மைதிப்பூங்காவாக எப்போதும் இருக்கும் தமிழகத்தில், சமீபகாலங்களில் ரவுடிகளின் வெளிப்படையான அட்ட காசங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்து கின்றன.

uuuஇந்தநிலையில் கடந்த 29-ம் தேதி மதுரை திருமங்கலம் அருகில் உள்ள கப்பலூர் சோதனைச் சாவடியில் காரில் சென்ற ரவுடிக்கும்பல் கட்டணம் செலுத்த மறுத்து தகராறில் ஈடுபட்டது. அதில் சசி குமார் என்ற ரவுடி அங்கிருக்கும் ஊழியர் களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம் பிக்க திடீரென அந்த துப்பாக்கி செயல் படாமல் லாக்காகிவிட்டது. அங்கிருந்த போலீஸார் மற்றும் பொதுமக்களால் சசிகுமார் பிடிபட, மற்ற ரவுடிகள் காரில் தப்பித்தனர். உள்ளூர் அரசியல் முக்கிய புள்ளியின் உதவியுடன் காரிலிருந்து இறங்கி ஆட்டோவில் கருமாத்தூர் அருகில் மாற முயன்ற ரவுடியை சோதனைச் சாவடியில் போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜ ராகி திரும்பிவந்த சென்னையின் முக்கிய ரவுடியான வசூர் ராஜாவும் தனசேகரனும் மாட்டிக்கொள்ள... அவர்களோடு வந்த ஹரிகிருஷ்ணன், ரகுபதி, பால்பாண்டி ஆகி யோரும் மாட்டிக்கொள்ள இவர்களிடம் தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ் வரன், ஆனிவிஜயா, எஸ்.பி. மணிவண்ணன் ஆகியோர் விடிய விடிய விசாரணை நடத்தினர். இதில் வழக்கம்போல் பாத்ரூமில் வழுக்கி விழுந்த தனசேகரனுக்கு கை, கால் முறிவு, வசூர் ராஜாவுக்கு கால் முறிவு ஏற்பட அவர்களை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஆறு பேரையும் வாடிப்பட்டி நீதிமன்ற நீதிபதி சிந்துமதி 15 நாள் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

விசாரணையில் கசிந்த தகவல்கள் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவர் களிடமிருந்து ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இவை மேற்குவங்கத்திலிருந்து வாங்கப் பட்டவை. இங்கு சிறையிலிருக்கும் வடநாட்டைச் சேர்ந்த கொள்ளையர்களிடம்து லிங்க் ஏற்படுத்தி, பீகார், மும்பை, மேற்குவங்காளம் போன்ற பகுதிகளில் இருந்து சர்வசாதாரணமாக பயணிகள் ரெயில்களில் துப்பாக்கிகள் கொண்டுவரப்படுகின்றன. 20 ஆயிரத்திலிருந்து 80 ஆயிரம் வரை இதுபோன்ற துப்பாக்கிகள் விலைக்கு கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

Advertisment

தனசேகரன் முதலில் கதிரவனின் பார்வர்டு பிளாக்கில் சென்னை மாவட்ட செயலாளராக இருந்து, தற்போது பா.ஜ.க. புள்ளி. இவர்களுக்குப் பின்புலமாக எம்.எல்.ஏ.க் கள் மற்றும் அமைச்சர்கள் இருப்பதாகவும், தங்களுக்காக கட்டப்பஞ்சாயத்து கொடுக்கல்-வாங்கல் போன்ற செயல் களில் இதுபோன்ற ரவுடிகளை பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். தி.நகரை சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளி, ஆவடி வி.ஐ.பி. உள்ளிட்டோர் தொடர்பு அதிகம்.

வீச்சரிவாள் ரவுடிகள் பலரும் ஹைடெக்காக அப்டேட்டாகி, துப்பாக்கிகளு டன் சவால் விடுகின்றனர்.

-அண்ணல்

Advertisment