Advertisment

வாச்சாத்தி வழக்கு! கல்வெட்டில் பொறிக்கவேண்டிய சாதனை!

ss

கில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக, வாச்சாத்தி வழக்கின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்களுக்கு பாரிமுனையி லுள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் அக்டோபர் 20-ஆம் தேதியன்று பாராட்டு விழா நடைபெற்றது.

Advertisment

வழக்கறிஞர் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் பி.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்த இவ்விழாவில், டி.கே. ரங்கராஜன், மூத்த வழக்கறிஞர் வைகை, ஏ.கோதண்டம், சிகரம் ச.செந்தில்நாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Adv

dd

விழாவில் பேசிய தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ், “"தமிழக மக்களுக்கு நீதித்துறை மீதும் வழக்கறிஞர்கள் மீதும் நம்பிக்கை வந்திருக்கிறதுன்னா, கோகுல்ராஜ் வழக்கு, வாச்சாத்தி வழக்குத் தீர்ப்பினால்தான். வாச்சாத்தி வழக்கு கிட்டத்தட்ட 91-லிருந்து நடந்துக்கிட்டிருக்கு. இந்த வழக்கை எடுத்துச்சென்ற அன்றைய எம்.எல்.ஏ. அண்ணாமலை அவர்களுக் கும், கம்யூனிஸ்ட் வழக்கறிஞர் தோழர்கள், பாதிக் கப்பட்ட மலைவாழ் பெண்களுக்காக 32 வருடமாக போராடிய அத்தனை வழக்கறிஞர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பிரச்சனையை வெளி யில் தெரிவித்த எம்.எல்.ஏ., இந்த நிகழ்வை பத்திரிகை மூலமாக மக்களுக்குக் கொண்டுசென்ற நக்கீரன் கோபால், விசாரணை அதி காரி ஜெகன்நாதன், நீதிபதிகள் குமரகுரு, வேல்முருகன், உச்சநீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் வரை நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 600 பேர் ஒரு கொள்ளைக்கூட்டமா உள்ளே சென்று வாச்சாத்தி மக்களை அடிச்சு நொறுக்கித் துன்புறுத்தி, ஏரிக்கரைக்குக் கொண்டுசென்று 13 வயசுப் பெண் பிள்ளை முதல் கர்ப்பிணி வரை பாலியல்ரீதியாக வன்புணர்வு செய்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு அவர்களது கோரமுகம் இருந்திருக்கு. அவர்கள் சமைத்துக்கொடுத்த உணவைச் சாப்பிட்டுவிட்டு அவர்களை மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள்.

அத்தனை வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளை நீதிமன்றத்துல நிறுத்தி, நீ செய்தது தப்புன்னு நிரூபிச்சிருக்காங்கன்னா, 30 வருஷம் போராடிய அந்த வழக்கறிஞர்களுக்காக, பாராட்டு விழா மட்டும்போதாது… அவர்களது சாதனை கல்வெட்டில் பொறிக்கப்படவேண்டும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள் தொடரணும். வழக்கறிஞர் ப.பா மோகன், ஒரு இன்டர்வியூவுல சொல்லியிருப்பார், ‘அந்த நேரத்துல பொறுப்பிலிருந்த காவல்துறை உயரதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மட்டுமில்லாம அப்போதைய அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இது சரியான தீர்ப்பாக இருக்கும்’என்று சொல்லியிருப்பார். அதற்கான முயற்சியை நமது தோழர்கள் எடுப்பார்கள்''’என்றார்.

nkn011123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe