தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில்... மதுரை தி.மு.க. பிரமுகர் ஒருவர் மீதே, கந்துவட்டிப் புகாரை எழுப்பியிருக்கிறார் அங்குள்ள தொழிலதிபர் ஒருவர்.
மதுரை தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியின் வலதுகரமாக இருப்பவர் கொடி சந்திரசேகர். அவர் மீதுதான் இப்படியொரு அதிரடிப் புகார் எழுந்துள்ளது. புகாரை எழுப்பியிருப்பவர், தென்மாவட்டத்தின் ’வசந்த் அன் கோ’ என்று வர்ணிக்கப்படும் “பெனிட் & கோ’ என்ற நிறுவனத்தின் அதிபரான பெனிட்கரன்.
அவர் நம்மிடம்...’"நானும் அடிப்படையில் பாரம்பரியமான தி.மு.க. குடும்பத்தை சேர்ந்தவன்தான். 2015-ல் என் நிறுவனத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று எண்ணியிருந்த நிலையில்... கொடி சந்திரசேகர், கட்சி விழா ஒன்றுக்கு நன்கொடை வாங்க வந்தார். அப்போதுதான் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போ
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில்... மதுரை தி.மு.க. பிரமுகர் ஒருவர் மீதே, கந்துவட்டிப் புகாரை எழுப்பியிருக்கிறார் அங்குள்ள தொழிலதிபர் ஒருவர்.
மதுரை தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியின் வலதுகரமாக இருப்பவர் கொடி சந்திரசேகர். அவர் மீதுதான் இப்படியொரு அதிரடிப் புகார் எழுந்துள்ளது. புகாரை எழுப்பியிருப்பவர், தென்மாவட்டத்தின் ’வசந்த் அன் கோ’ என்று வர்ணிக்கப்படும் “பெனிட் & கோ’ என்ற நிறுவனத்தின் அதிபரான பெனிட்கரன்.
அவர் நம்மிடம்...’"நானும் அடிப்படையில் பாரம்பரியமான தி.மு.க. குடும்பத்தை சேர்ந்தவன்தான். 2015-ல் என் நிறுவனத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று எண்ணியிருந்த நிலையில்... கொடி சந்திரசேகர், கட்சி விழா ஒன்றுக்கு நன்கொடை வாங்க வந்தார். அப்போதுதான் அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவ ராகவே வலுக் கட்டாயமாக என்னிடம், "அண்ணாச்சி மதுரையில் உங்க கடை நன்றாக ஓடுகிறது. வசந்த் அன் கோ அண் ணாச்சி மாதிரி உங்க நிறுவனக் கிளைகளை அதிகப்படுத்துங்கள். உங்களுக்குப் பணம் வேண்டுமென்றால் நான் தருகிறேன்' என்று, 49 லட்ச ரூபாயைக் கடனாகக் கொடுத்தார். நானும் இவ்வளவு அக்கறை யாக சொல் கிறாரே என்று அதை வாங்கிக் கொண்டேன். அதன் பின்பு, அதற்கு வட்டியாக மட்டுமே இன்று வரை 10 கோடி ரூபாய்வரை வாங்கிவிட்டார்.
அவருக்கு வட்டி கொடுக்க முடியா மல், இப்போது என் 10 கிளைகளையும் மூடிவிட்டேன். இதற்கிடையில் மதுரைக்கு அருகில் காரியாப்பட்டி அருகே உள்ள குரண்டியில் இருக்கும் 16 ஏக்கர் நிலத்தை பிளாட்டுகளாக பிரித்து விற்கலாம் என்று இருந்தபோது, மேலும் ஒரு கோடி வரை வட்டி கொடுக்கவேண்டும். இல்லையென்றல் இந்த பிஸ்னசிலும் தன்னை பார்ட்னராக இணைத்துக் கொள்ளும்படி பிரஷர் கொடுத்தார். சரி என்று அவரையும் சேர்த்து பதியும்போது, அது அப்ரூவல் இல்லாததால் பெண்டிங் பத்திரம் போட்டுவிட்டனர். எனவே இது கிடப்பில் இருந்தபோது 2020-ல் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்கலாம் என்று ஏற்பாடுகளைச் செய்தபோது, எனக்குத் தெரியாமலேயே என் கையெழுத்தை போட்டு, அந்த இடத்திற்கு அவர் பெயரில் தனிப் பட்டா வாங்கிவிட்டார். ஆனால் இதற்கு முன்னரே, என்னிடம் நேரில் உறுதிப்படுத்தாமல் எந்தவிதப் பதிவும் செய்யக்கூடாது என்று பத்திரப் பதிவளர் ரமேஷுக்கு நான் நோட்டீஸ் அனுப்பியிருந்தும், அதை யெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் பெயரில் பதிந்துள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாநிலப் பொறுப்பில் உள்ள நண்பர் மூலமாக சந்திரசேகரிடம் பேசிப் பார்த்தேன். ஒன்றும் ஆகவில்லை. நியாயம் கேட்க யார் வந்தாலும் அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். மேலும் இப்போது என் மீது என் பழைய காலாவதியான காசோலையை வைத்துக்கொண்டு, "ஒழுங்கா எல்லாத்தையும் எழுதிக்கொடுத்துட்டு ஓடிப்போயிரு. இல்லாட்டி நடக்கிறதே வேற'ன்னு மிரட்ட ஆரம்பித்துவிட்டார். இவரால் நான் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். அவர் இப்போதும் மிரட்டிக்கொண்டேயிஇருக்கிறார்... எனக்கு பயமாக இருக்கிறது.
தற்போது சட்டமன்றத்தில் நமது முதல்வர் ’தப்பு யார் செய்தாலும், அதுவும் தி.மு.க.வினரே செய்தாலும் தண்டனை நிச்சயம். இது பெரியார், அண்ணா, கலைஞர் மீது சத்தியம்னு சொன்னதைப் பார்த்ததும் எனக்கு ஒரு தைரியம் வந்தது. என் சொத்து, என் நிறுவனம் எல்லாம் என் கையைவிட்டுப் போனாலும் பரவாயில்லை. எனக்கும் என் குடும்த்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும்''’என்று கண்ணீர் விட்டார்.
சமாதானம் பேச முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விளவன் கோதையோ, "ஆமாம் கொடி சந்திரசேகருக்கும் பெனிட்கரனுக்கும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி வட்டிமேல் வட்டி போட்டு, அவரைத் திவால் ஆக்கிவிட்டார் கொடி. நான் இந்த விவகாரத்தில் இருந்து விலகிக் கொண்டேன்''’என்று முடித்துக்கொண்டார்.
இது குறித்து தி.மு.க. பிரமுகரான கொடி சந்திரசேகரிடமே நாம் கேட்டபோது... “"அந்த பெனிட்கரன் என்னிடம் வட்டிக்கு ஒன்றரை கோடி வாங்கினார். கடந்த 7 வருடமாகத் திருப்பிக் கொடுக்கவில்லை. நான் யாரையும் மிரட்டவில்லை. எந்தப் பட்டாவும் மாற்றவில்லை. அவர் சொல்வது எல்லாம் பொய். இனி எதுவென்றாலும் கோர்ட்டில் பார்த்துக்கொள்ளலாம்''’என்று முடித்துக்கொண்டார்.
முதல்வர் சொன்னபடி, பெனிட்டுக்கு நீதி கிடைக்குமா?