Advertisment

தன்னம்பிக்கை சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பிய வசந்த்குமார்!

vv

மிழகம் கொரோனாவுக்கு ஒரு எம்.எல்.ஏ.வையும் ஒரு எம்.பியையும் பறிகொடுத் திருக்கிறது. ஜெ. அன்பழகனை அடுத்து, கன்னியாகுமரி பாராளு மன்றத்தொகுதி உறுப்பினரும் வசந்த் அன் கோ உரிமையாளரு மான வசந்தகுமார் பலியாகியுள்ளார். காங்கிரஸின் மூவர்ண நிறத் துண்டைத் தவிர வேறெதையும் அணியாத காமராஜரின் தொண்டரான வசந்தகுமார், கடைசியாக கலந்துகொண்டது ஜூலை 15 அன்று நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்ததுதான்.

Advertisment

v

வசந்தகுமாரின் உதவியாளர் போத்திராஜுக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வசந்தகுமாருக்கும் அவரது மனைவி தமிழ்ச்செல்விக் கும் கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இருவரும் சென்னை ஆயிரம்விளக்கு சாலையில் அமைந்துள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வசந்தகுமாருக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தொடரப்பட்டது. வணிகத

மிழகம் கொரோனாவுக்கு ஒரு எம்.எல்.ஏ.வையும் ஒரு எம்.பியையும் பறிகொடுத் திருக்கிறது. ஜெ. அன்பழகனை அடுத்து, கன்னியாகுமரி பாராளு மன்றத்தொகுதி உறுப்பினரும் வசந்த் அன் கோ உரிமையாளரு மான வசந்தகுமார் பலியாகியுள்ளார். காங்கிரஸின் மூவர்ண நிறத் துண்டைத் தவிர வேறெதையும் அணியாத காமராஜரின் தொண்டரான வசந்தகுமார், கடைசியாக கலந்துகொண்டது ஜூலை 15 அன்று நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் அவரது சிலைக்கு மாலை அணிவித்ததுதான்.

Advertisment

v

வசந்தகுமாரின் உதவியாளர் போத்திராஜுக்கு கொரோனா ஏற்பட்டதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வசந்தகுமாருக்கும் அவரது மனைவி தமிழ்ச்செல்விக் கும் கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இருவரும் சென்னை ஆயிரம்விளக்கு சாலையில் அமைந்துள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வசந்தகுமாருக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தொடரப்பட்டது. வணிகத்தையும் அரசியலையும் வென்ற வசந்தகுமாரை ஆகஸ்ட் 28-ஆம் தேதி கொரோனா வென்றது.

Advertisment

வணிக மேலாண்மை படிப்புகள் எதுவும் படிக்காமல் தன்னம்பிக்கையாலும் உழைப்பாலும் ஒரு சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்பியவர் வசந்தகுமார். அன்றைக்குப் பிரபலமாயிருந்த வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனையாளராகத் தொடங்கி பிற்காலத்தில் தனது விற்பனை சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு சுவராக கட்டியெழுப்பியவர். 38 வருடங்களுக்கு முன்பு விற்பனை பிரதிநிதியாக இருந்தபோது, அவரது வாடிக்கையாளரான நண்பர் ஒருவர் தன் மளிகைக் கடையை, 6 மாதங்களுக்குள் வாடகை தந்துவிடவேண்டும் என்ற நிபந்தனையுடன் வசந்தகுமாரிடம் கொடுத்தார். அந்த மளிகைக் கடையை வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் மின்சாதனப் பொருட்கள் விற்கும் கடையாக மாற்றி தன் வெற்றிப் பாதைக்கான அடித்தளத்தை இட்டார் வசந்தகுமார். கடை போர்டுக்கு, சரக்குகள் வரும் மரப்பெட்டியின் பலகைகளையே பயன்படுத்திக்கொண்டதில் தெரிந்தது அவரது வணிக நுணுக்கமும் தொழில்நுட்பமும்.

இன்று அவரது வசந்த் & கோ கடைகள் 64 கிளைகளுடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி, பெங்களூருவில் பிரபலமான வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை மையமாகத் திகழ்கிறது. டயனோரா, சாலிடர் என கறுப்பு-வெள்ளை காலத்திலிருந்து கல ருக்கு டி.விகள் மாறிய நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளுக்கு அவருடைய கடையிலிருந்துதான் டி.வி. பெட்டிகள் சென்ற டைந்தன. தனது வணிகப்பயணம் குறித்து, "வெற்றி கொடி கட்டு' என்ற புத்தகத்தை எழுதி ரஜினியை வெளியிட வைத்தவர் அவர்.

""நான் தமிழில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு இரண்டையும் அஞ்சல் வழியில் பயின்றேன். பின்பு வி.ஜி.பி.யில் விற்பனையாளராகச் சேர்ந்தேன். 8 வருடங்கள் அங்கு வேலை செய்தபிறகு வெளியே வந்தேன். அப்போது கையில் என்னிடம் பணம் ஏதுமில்லை. நண்பர்களும் வாடிக்கையாளர்களும் உதவினார்கள். வி.ஜி.பி.யில் ஒரு திட்டம் இருந்தது. வாடிக்கையாளர் மாதா மாதம் குறிப்பிட்ட தொகையைச் செலுத்திவருவார். பொருளின் பாதி விலையை அடைந்ததும் பொருள் வாடிக்கையாளரிடம் விற்கப்படும். மீதித் தொகையை மாதாமாதம் தவணை முறையில் செலுத்துவார். அதே திட்டத்தை என் கடையிலும் நான் ஆரம்பித்தேன். எங்கள் நிறுவனத்தின் விற்பனை ஒரு கட்டத்தில் 900 கோடியையும் தாண்டியது. தற்போது 64 கிளைகளையும் சேர்த்து என்னிடம் 1000 பேர் வேலைசெய்கிறார்கள்'' என அவரே விவரித்துள்ளார்.

vv

வணிகத்துடன் அரசியலிலும் ஆர்வம் இருந்தது. அவரது அண்ணன் குமரிஅனந்தனைப் போலவே காமராஜரின் தொண்டனாக காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டார். சென்னை மேயர் தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டி யிட்டுள்ளார். இரண்டுமுறை நாங்குநேரி தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக வென்று காட்டியவர். காலம் அவரை எம்.பி.யாக மாற அழைத்தபோது தயக்கமின்றி களமிறங்கினார். 2014 எம்.பி. தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களில் டெபாசிட் கிடைத்தது இவருக்கு மட்டுமே. 2019-ல் அதே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத் திலும் அயராமல் குரல் கொடுத்தார். தொகுதியில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தினார். கொரோனா காலத்திலும் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

வணிகம், அரசியல் இவற்றுடன் ஊடகத்திலும் அவர் கவனம் சென்றது. வசந்த் தொலைக் காட்சி மூலம் மக்களை சந்தித்தபடியே இருந்தார். தனது நிறுவனத்துக்கான விளம்பரங்களில் உரிமையாளர்களே பல சினிமா நடிகைகளுடன் தோன்றுவது இன்றைக்கு பிரபலமாக உள்ளது. வசந்தகுமார் அப்போதே தன் நிறுவன விளம்பரங் களில் அவரே தோன்றுவார். நடிகைகள் இருக்க மாட்டார்கள். நம்பிக்கை-தரம் இவை பற்றிய வார்த்தைகள்தான் அந்த விளம்பரத்தில் இருக்கும்.

தன்னம்பிக்கை-உழைப்பு-வெற்றி இவற்றின் அடையாளமாக இருந்த வசந்தகுமார் கொரோனா வுக்கு பலியான நிலையில், ஆகஸ்டு 29-ஆம் தேதி பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது சென்னை வீட்டிலும், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திலும் உடல் வைக்கப்பட்டு அவரது சொந்த ஊரான அகத்தீஸ்வரத்துக்கு ஆகஸ்டு 30-ஆம் தேதி கொண்டுசெல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் என்ற கட்சியையும் தாண்டி அனைத்து மக்களையும் வசீகரித்த அந்த புன்னகை முகம் மறையவே மறையாது.

-மணிகண்டன், சுப்பிரமணியன்

nkn020920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe