காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கியதாலும் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்க ளாக்கப்பட்டதால் அந்தப் பகுதி யிலும், நாட்டின் எல்லையிலும் பதற்றம் அதிகமாகி மோதல் வெடிக்கும் என்று எதிர்பார்க் கப்பட்ட நிலையில், பனைமரத் தில் தேள் கொட்டினால் தென்னை மரத்தில் நெரி கட்டும் என்பதுபோல, காஷ்மீர் விவ காரம் தமிழக தி.மு.க. கூட்ட ணிக்குள் மோதலை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி இருக்கிறது.

vaiko"அமித்ஷாவும் மோடியும் வைகோவை தயார் செய்து, காஷ்மீர் பிரச்சனையில் காங்கிரஸுக்கு எதிராக பேசத் தூண்டினார்கள். அதனால்தான், காஷ்மீர் பிரச்சனையோடு, ஈழப் பிரச்சனையிலும் காங்கிரஸை குற்றம்சுமத்தி பிரச்சனையை திசைதிருப்பினார் வைகோ. காங்கிரஸ் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினரான வைகோ காங்கிரஸை குற்றம்சுமத்தியது சரியா?'' என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.

அவருடைய பேச்சு பத்திரி கைகளில் வந்தவுடன், தேவையில் லாத விவகாரத்தை அழகிரி பெரி தாக்குகிறார் என்று தி.மு.க. கூட் டணிக்குள் விவாதம் தொடங் கியது. அழகிரிக்கு பதில் சொல் லாமல் வைகோ எப்படி இருப் பார் என்ற சந்தேகமும் எழுந்தது.

அந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத் தும் வகையில், அழகிரியின் பேச்சு ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோவை கொந்தளிக்கச் செய்தது. உடனே, காங்கிரஸை காய்ச்சி எடுத்து விட்டார். “""நான் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவால்தான் எம்.பி ஆனேன். ஒரு எம்.பி.க்கு 34 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தால் போதும். தி.மு.க.வில் 108 உறுப்பினர்கள் இருக்கும்போது காங்கிரஸ் வாக்களித்து நான் வென்றதாக கூறுவது தவறு. காங்கிரஸை குற்றம்சுமத்து கிறேன் என்பதால் என்னைத் திட்டிக் கொள்ளுங்கள். ஆனால், காங்கிரஸ் தயவில் எம்.பி. ஆனேன் என்று கூறாதீர்கள். காங்கிரஸ் ஆதரவில் எப்போதும் நான் நாடாளு மன்றம் சென்றதில்லை. காங்கிரஸ்காரர்கள் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த பாவிகள்'' என்று கடுமையாக பதிலளித்தார்.

Advertisment

ksalagiri

அதுமட்டுமின்றி, காஷ்மீர் பிரச்சனையில் தன்னுடைய எதிர்ப்பை பிரதமர் மோடியிடம் நேரடியாகத் தெரிவித்த தையும், நதி நீர் ஆணை யத்தால் தமிழகத்திற்கு ஏற்படும் ஆபத்தை சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்ததையும் சொல்லிவிட்டு, அதே நேரத்தில் காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்ததை கண்டித்து அக்கட்சியின் கொறடா ராஜினாமா செய்ததையும், 12 காங்கிரஸ் எம்.பி.க்கள் வாக்களிக்காமல் வெளியேறியதையும் வைகோ சுட்டிக்காட்டி, அப்படியென் றால் அவர்கள் விலை போனார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.

வைகோவின் பேட்டி, மீண்டும் கே.எஸ்.அழகிரியை ஆத்திரப்படுத்தியது. அவரும் தனது ஆத்திரத்தை செய்தி யாளர்களிடம் கடுமையாக வெளிப்படுத்தினார். ""ஒற்றை ஆளான வைகோவுக்கு மாநிலங்களவையில் பேசு வதற்கு நேரம் கொடுக்க மறுத்தார்கள். அவர் காங் கிரஸைத் தாக்கி பேசப் போகிறேன் என்று கூறிய தால்தான் அவைத்தலைவர் நேரம் ஒதுக்கினார். முக்கிய எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேசி பிரச்சனைகளை திசை திருப்ப எல்லா அரசுகளும் இப்படி ஒரு ஆளை வைத்திருக்கும். அதுதான் நடந்தது என்று எனக்குத் தெரியாதா? அமித்ஷாவையும், மோடியையும் மகிழ்விக்கும் வேலையை வைகோ செய்திருக்கிறார். ஈழப் பிரச்சனையில் பிரபாகரனுக்கு தவறான தகவல்களைச் சொல்லி, வைகோ போன்றவர்கள்தான் அவரை திசை திருப்பினார்கள்'' என்று அழகிரி ஆவேசமாக கூறினார்.

Advertisment

காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய எதிர் நடவடிக்கைகள் குறித்து 10 ஆம் தேதி தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆலோ சனைக் கூட்டம் நடைபெறும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் காங்கிரஸும் ம.தி.மு.க.வும் முட்டி மோதிக் கொண்டது, தி.மு.க.வினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிலைப்பாடுகள் குறித்து தி.மு.க.வினருக்கு நன்றாகவே தெரியும். காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராக தி.மு.க.வே பல போராட்டங்களை நடத்தியிருக்கிறது. ஆனால், அகில இந்திய அளவில் பா.ஜ.க.வின் பாசிச நட வடிக்கைகளை எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் தமிழகம் இருக்கிறது. அதற்கு காங்கிரஸ் கட்சியையும் அரவணைத்துச் செல்ல தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விரும்புகிறார். ஆனால் முக்கியமான இரண்டு கட்சிகள் மோதிக்கொள்வது கூட்ட ணிக்குள் பகையுணர்ச்சியை வளர்த்துவிடும் என்று ஸ்டாலின் கருதுகிறார். அதனால், இந்தப் பிரச்சனை எங்கே கொண்டு முடியுமோ என்ற அச்சம் தி.மு.க.வின ரிடையே எழுந்துள்ளது.

பா.ஜ.க. டைரக்ஷனில் நடைபெறும் மாநில அ.தி.மு.க. அரசாங்கத்தை தூக்கியெறிந்து தமிழகத்தின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க வேண்டியதை இரு கட்சிகளும் மறந்துவிட்டதாக அவர்கள் விமர்சிக்கிறார்கள். தி.மு.க. கூட்டணிக்குள் என்ன நடக்க வேண்டும் என்று பா.ஜ.க. காத்திருந்ததோ அது நடந்துவிடுமோ என்று மதச்சார்பற்ற கட்சிகள் கவலை அடைந்திருக்கின்றன. பா.ஜ.க. ஹேப்பியாக உள்ளது.

-ஆதனூர் சோழன்