ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சமத்துவ பயணம் என்கிற நோக்கத்துடன் ஜனவரி 2 முதல் 12-ஆம் தேதி வரை நடைபயணம் மேற்கொள் கிறார். இந்த நடைபயணத்தின் தொடக்க விழா ஜனவரி 2-ஆம் தேதி காலை திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகிலுள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நடைபயணத்தைத் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் சமத் துவ நடைபயணம்தான் என்னு டைய இந்தாண்டின் முதல் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. பொதுவாழ்க்கையில் தமிழ்நாட் டில் தன் காலடி படாத இடங் களே இல்லை என மக்கள் பிரச் சனைகளுக்காக நடைபயணம் மேற்கொண்டவர் வைகோ. அவ ரது நெஞ்சுரத்தையும் ஸ்டாமி னாவையும் பார்க்கும்போது அவருக்கு 82 வயதா அல்லது 28 வயதா என எண்ணத் தோன்று கிறது.
இளைஞர்கள் நலனுக்காகவும், எதிர்காலத்தின் வளர்ச்சிக்காகவும் செயலாற்றும் இயக்கம்தான் திராவிட இயக்கம். தன் தள்ளாத வயதிலும் தமிழர்களுக்காக உழைத்து இறுதி மூச்சுவரை பாடுபட்டவர் தந்தை பெரியார். அவர் வழியில் வந்த கலை ஞர் 80 ஆண்டு பொது வாழ்வுக்குச் சொந்தக்காரர். சக்கர நாற்காலியில் அமர்ந்தும் மக்களுக்காக உழைத்தவர். அப்படிப்பட்ட திராவிட பல்கலைக் கழகத்தில் படித்தவர்தான் வைகோ அவர்கள். நானும் அந்த திராவிட பல்கலைக்கழக மாணவன்தான்.
சமத்துவ நடைபயணத்தில் பங் கேற்கும் ஒவ்வொருவரையும் வைகோ தேர்வுசெய்து வந்துள்ளார். நடைபய ணத்தால் என்ன பயன் எனக் கேட் கிறார்கள். காந்தியின் நடைபயணம் தான் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத் தியது. இதுபோன்ற நடைபயணங் கள்தான் நமது கருத்தை எளிதாக மக்களிடம் கொண்டுசெல்லும். இளை ஞர்களுக்கு நல்வழி காட்டிட, இளைஞர்களுடன் சமத்துவ பயணம் மேற்கொள்ளும் வைகோவுக்கு வாழ்த்துகள், பாராட்டுகள்''’என்றார்.
மேலும், “"போதைப் பொருளைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக் கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. போதைப்பொருள் புழக்கம் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். மாநிலங்கள் விட்டு மாநிலங்களுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதை ஒன்றிய அரசு தடுக்கவேண்டும். போதை யின் பாதையிலிருந்து மாணவர் களைக் காக்க அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்துவருகிறது. போதைப்பொருள் நெட் வொர்க்கை ஒழிக்க மாநில அரசும், ஒன்றிய அரசும் இணைந்து செயல்படவேண்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/06/vaiko1-2026-01-06-11-29-23.jpg)
கலைத்துறையைச் சேர்ந் தவர்கள் பொறுப்புணர்வோடு படைப்புகளை உருவாக்கவேண் டும். குழந்தைகளை பொறுப் போடு வளர்க்க பெற்றோரை கேட்டுக்கொள்கிறேன். நமது வீட்டுப் பிள்ளைகள் வழிதவறிப் போவதை நாம் கண்காணித்து தடுக்கவேண்டும். எல்லாரும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பரப்பவேண்டும். ஒன்றிய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்கள்கூட வெறுப்பு பேச்சைப் பேசுகின்றனர். அண்மையில் நாட்டில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லாரும் அச்சத்தில் வாழும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. அன்பு செய்ய சொல்லித் தரவேண்டிய ஆன்மிகத்தை சில கும்பல் வம்பு செய்ய சொல்லித் தருகின்ற னர்''’என இந்துத்துவர்களையும், பா.ஜ.க.வினரையும் தன் விமர்சனக் கூர்முனையால் குத்திக்காட்டவும் தவறவில்லை..
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசுகை யில், "சமய நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்க இந்துத்துவ சக்திகள் முயற்சிக்கின்றன. அதைத் தடுக்கும் நோக்கில்தான் இந்த சமத்துவ நடைபயணம். முதலமைச்சர் திருச்சியில் இந்த நடைபயணத்தை தொடங்கிவைக்கிறார். இந்த நடைபயணம் 10 நாட்கள் நடைபெற்று மதுரையில் நிறைவடையும். இது ம.தி.மு.க. வின் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாகவும் அமையும். தி.மு.க. அரசுக்கு ஆதரவாகவும், சமய நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையிலும் இந்த நடைபயணத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
வடமாநிலத் தொழி லாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாகவே உள்ளனர். இருப்பினும், திருத்தணியில் நடந்த சம்பவம் தமிழ்நாட்டிற்கே அவமானத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதுபோல் இனி நடக்காமல் இருக்க தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தினாலும், முதலமைச்சர் அதைச் சமாளித்து பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்''’என, தன் பேச்சில் குறிப்பிட்டார்.
