எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகள், உப்பு நகர் மாவட்டத்தையே வெடவெடக்க வைத்திருக்கிறது. பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அனுபவிக்கின்ற டார்ச்சர்களை விசாரிக்க, விசாரிக்க கிளம்பிய விபரீதங்கள் உறைய வைப்பவை.
பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு பயில்கிற மூன்று மாணவிகள், கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் மதன்குமார் என்பவரால் தொடர் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களில் ஒரு மாணவி கல்லூரி விடுதியில் தங்கி பயின்றுவருபவர். மற்ற இரண்டு மாணவிகளும் வீட்டிலிருந்து வந்து செல்பவர்கள். அதில் 17 வயதுடைய ஒரு மாணவி, அந்தப் பகுதியிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவராம். எப்பவுமே வீட்டில் கலகலப்பாயிருக்கிற முகாம் மாணவி, பேராசிரியர் மதன்குமாரின் தொடர் பாலியல் தொந்தரவால் மனம்நொந்து கலகலப்பின்றி சோர்வான நிலையில், சரியாகச் சாப்பிடாமல் வீட்டில் அமைதியாய் இருந்திருக்கிறாராம். அம்மாணவியின் மாறுபாட்டை தற்செயலாகக் கவனித்த அவளின் பெற்றோர்,
எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவிகளுக்கு நடந்த பாலியல் தொந்தரவுகள், உப்பு நகர் மாவட்டத்தையே வெடவெடக்க வைத்திருக்கிறது. பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அனுபவிக்கின்ற டார்ச்சர்களை விசாரிக்க, விசாரிக்க கிளம்பிய விபரீதங்கள் உறைய வைப்பவை.
பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு பயில்கிற மூன்று மாணவிகள், கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் மதன்குமார் என்பவரால் தொடர் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவர்களில் ஒரு மாணவி கல்லூரி விடுதியில் தங்கி பயின்றுவருபவர். மற்ற இரண்டு மாணவிகளும் வீட்டிலிருந்து வந்து செல்பவர்கள். அதில் 17 வயதுடைய ஒரு மாணவி, அந்தப் பகுதியிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவராம். எப்பவுமே வீட்டில் கலகலப்பாயிருக்கிற முகாம் மாணவி, பேராசிரியர் மதன்குமாரின் தொடர் பாலியல் தொந்தரவால் மனம்நொந்து கலகலப்பின்றி சோர்வான நிலையில், சரியாகச் சாப்பிடாமல் வீட்டில் அமைதியாய் இருந்திருக்கிறாராம். அம்மாணவியின் மாறுபாட்டை தற்செயலாகக் கவனித்த அவளின் பெற்றோர், என்ன ஏதென்று ஆதரவாய் விசாரித்தவர்கள், என்ன நடந்தாலும் தயங்காமல் சொல் என்று மகளை தைரியப்படுத்தி யிருக்கிறார்கள். அதையடுத்தே கண்ணீர் முட்ட, கல்லூரியில் பேராசிரியர் தன்னிடம் பாலியல்ரீதி யாக தொந்தரவு கொடுத்ததை விவரித்திருக்கிறார்.
"கல்லூரி லேப்பிலிருந்தபோது வந்த பேராசிரியர் மதன்குமார், என்னிடம் மோசமாக நடந்து கொண்டதும் எனக்கு உசுரு போன மாதிரியிருந் திச்சு. பின் கல்லூரி வளாகத்தில் தனியே இருக்கிற அவரது துறையின் அறைக்கு வரச்சொல்லி மிரட்டுவார். அங்க போனதும் என்னிடம் பாலியல் தொந்தரவு சீண்டல்களில் ஈடுபடுவார். வெளிய சொல்ல முடியாத சம்பவங்கள்லாம் நடந்திருக்கு. நடந்தத வெளிய சொன்னா நீ இந்த கல்லூரியிலயே படிக்க முடியாதபடி பண்ணிருவேன். வெளியேத்தி ருவேன்னு மிரட்டுவார். நா, என்ன பண்ணுவேன்... படிப்பாச்சே. அவரு தொந்தரவ தாங்கிக்கிட்டேன். ஆனா ரெண்டு மாசமா தொடர்ச்சியா என்ட்ட இப்படி நடந்திட்டிருந்தார். என்ட்ட மட்டுமில்ல, என்னோட வகுப்புல ரெண்டு மாணவிகள்ட்டயும் இப்படித்தான் பாலியல் டார்ச்சர் குடுத்திருக்கிறார்'' என்று சொல்ல... பதறிப்போன பெற்றோர், உடனடியாக இதனைப் புகாராக கல்லூரி முதல்வர் பேபி லதாவிடம் கொடுத்திருக்கிறார்கள்.
அதனை விசாரிக்க வேண்டிய முதல் வரோ, "பிரச்சனை வேண்டாம், பிள்ளை யோட படிப்பு கெட்டுப் போயிரும், விட்டுருங்க. அவங்க பெரிய ஆளுங்க... அவர் பிரச்சினை பண்ணுவார். நீங்க இலங்கைத் தமிழர் முகாம்ல இருக்க முடியாது. அதனால விட்டுருங்க'' என்று சொன்னதும் அதிர்ந்த பெற்றோர்களோ, "விசாரிச்சு நடவடிக்கை எடுத்தாகணும்' என உறுதியாய் சொல்லியிருக்கிறார் கள். அதே சமயம், அந்த மதன்குமாரால் பாதிக்கப் பட்ட மற்ற இரண்டு மாணவிகளும் முதல்வரை சந்தித்து தங்களுக்கு நடந்த பாலியல் டார்ச்சர் களையும் தெரிவித்திருக்கிறார்கள். விவகாரம் பெரிதானதையடுத்தே முதல்வர், மாணவிகளின் புகார்களை கல்லூரியின் விசாகா கமிட்டியின் விசாரணைக்கு அனுப்பியிருக்கிறார்.
ஆனால் கல்லூரியின் விசாரணை கமிட்டி யோ, முதல்வரைவிட பலமாக விபூதியடித்திருக்கிற தாம். மூன்று மாணவிகளிடமும் விசாரணையை நடத்திய கமிட்டி, "புகார் வேண்டாம், கல்லூரியின் பெயர் கெட்டுரும். ஏற்கெனவே சென்னை பாலிடெக்னிக்கில் நடந்த இதுபோன்ற சம்பவத்தால் பெரிய பிரச்சினையானது. அசெம்ப்ளி வேற நடந்திட்டிருக்கு... வேண்டாம் விட்டுருவோம்" என்றிருக்கிறார்களாம். விசாரணையின்போது, பேராசிரியர் மதன்குமாரால் தங்களுக்குத் தரப்பட்ட பாலியல் டார்ச்சர்களை மாணவிகள் அப்பட்டமாக முழுக்க விவரித்தது முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
தொடர்ந்து மெம்பர்களோ, "கேட்டா அப்டிச் சொல்லாதீக... மாத்திச் சொல்லணும்'' என்று மாணவிகளிடம் வற்புறுத்தியிருக்கிறார்களாம். இதனிடையே விசாரணை போகும் போக்கை ஆரம்பத்திலிருந்தே கவனித்துவந்த கமிட்டியின் மெம்பர் ஒருவரோ, தன்னிடம் கமிட்டி தயாரித்து நீட்டிய விசாரணை ரிப்போர்ட்டில் கையெழுத்திட முடியாது என்று மறுத்ததோடு, "உங்களின் அறிக்கை ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. நீங்கள் குற்றவாளிக்கு ஆதரவாக முடிக்கிறீர்கள். பாதிக்கப்பட்ட மாணவிகளின் எதிர்காலத்தை, நலனைப் பார்க்கல'' என்று ஓங்கிச் சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறாராம்.
இதையடுத்தே இந்த சம்பவம் நகரின் முக்கிய மான அந்த சமூகநல ஆர்வலரான புள்ளிக்குத் தெரியவர... அதிர்ச்சியானவர், உடனே தாமதிக்கா மல் மாவட்ட கலெக்டரான இளம்பகவத்திடம் தெரிவித்திருக்கிறார். கலெக்டரின் தலையீட்டிற்குப் பிறகே கல்லூரிக்குள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் நுழைந்திருக் கிறார்கள். மாணவிகளிடம் விசாரணை நடத்திய மகளிர் காவல் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மாணவி கள் மற்றும் அந்த பேராசிரியரையும் தங்கள் கஸ் டடிக்குள் கொண்டுவந்தனர். அதன்பின் அவர்களி டம் விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.
விசாரணைக்குப் பின்பு பேராசிரியர் மதன்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, மாணவிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இச்சம்பவத்திற்குப் பிறகே கல்லூரியில் தொடர்சம்பவமாகிவிட்ட இந்த பாலியல் சீண்டல்கள் வெளிவரத் தொடங்கி அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கின்றன.
இக்கல்லூரியில் மாணவிகளுக்கு ஏற்பட்ட தொடர் பாலியல் சீண்டல் புகார்களே, ஆயிரம் மாணவிகளுக்கு மேல் பயின்ற இக்கல்லூரியில் தற்போது 292 மாணவிகள் மட்டுமே பயில்வதற்கான காரணமென்றும், தற்போது இங்கே பயிலும் மாணவி கள் பெரும்பாலும் சமூகத்தில் அடித்தட்டு வர்க் கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.
தற்போது மாணவிகளுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் விவகாரம் சீரியஸான நிலையில், கொதித்துப்போன கல்லூரி மாணவிகள், குற்றச் சாட்டு குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரியும், நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-ப.இராம்குமார்