை டேமேஜ் செய்யவேண்டுமென்றே அவதூறு பரப்பு கிறார்கள்''’என்றார்.

vc

காவல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வர வில்லை, பல கோணங்களில் இது குறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது''’என்கிறார்.

"இந்த விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அ.தி.மு.க .வைச் சேர்ந்தவர்கள். ஆதார மில்லாமல் அவர்களை எப்படி அழைத்துச் செல்லலாம் என போலீஸை மிரட்டியவர், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதியான அந்த முக்கிய பிரமுகர். அது தெரிந்தும் வி.சி.க. நிர்வாகிகள் அதுபற்றி பேசாமல் தி.மு.க.வையே டார்கெட் செய்கிறார்கள்'' என்கிறார்கள் தி.மு.க.வினர்.

"இந்த விவகாரம் பெரியதானதன் பின்னணியில் ஆளும்கட்சி நிர்வாகிகளுக்குள் ளான பதவி மோகமும் உள்ளது' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

nkn191024
இதையும் படியுங்கள்
Subscribe