மிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலை வரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹி ருல்லா வழிகாட்டுதலின்படி, அதன் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெ.ஹாஜாகனி ஒருங்கிணைப்பில் பல்வேறு பணிகள் நடந்துவருகின்றன. அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவற்றின் தேவை கருதி கணக்கில் அடங்காத ஆக்ஸி ஜன் படுக்கைகளும் வென்டி லேட்டர் படுக்கைகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப் பட்டிருக்கின்றன.

இந்நிலையில், நமது நக்கீரனில் வந்த "உயிர் பயத்தில் பிரிந்து செல்லும் உறவுகள்' கட்டுரையில் அதே பெயரில் செயல்படுவோர் பற்றி வெளியான செய்தி, அமைப் பினரையும் வாசகர்களையும் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது. எனவே, இது குறித்த விளக்கத் துடன், தமிழகம் முழுக்க த.முமு.க. சார்பில் மாவட்ட வாரியாக என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை விவரித்தனர் த.மு.மு.க. மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர்.

“"வேலூர் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், ஆம்பூர், குடியாத்தம், லால்பேட்டை, ஆயங்குடி, முத்துபேட்டை உட்பட பல்வேறு ஊர்களில் 50-க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கியிருக் கிறோம். ஈரோடு மாவட்டத்தில், தானியங்கி ஆக்ஸிஜன் செறி வூட்டிகள் 4 வாங்கி, அவற்றை 4 அவசர ஊர்தியில் வைத்து மக்கள் உயிர் காக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம். மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகளின் அறுவை சிகிச்சை மற்றும் பல அவசர சிகிச்சைக்காக, கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் 300 யூனிட்டுக்கு மேல் எங்கள் தோழர்கள் ரத்த தானம் செய்திருக்கிறார்கள்.

tmmk

Advertisment

அதுபோலவே தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் கொரோனா தடுப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதை யறிந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அங்குள்ள த.மு.மு.க நிர்வாகி களை நேரில் பாராட்டினார். இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் எங்கள் தோழர்கள் தன்னார்வலர்களாக பணியாற்றி வருகின்றனர். மேலும் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கொரோனா தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு, ஹோமியோபதி மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச் சைகள் மேற்கொள்ளப்படு கின்றன. தமிழ்நாட்டில் மட்டு மல்லாது புதுச்சேரி மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சி யாக கிருமிநாசினி தெளிக்கப் பட்டு வருகிறது.

இரண்டு மாதத்தில் மட்டும் 3000 உடல்களை முன்னின்று அடக்கம் செய் திருக்கிறார்கள் எங்கள் தன்னார் வலர்கள். உறவினர்களே தூரத் தில் நின்றாலும் கொரோ னாவால் இறந்தவர்களின் உடலை, உரிய வகையில் அடக்கம் செய்துவருகிறோம். த.மு.மு.க.வின் மருத்துவ சேவை அணியினரும் பரவலாக களத் தில் தங்களை அர்ப்பணித்தபடி செயல்பட்டுக்கொண்டு இருக்கி றார்கள். எங்கள் முயற்சியில் பரவலாக 165 அவசர ஊர்திகள் இயங்கிவரும் நிலையிலும், மேலும் பல மாவட்டங்களுக்கு தேவையின் அடிப்படையில் அவசர ஊர்தி வாங்கப்பட்டு, அவற்றையும் அனைத்து சமு தாய மக்களுக்காக அர்ப்பணித் திருக்கிறோம்''’என்கிறார்கள்.

-கீரன்