இந்த நடைபயணத்தில் பங்கேற்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ம.தி.மு.க .பொதுச்செயலாளர் வைகோ நடை பயணத்தை காங்கிரஸ் கட்சியினர் புறக் கணிப்பதாகத் தெரிவித்துள்ளனர். அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படம் உள்ளதே, காங்கிரஸ் கட்சியினர் இந்த நடைபயணத்தை புறக்கணிக்கக் காரணமென தகவல் வெளியாகியுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/06/vaiko2-2026-01-06-11-29-35.jpg)
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சியிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை. இது தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற் படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், வி.சி.க. தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்ய கட்சி பொதுச்செயலாளர் அருணாச்சலம், தி.க. பொதுச்செயலாளர் துரை.சந்திர சேகர், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, அன்பில் மகேஷ், மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வைகோவின் நடைபயணம் குறித்து கருத்து தெரிவித்த ம.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், "நடைபயணம் என்று அரசியல்வாதிகள் குறிப்பிட்டாலும், பெரும்பாலான அரசியல் வாதிகள் முழுமையாக நடைபயணம் மேற்கொள்வதில்லை. ஊருக்குள் நுழைகையில் நடைபயணமாகவும், ஊரைத் தாண்டியதும் காரை பயன்படுத்தியும் நடைபயணம் மேற்கொள்வர். ஆனால் எங்கள் தலைவரின் பயணம் என்பது ஒரு முழுமையான நடைபயணம். திருச்சியில் தொடங்கும் நடைபயணம் மதுரையில் சென்று சேரும் வரை அவர் நடந்து மட்டுமே செல்வார். எந்த இடத்திலும் காரை பயன்படுத்தாமல் செல்வார். அவர் பயணம் மேற்கொள்ளும் எல்லா இடங்களிலும் மக்கள் வரவேற்பு அளிப்பது எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது. தமிழக அரசியலில் 82 வயதில் சமத்துவத்திற்காக ஒரு நடைபயணம் செய்யும் ஒரே தலைவர் இவரையன்றி வேறு யாரும் இருக்கமுடியாது. இந்தப் பெருமை அவரை மட்டுமே சேரும்''’என்றார்.
ம.தி.மு.க.வின் மாநிலப் பொருளாளரான மு.செந்திலதிபன், "இது அவருக்கு முதல் நடைபயணமல்ல. 1986 முதல் நடைபயணம் மேற்கொண்டுவருகிறார். திருநெல்வேலி மாவட் டத்தில் மகரநெடுங்குழைகாதர் கோயிலில் கொள்ளைபோன நகைகளை மீட்கும் நோக்கத்துடன் தென்திருப்பேரையில் தொடங்கப் பட்டது. அதன்பின் 2018ஆம் ஆண்டு வரை 10 நடைபயணம் மேற்கொண்டிருக்கிறார். காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, தென்னிந்திய நதிகளை இணைக் கவும், நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்யவேண்டியும், என இதுவரை மொத்தம் 6,000 கிலோமீட்டர் நடைபயணத்தில் பங்கேற்றுள்ளார்.
இப்போதைய நடைபயணம் சமத்துவ நடைபயணம். சமய நல்லிணக்கத்திற்கும், இந்துத்துவ சக்திகளுக்கு எதிராகவும், போதை கலாச்சாரத்தை அகற்றவும், பொதுமக்களிடமும், இளைஞர் களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
நோக்கிலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அரசுக்கு வலுச்சேர்க்கும் விதமாக பரப்புரைக்காகவும் இந்த நடைபயணம் தொடங்கியிருக்கிறது. தலைவரின் இந்த முயற்சி தமிழகத்தில் போதை பழக்கத்திலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தை இளைஞர்களிடம் கொண்டுசேர்க்கும் பயணமாக அமையும்''” என்றார்.
நாள்தோறும் 15 முதல் 17 கிலோமீட்டர் பயணத்தை மேற்கொண்டு, வரும் ஜனவரி 12ல் தனது நடைபயணத்தை முடிக்கத் திட்ட மிட்டிருக்கிறார். தூரத்தைப் பொருட்படுத்தாத வைகோவின் கால்கள் மீண்டும் ஒரு பயணத்தை தொடங்கியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/06/vaiko-2026-01-06-11-29-11.jpg)