வாச்சாத்தி வழக்கு! உண்மையை நிரூபிக்கப் போராடினேன் -சி.பி.ஐ. அதிகாரி பேட்டி

vv

ஜெயலலிதாவின் ஆட்சியில் வாச்சாத்தி கிராம மலைவாழ் பெண்களுக்கு நடந்த பாலியல் வன் கொடுமைகளை முதலில் உலகுக்கு அம்பலப் படுத்தியது நக்கீரன். சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீதியை கடந்த வாரத்தில் நிலை நிறுத்தியது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு நீதிகிடைக்க நக்கீரன் போராடியது போல, சி.பி.ஐ. விசா ரணை அதிகாரி ஜெகநாதன் தாக் கல் செய்த ஆதாரங்களும் அறிக்கை களும் காரணமாக இருந்தன. பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஜெகநாதனை அவரது இல்லத் தில் சந்தித்தோம்.

வாச்சாத்தி மலைவாழ் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி கிடைத்திருப்பதை எப்படி உணர்கிறீர் கள்?

பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், அவர்களுக்காக போராடியவர்களும் நீதி கிடைத்திருப்பதாகவே உணர்கிறேன். இந்த நீதியை பெற்றுத்தருவதில் என்னுடைய பங்கு மிக முக்கியமானது என நினைக்கிறபோது இனம் புரியாத மகிழ்ச்சி. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. அதை நிலைநிறுத்தியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

சி.பி.ஐ.க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டதும் விசாரணை அதிகாரியாக உங்களை நியமித்தது உயர்நீதிமன்றம். அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது?

தமிழகத்தில் முதன்முதலில் ஆட்சி செய்த ஜெயலலிதாவின் 1991-1996 கால கட்டம் ஒரு இருண்ட காலம்.. ஆட்சி யாளர்களுக்கும் அரசு ஊழியர் களுக்கும் அதிகார போதை தலைக் கேறியிருந்தது. அப்படிப்பட்ட சூழலில் தான், தர்மபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில், சந்தனமரக்கட்டை களை வெட்டி வீரப்பனுக்காக வாச்சாத்தி கிராமத்தினர் கடத்து கின்றனர் என்று தமிழக வனத்துறை கொடுத்த புகாரை பதிவு செய் கிறது காவல்துறை. இதனையடுத்து, 1992, ஜூன் 20-ந் தேதி வனத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் துணை யுடன் வாச்சாத்தி கிராமத்தை சுற்றி வளைக்கிறது காவல்துறை. கிராமத்தை சேர்ந்த 90 பெண்கள், 15 ஆண்கள், 28 குழந்தைகள் என 133 பேரை இழுத்து வந்து ஒரு மரத்தடியில

ஜெயலலிதாவின் ஆட்சியில் வாச்சாத்தி கிராம மலைவாழ் பெண்களுக்கு நடந்த பாலியல் வன் கொடுமைகளை முதலில் உலகுக்கு அம்பலப் படுத்தியது நக்கீரன். சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான நீதியை கடந்த வாரத்தில் நிலை நிறுத்தியது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு நீதிகிடைக்க நக்கீரன் போராடியது போல, சி.பி.ஐ. விசா ரணை அதிகாரி ஜெகநாதன் தாக் கல் செய்த ஆதாரங்களும் அறிக்கை களும் காரணமாக இருந்தன. பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஜெகநாதனை அவரது இல்லத் தில் சந்தித்தோம்.

வாச்சாத்தி மலைவாழ் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு நீதி கிடைத்திருப்பதை எப்படி உணர்கிறீர் கள்?

பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், அவர்களுக்காக போராடியவர்களும் நீதி கிடைத்திருப்பதாகவே உணர்கிறேன். இந்த நீதியை பெற்றுத்தருவதில் என்னுடைய பங்கு மிக முக்கியமானது என நினைக்கிறபோது இனம் புரியாத மகிழ்ச்சி. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. அதை நிலைநிறுத்தியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

சி.பி.ஐ.க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டதும் விசாரணை அதிகாரியாக உங்களை நியமித்தது உயர்நீதிமன்றம். அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது?

