யாதவர்களின் எழுச்சி மாநாடு! ராஜகண்ணப்பனுக்கு எதிராக கொந்தளிப்பு!

cc

ரசியல் அதிகாரத்தில் யாதவர்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் நடந்த தமிழ்நாடு யாதவ மகாசபையின் எழுச்சி மாநாட்டை தடுக்க பல்வேறு சூழ்ச்சிகள் செய்ததாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளரும் பிரபல கல்வியாளருமான நாசே ராமச்சந்திரனை தலைவராகக் கொண்டு இயங்கிவருகிறது தமிழ்நாடு யாதவ மகாசபை.

ff

சுமார் 50 ஆண்டு காலம் நேரடி அரசியலில் இருந்துவரும் நாசே ராமச்சந்திரன், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் யாதவ மக்கள் உயர வேண்டும் என்பதற்காக இலவச ஐ.ஏ.எஸ். அகாடமி, நீட் கோச்சிங் சென்டர் ஆகியவைகளை நடத்திவருகிறார்.

நாசே என்கிற நிறுவனத்தின் மூலம் இது வரை 5000-கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு முகாம் களை நடத்தி முடித்திருக்கிறார் நாசே ராமச்சந்தி ரன். இவரால் உருவாக்கப்பட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான யாதவ சமூக இளைஞர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில்தான், மகாசபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் நாசே ராமச்சந்திரன். அவரது தலைமையில், கடந்த 2

ரசியல் அதிகாரத்தில் யாதவர்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சியில் நடந்த தமிழ்நாடு யாதவ மகாசபையின் எழுச்சி மாநாட்டை தடுக்க பல்வேறு சூழ்ச்சிகள் செய்ததாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொருளாளரும் பிரபல கல்வியாளருமான நாசே ராமச்சந்திரனை தலைவராகக் கொண்டு இயங்கிவருகிறது தமிழ்நாடு யாதவ மகாசபை.

ff

சுமார் 50 ஆண்டு காலம் நேரடி அரசியலில் இருந்துவரும் நாசே ராமச்சந்திரன், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் யாதவ மக்கள் உயர வேண்டும் என்பதற்காக இலவச ஐ.ஏ.எஸ். அகாடமி, நீட் கோச்சிங் சென்டர் ஆகியவைகளை நடத்திவருகிறார்.

நாசே என்கிற நிறுவனத்தின் மூலம் இது வரை 5000-கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு முகாம் களை நடத்தி முடித்திருக்கிறார் நாசே ராமச்சந்தி ரன். இவரால் உருவாக்கப்பட்ட 5 லட்சத்துக்கும் அதிகமான யாதவ சமூக இளைஞர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இந்த நிலையில்தான், மகாசபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் நாசே ராமச்சந்திரன். அவரது தலைமையில், கடந்த 2-ந் தேதி மகாசபையின் எழுச்சி மாநாடு திருச்சியில் நடந்தது. மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, யாதவர்களின் நலன்களுக்காக தி.மு.க. அரசு செய்த நன்மைகளை பட்டியலிட்டார்.

மாநாட்டில் சிறப்புரையாற்றிய நாசே ராமச்சந்திரன், ""இந்த மாநாட்டின் நோக்கம், நம் சமூகத்தினர் அரசியல் அதிகாரம் பெறவேண்டும். கல்வி வேலைவாய்ப்புகளில் யாதவ இளைஞர் களுக்கு முன்னுரிமை வேண்டும். நம் யாதவ சமூகத்திற்கு மிகப்பெரிய வரலாறும் பாரம்பரியமும் உண்டு. யாதவர்களின் நலன்களை புறந்தள்ளி விட்டு அரசியல் கட்சிகள் அரசியல் செய்ய முயன் றால் அந்த அரசியல் கட்சிகளை நாம் புறந்தள்ள வேண்டும்''’என்றார். இந்த மாநாடு குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நல்ல தகவல்கள் சென் றிருக்கிறது. அதேசமயம் இப்படியொரு எழுச்சி மாநாடு நடப்பதை எந்த வழியிலாவது தடுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் இயங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

dd

இதுகுறித்து மாநாட்டின் ஏற்பாட்டாளர்களி டம் விசாரித்தபோது, ""இந்தியன் வங்கியின் முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ் ணன் தலைமையில் யாதவ மகாசபை இருந்தபோதே, மகாசபைக்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகள் செய்தவர் ராஜகண்ணப்பன். யாதவர் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அ.தி.மு.க.வில் அமைச்சர் பதவி பெற்றார். ஒரு கட்டத்தில் அக் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு மக்கள் தமிழ்தேசம் கட்சியை உருவாக்கினார். யாதவ மக்கள் அவர் பின்னால் சென்றார்கள். ஆனால், சமூகத்திற்கு எதையும் செய்யாததால் அவரது கட்சி செல்வாக்கை இழந்தது. இதனால் கட்சியை கலைத்துவிட்டு தி.மு.க.வில் இணைந்து அமைச்ச ரானார். இப்படிப்பட்ட சூழலில்தான், யாதவ சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உழைத்ததாலேயே நாசே ராமச்சந்திர னுக்கு மகாசபையின் தலைவர் பொறுப்பு தேடிவந்தது.