தமிழகத்தில் முதன்முதலில் ஆட்சி செய்த ஜெயலலிதாவின் 1991-1996 கால கட்டம் ஒரு இருண்ட காலம்.. ஆட்சி யாளர்களுக்கும் அரசு ஊழியர் களுக்கும் அதிகார போதை தலைக் கேறியிருந்தது. அப்படிப்பட்ட சூழலில் தான், தர்மபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில், சந்தனமரக்கட்டை களை வெட்டி வீரப்பனுக்காக வாச்சாத்தி கிராமத்தினர் கடத்து கின்றனர் என்று தமிழக வனத்துறை கொடுத்த புகாரை பதிவு செய் கிறது காவல்துறை. இதனையடுத்து, 1992, ஜூன் 20-ந் தேதி வனத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகளின் துணை யுடன் வாச்சாத்தி கிராமத்தை சுற்றி வளைக்கிறது காவல்துறை. கிராமத்தை சேர்ந்த 90 பெண்கள், 15 ஆண்கள், 28 குழந்தைகள் என 133 பேரை இழுத்து வந்து ஒரு மரத்தடியில் நிறுத்தி விசாரிக்கின்றனர். அவர்கள் மீது காவல்துறை, வனத்துறை, வரு வாய்த்துறை ஆகிய 3 தரப்பினரும் ஜீரணிக்க முடி யாத அளவுக்கு வன்முறைகளை பிரயோகிக்கின்ற னர். இதன் உச்சகட்டமாக, ஒரு சிறுமி, ஒரு கர்ப் பிணி உட்பட 18 பெண்களை அருகிலிருந்த ஏரிக் கரைக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்து கின்றனர். நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கும் அந்த சம்பவம் வெளி உலகுக்குத் தெரிந்தபோது இந்தியாவே அதிர்ச்சியடைந்தது.

சி.பி.ஐ.க்கு இந்த வழக்கு எதன் அடிப்படையில் மாற்றப்பட்டது?

வாச்சாத்தியின் கொடூரத்தை முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன் பத்திரிகைதான். அதன்பிறகே எல்லா பத்திரிகைகளும் எழுதின. அந்த சூழலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மலைவாழ் மக்கள் சங்கம் புகார் தெரிவித்தது. தி.மு.க. தலைவர் கலைஞர் முதல் குரல் எழுப்பிய துடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணமும் அறிவித்தார். பெண்கள் அமைப்புகளும் எதிர்க் கட்சிகளும் போராடினர். அன்றைக்கிருந்த ஜெய லலிதா தலைமையிலான தமிழக அரசு, புகாரை பதிவு செய்யவே மறுத்தது. ஒத்துழைக்கவும் இல்லை. தடைகள் நிறைய ஏற்படுத்தினர். பாதிக்கப் பட்டவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறை யிட்டபோதுதான், வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்படி வழக்கு உயர்நீதிமன்றத்துக்கு வந்த போது, தமிழக அரசு ஒத்துழைக்காத நிலையில் தான் 1995-ல் சி.பி.ஐ.க்கு இந்த வழக்கை மாற்றியதுடன் சி.பி.ஐ.யில் டி.எஸ்.பி.யாக இருந்த என்னை விசாரணை அதிகாரியாக நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

விசாரணையில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

இந்த வழக்கில் வனத்துறை அதிகாரிகள் 155 பேர், காவல்துறை அதிகாரிகள் 108 பேர், வருவாய்த்துறை அதிகாரிகள் 6 பேர் என 269 பேர் மீது பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப் பட்டிருந்தது. மூன்று தரப்புமே அதிகார வர்க்கம். இதனால் நிறைய சவால்களை எதிர்கொண்டேன். பாதிக்கப்பட்ட பெண்களையும் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளையும் முதலில் அடையாளம் காண வேண்டும்; அதன் பிறகுதான் குற்றம் நடந்ததா? இல்லையா? என நிரூ பிக்க வேண்டும். அந்த கிராமத்தில் 4, 5 நாட்கள் தங்கி, பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டறிந்து விட்டேன். அதேசமயம், குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகளை எப்படி கண்டறிவது? வாச்சாத்தி கிராமத்துக்கு தேடுதல் வேட்டை என்ற பேரில் விசாரிக்கச் சென்றவர்கள் யார் யார்? என்பதை சம்பந்தப்பட்ட 3 துறைகளிலும் கேட்டேன். அவ்வளவு ஈசியாக தரவில்லை. ஒரு கட்டத்தில் அவர்களின் பட்டியலை தந்தனர். அதன்படி நான் எடுத்த லிஸ்ட் தான் அந்த 269 பேர். கற்பழிப்பு சம்பவம் 1992-ல் நடந்தது. மூன்று வருடம் கழித்துத்தான் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. மூன்று வருடத்துக்கு முன்பு நடந்த கற்பழிப்பு சம்பவத்தை எப்படி நிரூபிப்பது? அதை நிரூபிப்பது சவாலாகவே இருந்தது.

சவால்களை எப்படி எதிர்கொண்டீர்கள்? எப்படி நிரூபித்தீர்கள்?

அடையாள அணிவகுப்பு நடத்த கோர்ட்டில் அனுமதி பெற்றேன். அதன்படி சேலம் சிறையில் அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைக்காததால் அணிவகுப்பு 3 முறை தள்ளிவைக்கப்பட்டது. சி.பி.ஐ. தரப்பிலிருந்தும் எனக்கு எந்த ஒத்துழைப் பும் பாதுகாப்பும் கிடைக்கவில்லை. மூன்றாவது முறை அணிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்திருந்த போது, அணிவகுப்பு நடத்தும் நீதிபதியையும் என்னையும் தாக்குவதற்கு முயற்சித்தனர். காதுபடவே மிரட்டினார்கள். இதனால் நீதிபதியை ஒரு காரில் ஏற்றி அனுப்பிவிட்டு நானும் எஸ்கேப் ஆகி சென்னைக்கு வந்து எங்கள் சி.பி.ஐ. அதிகாரிகளிடம், "எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை; மிரட்டல் அதிகமாக வருகிறது' என புகார் கொடுத்தேன். அவர்கள் கண்டுகொள்ள வில்லை. மிரட்டல் வருவது குறித்து கோர்ட்டில் முறையிட்டேன். "அடையாள அணிவகுப்பில் கலந்துகொள்ள வேண்டிய 1,500 பேரும் ஆஜராக வேண்டும்; உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என உயர்நீதிமன்றம் டைரக்ஷன் கொடுத்தது. அதன்படி, 1995, செப்டம்பர் 15-ந் தேதி சேலம் சிறையில் அணிவகுப்பு நடந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் 18 பேரையும் முதல்நாளே சேலத்துக்கு ரகசியமாக வரவழைத்து ஒரு வீட்டில் தங்கவைத்து, அவர்களுக்கு வேட்டி-சட்டை வாங்கிக் கொடுத் திருந்தேன்.

பாதிக்கப்பட்ட பெண்களை ஆண் வேடமிட்டு சிறை வாசலுக்கு மிகுந்த சிரமத்துடன் அழைத்து வந்து, வாசலில் வேட்டியையும் சட்டையையும் எடுத்துவிட்டு அதன்பிறகு தங்களின் சுய அடையாளத்தில் அவர்களை உள்ளே அனுப்பி வைத்தேன். ஊத்தங்கரை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் பிரேம் குமார்தான் அணிவகுப்பை நடத்தினார். 3 நாள் அடையாள அணிவகுப்பு நடந்தது. மிகச்சரியாக 269 பேரையும் அடையாளம் காட்டினார்கள் பாதிக்கப்பட்ட பெண்கள். எப்படி யெல்லாமோ மாற்றி மாற்றி நிற்க வைத்தபோதும் அந்த மிருகங்களை சரியாக அடையாளப்படுத்தினர் வாச்சாத்தி பெண்கள். இதனையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஆண்மைத் தன்மையை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் கோர்ட்டில் அந்த மிருகங்கள் தப்பித்துவிடும் என்பதால் 269 பேருக்கும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினேன். அனைவரும் ஆண்மைத்தன்மையுடன் இருந்தனர். அதற்கான சான்றிதழை பெற்றேன். இது தவிர, வனத்துறை யும், காவல்துறையும் குற்றம்சாட்டப் பட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஜெயராணி என்ற 8 மாத கர்ப்பிணி பெண்ணும், 13 வயது சிறுமி ஒரு வரும், மாற்றுத்திறனாளி ஒருவரும் இருந்தனர். இவர்களெல்லாம் எப்படி சித்தேரி மலைக்குச் சென்று சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியிருக்க முடியும்? கட்டைகளைப் பதுக்க முடியும்? ஆக, இதெல்லாம் வனத்துறையும் போலீசும் ஜோடித்த பொய் வழக்கு என்பதற்கான ஆதாரங்களாக இருந்தன. இப்படி ஒவ்வொரு அடிப்படை விசயத்தையும் ஆராய்ந்து குற்றவாளிகள் எந்த ஒரு சிறு துரும்பைப் பயன்படுத்தியும் தப்பித்துவிடக் கூடாது எனத் திட்டமிட்டு, ஆதாரங்களை சேகரித்து நடந்தது பாலியல் வன்கொடுமைதான் என்பதையும், வாச்சாத்தி மக்கள் மீது போடப்பட்டது பொய் வழக்கு என்பதையும் நிரூபிக்கும் வகையில் 324 டாகுமெண்டுகளுடன், கோவை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை 23.04.1996-ல் தாக்கல் செய்தேன். அதன்பிறகு தர்மபுரி நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. நான் தாக்கல் செய்த ஆவணங்கள், அறிக்கையின்படி விசாரணை நடந்தது. 269 பேரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தர்மபுரி முதன்மை நீதிமன்றம் 2011லில் தீர்ப்பளித்த போது, 269 பேரில் அன்றைக்கு உயிருடன் இருந்த 215 பேருக்கும் தண்டனை கிடைத்தது.

விசாரணையின்போது உங்கள் அறிக்கை தவறானது என குற்றவாளிகள் தரப்பில் மறுக்கவில்லையா?

இந்த வழக்கில் மொத்தம் 74 சாட்சிகள். நான் 75-வது சாட்சி. என்னை மடக்கி, எனது அறிக்கை தவறானது என நிரூபிக்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தன. ஆனால், ஒவ்வொன்றையும் உடைத்தேன். எனது புலனாய்வும் நான் கொடுத்த ஆதாரங்களும் உண்மையானவை என அழுத்தமாக நிரூபித்தேன். விசாரணையின்போது, 269 பேரும் என்னை ஆபாசமாக, அசிங்கமாகத் திட்டினார்கள்; மிரட்டினார்கள். அதற்கு எந்த ரியாக்சனையும் காட்டாமல், நீதி கிடைக்க வேண்டும் என்பதை மட்டுமே மனதில் தாங்கியிருந்தேன்.

வாச்சாத்தி வழக்கில் நீதி கிடைக்கச் செய்த உங்களுக்கு அரசின் மரியாதை கிடைத்ததா?

சி.பி.ஐ.யில் 33 வருடம் சர்வீஸ் முடித்து அடிசனல் எஸ்.பி.யாக ஓய்வு பெற்றேன். நான் விசாரித்த பல வழக்குகள் சவாலாக இருந்தவை. அதில் மிகச் சவாலாக இருந்தது வாச்சாத்தி வழக்குதான். இந்த வழக்கை நேர்மையாகவும் எவ்வித சமரசமும் இல்லாமல் விசாரித்து உண்மையை நிரூபித்ததற்காக என்னை ஓப்பன் கோர்ட்டிலேயே நீதிபதி பாராட்டினார். ஆனால், சி.பி.ஐ. எனக்கு எந்த பாராட்டுதலையும் தெரிவிக்கவில்லை. எந்த அவார்டும் கொடுக்கப்படவில்லை. தமிழக அரசிடமிருந்தும் சரி, எங்கள் சி.பி.ஐ. தரப்பிலிருந்தும் சரி எந்த ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. எனக்கு முறையாக கிடைக்க வேண்டிய ஓய்வூதியத் தொகை கிடைக்காமல், குறைவாகத்தான் கிடைத்து வருகிறது. எனக்கான நீதி கேட்டு கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளேன். பல ஆண்டுகளாக அந்த வழக்கு நிலுவையிலேயே இருந்துவருகிறது.

-சந்திப்பு : இரா.இளையசெல்வன்

nkn111023
இதையும் படியுங்கள்
Subscribe