பொறுப்பேற்றதும் முதல்காரியமாக யாதவ மக்களுக்காகப் போராடிவரும் மற்ற சிறு, சிறு அமைப்புகளின் தலைவர்களிடம் பேசி அவர்களை எல்லாம் மகாசபையில் இணைத்தார் நாசே ராமச்சந்திரன். இதனால் மகாசபை வலிமையடைவதை பொறுக்க முடியாத ராஜகண்ணப்பன், மாநாட்டைத் தடுக்க நிறைய தடைகளை ஏற்படுத்தினார்.

மாநாட்டினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என தனது ஆள்மூலம் போலீசில் புகார் கொடுக்க வைத்தார். கோர்ட்டுக்கு போய்தான் அனுமதி பெற்றோம். மகாசபையின் கணக்கு வழக்குகள் சரியில்லை என ஐ.டி.யில் புகார் கொடுக்க வைத்தார். அவர்களும் நேரில் வந்து ஆய்வுநடத்தி, கணக்குகள் சரியாக இருப்பதாக சர்ட்டிஃபை கொடுத்துவிட்டுப் போனார்கள். அதேபோல, ராமநாதபுரத்திலிருந்து 26 அரசு பேருந்துகள் மாநாட்டிற்காக புக் செய்யப்பட்டிருந்தது. துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி

rr

அதனை கிடைக்கவிடாமல் செய்தார் ராஜகண்ணப்பன். அதிகாரிகளி டம் போராடியதில் கடைசியில் 6 பேருந்துகள் மட்டும் கிடைத்தன.

மாநாட்டில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலினை அழைத்தோம். தனது சார்பில் நேரு கலந்துகொள்வார் என உறுதி தந்தார் முதல்வர். அதேபோல, யாதவ சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பெரிய கருப்பன், சென்னை துணைமேயர் மகேஷ் என அரசியலில் இருக்கும் வி.வி.ஐ.பி.க்கள் அனைவரையும் அழைத்திருந்தோம். ஆனால், அவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி மாநாடுக்கு போக வேண்டாம் என தடுத்துவிட்டார் ராஜகண்ணப்பன்.

அமைச்சர் நேருவை மட்டும் அவரால் தடுக்கமுடியவில்லை. இதற்கு மாறாக, எங்கள் தலைவர்களைத் தொடர்புகொண்டு, "யாரைக் கேட்டு நேருவை அழைத்தீர்கள்? உங்களுக்கு கண்ணப்பனைவிட நேரு முக்கியமானவ ராக போய்விட்டாரா? இனிதான் கண்ணப்பனின் நிஜ முகத்தை பார்ப் பீர்கள்' என்றெல்லாம் கண்ணப்பன் தரப்பினர் மிரட்டினர். இப்படி மாநாட்டை நடத்தவிடாமல் ஏகப் பட்ட சூழ்ச்சிகளை மறைமுகமாக செய்தார் ராஜகண்ணப்பன்.

யாதவர் சமூகம் தன்னை விட்டு விலகிச் சென்றுவிட்டது என்பது வெளி யில் தெரியக்கூடாது என்பதற்காகவும், யாதவ மகாசபை எழுச்சி பெறுவதை ஜீரணிக்கமுடியாமலும், மகாசபையின் எழுச்சியால் தனக்கு அரசியலில் முக்கி யத்துவம் கிடைக்காது என்பதாலும் தான் மாநாட்டைத் தடுக்க முயற்சித் தார்''’என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து கருத்தறிய ராஜ கண்ணப்பனை முயற்சித்தபோது அவரது தொடர்பு கிடைக்கவில்லை. அவரது தரப்பில் சிலரிடம் பேசிய போது, ""யாதவ மக்களுக்காக ராஜ கண்ணப்பனின் உழைப்பை இந்த நாடு அறியும். அவருக்கு நிகர் யாருமில்லைங் கிறபோது மாநாட்டை தடுக்கவேண் டும்ங்கிற நோக்கம் அவருக்கில்லை. சூழ்ச்சி செய்தார் என்பதெல்லாம் வெறும் ஹம்பக்தான்''’என்றனர்.

nkn130923
இதையும் படியுங்கள்
Subscribe