Advertisment

ராங்கால் உ.பி.க்கள் உற்சாக  தீபாவளி! ர.ர.க்கள் அப்செட்! தி.மு.க.வுக்கு ஷாக் தந்த சென்னை சர்வே!

rang

"ஹலோ தலைவரே, கனமழை பரவலாக பெய்த நிலையிலும் மக்கள், வண்ண  வண்ணப் புத்தாடை அணிந்து, விதவித இனிப்பு வகைகளில் அன்பை வெளிப்படுத்தி, பட்டாசுகளையும் வெடிச்சி, தீபாவளியை உற்சாகமாகவே கொண்டாடியிருக்காங்க.''”

Advertisment

"உண்மைதாம்பா, ஆளுங்கட்சி -எதிர்க்கட்சிகளின் தீபாவளி எப்படி யிருந்தது?''”

Advertisment

"ஆளுங்கட்சி உடன்பிறப்புகள், தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சி குறையாம கொண்டாடியிருக்காங்க. மாவட்டக் கழக நிர்வாகிகள் தொடங்கி, கிளைக்கழக பொறுப் பாளர்கள் வரை, கட்சி நிர் வாகிகள் அனைவரையும், அவரவர் பொறுப்புக்கு ஏற்ப ’கணிசமாகக் கவனிச்சி’ரொம்பவே பூரிக்கவச்சிருக்கு அறிவாலயம். குறிப்பா 5 ஆயி ரம் பத்தாயிரத் தில் ஆரம்பிச்சி, சில லட்சங்கள் வரை அவர் களுக்கு கவர் விநியோகிக்கப் பட்டிருக்கு. போதாக்குறைக்கு, துணிமணிகள், இனிப்புகள், பட்டாசுகளும் வாரி வழங்கப்பட்டிருக்கு. அதேபோல் பெண் நிர்வாகிகளுக்கு கூடுதலாக வீட்டு உபயோகப் பொருட்களையும் அள்ளிக் கொடுத்து அசர வச்சிருக்காங்க. தேர்தலை மனசில் வச்சிக்கிட்டுதான் இந்த அளவுக்கு வாரி கொடுத்திருக் காங்க. இதில் இளைஞரணி நிர்வாகி களை உதயநிதி கவனித்துக்கொண் டார். ஆனால், மற்ற அணிகளின் நிர்வாகிகள் கவனிக்கப்படாததால் அவர்கள் தரப்பில் உற்சாகம் தெரியலை.''”

"அறிவாலய வெகுமதியிலும் ஒருசில தி.மு.க. நிர்வாகிகள் கை வைத்ததாகப் புகார் வருகிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவாலயம் வழங்கிய தீபாவளிப் பரிசிலும் ஒருசில நிர்வாகிகள் விளையாடியதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, தென்மண் டலத்தைச் சேர்ந்த தி.மு.க. மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான அந்த நிர்வாகி, இப்படிப்பட்ட குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். அவர் பொறுப்பில் இருக்கும் மாவட்டத்தில், தி.மு.க.வின் சார்பு அணிகளுக்கு தலா ரூ 25 ஆயி ரம் வீதம் அறிவாலயம் அனுப்பியதாம். ஆனால் அந்த மா.செ.வோ, கட்சித் தலைமை உங்களுக்கு ரூ10 ஆயிரம் கொடுக்கச் சொல்லியிருக்கிறது என்று சொல்லிவிட்டு, மிச்சத்தை விழுங்கி விட்டாராம். அதேபோல், வட்டப் பிரதிநிதிகள், கிளைச் செயலாளர்கள் அடங்கிய குழுவிற்கு கொடுக்கப்பட்ட தீபாவளி பரிசான ரூ.5 ஆயிரத்திலும் ரூ 3 ஆயிரம் வீதம் எடுத்துக்கொண்டாராம். இதே போல் வார்டு செயலாளர்களின் வெகுமானத்தை யும் அவர் கபளீகரம் செய்துவிட்டாராம். இதுபோல் அங்கங்கே ஒருசிலர் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள் உடன

"ஹலோ தலைவரே, கனமழை பரவலாக பெய்த நிலையிலும் மக்கள், வண்ண  வண்ணப் புத்தாடை அணிந்து, விதவித இனிப்பு வகைகளில் அன்பை வெளிப்படுத்தி, பட்டாசுகளையும் வெடிச்சி, தீபாவளியை உற்சாகமாகவே கொண்டாடியிருக்காங்க.''”

Advertisment

"உண்மைதாம்பா, ஆளுங்கட்சி -எதிர்க்கட்சிகளின் தீபாவளி எப்படி யிருந்தது?''”

Advertisment

"ஆளுங்கட்சி உடன்பிறப்புகள், தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சி குறையாம கொண்டாடியிருக்காங்க. மாவட்டக் கழக நிர்வாகிகள் தொடங்கி, கிளைக்கழக பொறுப் பாளர்கள் வரை, கட்சி நிர் வாகிகள் அனைவரையும், அவரவர் பொறுப்புக்கு ஏற்ப ’கணிசமாகக் கவனிச்சி’ரொம்பவே பூரிக்கவச்சிருக்கு அறிவாலயம். குறிப்பா 5 ஆயி ரம் பத்தாயிரத் தில் ஆரம்பிச்சி, சில லட்சங்கள் வரை அவர் களுக்கு கவர் விநியோகிக்கப் பட்டிருக்கு. போதாக்குறைக்கு, துணிமணிகள், இனிப்புகள், பட்டாசுகளும் வாரி வழங்கப்பட்டிருக்கு. அதேபோல் பெண் நிர்வாகிகளுக்கு கூடுதலாக வீட்டு உபயோகப் பொருட்களையும் அள்ளிக் கொடுத்து அசர வச்சிருக்காங்க. தேர்தலை மனசில் வச்சிக்கிட்டுதான் இந்த அளவுக்கு வாரி கொடுத்திருக் காங்க. இதில் இளைஞரணி நிர்வாகி களை உதயநிதி கவனித்துக்கொண் டார். ஆனால், மற்ற அணிகளின் நிர்வாகிகள் கவனிக்கப்படாததால் அவர்கள் தரப்பில் உற்சாகம் தெரியலை.''”

"அறிவாலய வெகுமதியிலும் ஒருசில தி.மு.க. நிர்வாகிகள் கை வைத்ததாகப் புகார் வருகிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவாலயம் வழங்கிய தீபாவளிப் பரிசிலும் ஒருசில நிர்வாகிகள் விளையாடியதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, தென்மண் டலத்தைச் சேர்ந்த தி.மு.க. மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான அந்த நிர்வாகி, இப்படிப்பட்ட குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். அவர் பொறுப்பில் இருக்கும் மாவட்டத்தில், தி.மு.க.வின் சார்பு அணிகளுக்கு தலா ரூ 25 ஆயி ரம் வீதம் அறிவாலயம் அனுப்பியதாம். ஆனால் அந்த மா.செ.வோ, கட்சித் தலைமை உங்களுக்கு ரூ10 ஆயிரம் கொடுக்கச் சொல்லியிருக்கிறது என்று சொல்லிவிட்டு, மிச்சத்தை விழுங்கி விட்டாராம். அதேபோல், வட்டப் பிரதிநிதிகள், கிளைச் செயலாளர்கள் அடங்கிய குழுவிற்கு கொடுக்கப்பட்ட தீபாவளி பரிசான ரூ.5 ஆயிரத்திலும் ரூ 3 ஆயிரம் வீதம் எடுத்துக்கொண்டாராம். இதே போல் வார்டு செயலாளர்களின் வெகுமானத்தை யும் அவர் கபளீகரம் செய்துவிட்டாராம். இதுபோல் அங்கங்கே ஒருசிலர் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள் உடன்பிறப்புகள்.''”

"சரிப்பா, பிரதான எதிர்க்கட்சிக்கு இந்த தீபாவளி எப்படி இருந்தது?''”

"அ.தி.மு.க. நிர்வாகிகளை எடப்பாடி கவனிப்பார் என அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், கரன்சிக் கட்டுகள் அவிழ்க்கப்படவில்லை. கடந்த 2 வருடங்களாக  கட்சி நிர்வாகிகளைக் கண்டுகொள்ளாத எடப்பாடி, தேர்தல் நெருங்கி யுள்ள நிலையிலாவது இந்த தீபாவளிக்குக் கவனிப் பார் என  அவர்கள் தரப்பில் வலுத்திருந்த ஆர்வம், புஸ்வாணமாயிடுச்சி. வசதி படைச்ச மா.செ.க்களும், மாஜி மந்திரிகளும் மட்டும், தங்கள் மாவட்ட நிர்வாகிகளுக்கும் தங்கள் ஆதரவாளர்களுக்கும் பண முடிப்புகளோட  இனிப்பையும்  வழங்கி, தங்கள் அளவுக்கு அவர்களை மகிழ்ச்சியில் திளைக்கவைத்திருக்கிறார்கள். இருப்பினும், பெரும்பான்மையான அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் ஆதங்கமும் அதிருப்தியும் வெடித்தபடி இருக்கிறது. இதைத் தாமதமாகக் கேள்விப்பட்ட எடப்பாடி, ’பொங்கலுக்கு மிகச் சிறப்பாக கவனித்துவிடலாம். தீபாவளிக்கும் சேர்த்து பொங்கலுக்கு வரவேண்டியது வரும்’ என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஆறுதல் செய்தியை வழங்கியிருக் கிறார். மற்ற கட்சிகளில் செல்வாக்குள்ள பொறுப்பாளர்கள், தங்கள் ஆதரவாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியிருக்காங்களாம்.''” 

"தீபாவளி  நேரத்தில், தென்மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு அதிர்ச்சி அனுபவம் கிடைத்ததாகச் சொல்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உடன்குடி யைச் சேர்ந்தவர் "குண மானவர்'. அ.தி.மு.க.வில் முக்கிய பிரமுகரான அவரை, "உரக்கடைக்காரர்' என்றால், எல்லோருக்கும் தெரியும். மேலும் சிட் பண்ட், ரியல் எஸ்டேட் பிசினஸிலும் அவர் ஈடுபட்டுவருகிறார். அவரை சமீபத்தில் செல்போனில் அழைத்த ஒரு பெண் குரல், "ஏதேனும்  லோன் வேண் டுமா?'’என்று கேட்க... அந்த பிரமுகரோ, அந்த செல் போன் பெண்ணிடம் ’வழிந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், "நாம் தனி மையில் சந்திக்கலாமா...?' என, அந்தப் பெண்ணிடம் அவர் கேட்க, அவரை ஒரு இடத்திற்கு அழைத்திருக் கிறார் அந்தப் பெண்மணி.  உற்சாகமாக 'புல்லட்டில்' சென்ற அவரை, அந்தப் பெண்ணுடன் காரில் வந்த வர்கள், மடக்கிப் பிடித்து, அடித்து உதைத்ததோடு, தேரிக் காட்டில், கழுத்து வரை புதைத்து, 50 லட்சம் கொடுத்தால்தான் உன்னை விடுவோம் என்று நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை  வைத்து ஷாக் கொடுத்திருக் கிறார்கள்.   பின்னர் அவர் அணிந்திருந்த நகை, பணம் உள்ளிட்ட வற்றைப் பறித்துக் கொண்டு, அவரைத் துரத்திவிட்டார்களாம். போலீஸுக்குப் போனால் தனக்குத்தான் அசிங்கம் என்று கருதிய அந்த அ.தி. மு.க. பிரமுகர், எல்லாவற் றையும் மென்று விழுங்கி, சைலண்டாகி விட்டாராம்.''”

"பனையூர் தரப்பின் தீபாவளி எப்படி யிருந்ததாம்?''”

rang2

"தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் தீபாவளி நிலைமை இப்படியிருக்க, பனையூர்த் தரப்பான நடிகர் விஜய் தரப்பினரும் ஏமாற்றத்தையே அனுபவிச்சிருக்காங்க. கரூர் அசம்பாவிதத்தைக் காரணம் காட்டிய விஜய், "இந்த வருடம் நமக்கு தீபாவளிப் பண்டிகை இல்லை. அதனால் யாரும் தீபாவளி கொண்டாடாதீர்கள்'னு நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டாராம். ஆனால், இதனை அக் கட்சி உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டார்களாம். ஒருசில நிர்வாகிகள் செய்த தவறுக்கு  நாங்கள் எதற்குத் துயரத்தைச் சுமக்கணும்?. எங்கள் வீட்டில் அப்பா, அம்மா உள்ளிட்ட குடும்பத்தினர் தீபாவளி கொண்டாடும் போது, நாங்கள் மட்டும் துக்கத்தை அனுஷ்டிக்க முடியாது என்று சொல்லி விட்டார்களாம். இந்தநிலையில், தீபாவளி சமயத்தில், த.வெ.க.வின் முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்தே, தனது 25ஆவது திருமணநாளை வெகு விமரிசை யாகத் தனது குடும்பத்தின ருடன் கொண்டாடியிருக் கிறாராம். இது த.வெ.க. தொண்டர்கள் மத்தியில் ஏக எரிச்சலை ஏற்படுத்தியிருக் கிறதாம்.''”

"தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில்,  நடிகர் விஜய் தரப்பு காங்கிரஸுடன் ரகசிய டீலிங்கில் இருப்பதாகச் சொல்கிறார்களே?''”

"நடிகர் விஜய் தரப்பு, தங்களுக்கு வரும் தேர்தலில் வாக்கு வங்கி பலமாக இருக்கும் என்று கருதுகிறது. அதனால் தங்கள் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்க அது விரும்புகிறதாம். இதனால் ஒரு பக்கம் கூட்டணிப் பேச்சு வார்த்தையை ஆதவ் அர்ஜுனா மூலம் எடப்பாடி யிடம் பேசிக்கொண்டி ருக்கிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸின் டெல்லி தலைவர்களுடன் ரகசியமாக டீலிங்கைத் தொடங் கியது. காங்கிரஸோ, "உங்களை நாங்கள் சுத்தமாக மறுதலிக்கவில்லை. கொஞ்சம் பொறுத்திருங்கள்' என்று சொல்லியிருக்கிறதாம். இதன்மூலம், தி.மு.க.வில் தங்களுக்கு போதுமான சீட் ஒதுக்கப்படாவிட்டால், மற்றொரு சாய்ஸாக விஜய்யை காங்கிரஸ் வைத்திருக்கிறது என்கிறார்கள் டெல்லித் தரப்பினர்.இந்த நிலையில் பா.ஜ.க. தலைமை, விஜய்யைத் தங்கள் பக்கம் எப்படியாவது கொண்டுவர வேண்டும் என்று கருதுகிறது. ஆனால் தமிழக மாஜி பா.ஜ.க. நிர்வாகிக்கோ, விஜய் தங்கள் பக்கம் வருவதில் கொஞ்சமும் விருப்பம் இல்லையாம். ஒருவேளை விஜய், பா.ஜ.க. அணிக்கு வந்தால், தனது நெருங்கிய நண்பரான டி.டி.வி.தினகரனை, அவர் தி.மு.க. கூட்டணிக்கு அனுப்பிவைப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.''”

"இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் தி.மு.க. எம்.பி. கனிமொழி தரப்பில் பரபரப்பு தெரியுதே?''”

rang1

"ஆமாங்க தலைவரே, தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்ல, தி.மு.க.வில் 7 மண்டலப் பொறுப் பாளர்களைக் கடந்த மே மாதம் நியமித்தார் ஸ்டாலின். அந்த வகையில், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்கள்  அடங்கிய மண் டலத்தின் பொறுப்பு கனிமொழிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த மாவட் டங்களில்  கட்சிக்குள் நடந்துவரும் கோஷ்டி பூசல்களை அவர் சரி செய்து வருகிறார். தீர்க்கமுடியாத சில பிரச்சனைகளை ஸ்டாலினின் கவனத்துக்கும் எடுத்துச்சென்று அவரின் ஆலோசனையின் பேரில் தீர்த்தும் வருகிறார். இந்த நிலையில், அவர் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டத் தொகுதிகளில், யார் யாரை வேட்பாளர்களாக அறி விக்கலாம் என்று, கட்சித் தலைமை அவரிடம் ஒரு ரிப்போர்ட்டை கேட்டிருக்கிறது.  அது தொடர் பான ஆய்வுகளில் அவர் தீவிரமாக இருக்கிறார்.''”

"இந்த நிலையில் சென்னையில் தி.மு.க. ரகசிய சர்வே எடுத்ததாகச் சொல்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, சென்னையைத் தனது கோட்டையாக தி.மு.க. கருதிக்கொண்டிருந்தது. இந்த நிலையில், தி.மு.க. அங்கே எடுத்த ரகசிய சர்வேயின்படி, சென்னையில் கொஞ்சம் பலவீனம் தெரிந்ததாம். அதாவது தற்போதைய நிலையில், ஃபிஃப்ட்டி ஃபிஃப்ட்டி’ என்பதாகவே தங்களுக்கு ஆதரவு இருப்பதாக அது கண்டறிந்திருக்கிறதாம். அதனால், ஷாக்கான தி.மு.க., சென்னையின் மீது தன் கவனத்தை அதிகமாகக் குவிக்க ஆரம்பித் திருக்கிறது என்கிறார்கள். தற்போதைய கனமழை தொடர்பான நிவாரணப் பணி களைக் கூட சற்றும் தொய்வில்லா மல் செய்து, சென்னை மக்களிடம் சபாஷ் வாங்கவேண்டும் என்று கட்சிப் பொறுப்பாளர்களிடம் உத்தரவிட்டிருக்கிறாராம் ஸ்டாலின். சென்னை மக்களைக் கவர இன்னும் என்னென்ன செய்யலாம் என்றும், அறிவா லயம் யோசித்து வருகிறதாம்.''”

"கரூர் அசம்பாவித விசா ரணையைக் கண்காணிக்கும் குழு களமிறங்கி விட்டதா?''”

"ஆமாங்க தலைவரே, கரூர் அசம்பாவிதம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அதைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூவர் குழுவை அமைக்கச் சொன்னது. ரஸ்தோகி தலைமையில் இடம்பெற இருந்த அந்த 2 அதிகாரிகள் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவிய நிலையில் தற்போது சோனல் மிஸ்ரா மற்றும் சுமித் சரண் ஆகிய 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசுப் பணியில் இருந்த இவர்கள், ஏற்கனவே தமிழக அரசுப் பணியில் இருந்தபோது இருவருமே சட்டம் ஒழுங்கு பணியில் சிறப்பாக செயல்படாதவர்கள். இருவருமே ஒன்றிய அரசு என்ன சொல்கிறதோ, அப்படியே நிறைவேற்றக் கூடியவர்கள். இவர்கள் இருவரது நியமனமும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. இப்போதுதான் இந்த டீம் முதல் தகவல் அறிக்கையை நேற்று, அதாவது 22-10-25 அன்று கோர்ட்டில் தாக்கல் பண்ணியுள்ளதாம்.''

"சேலம் பகுதியிலிருக்கும் ஒரு முக்கிய அ.தி.மு.க. பிரமுகரை பற்றிய கிசுகிசு அடிபடுதே, உண்மையா?''

"ஆமாங்க தலைவரே, சேலத்துல அவர் வீட்டிலிருந்த சமையல்காரிக்கும் இவருக்கும் இருந்த கனெக்சனால, இவரு சென்னையிலருந்து சேலத்திற்கு வாராவாரம் வந்திடுறாராம். அங்கிருக்க கட்சிக்காரங்க இந்த மேட்டர புரிஞ்சுக் காம, நம்ம தலைவர் வாரா வாரம் நம்ம தொகுதிய கவனிக்க வந்துடுறாரேன்னு ஆச்சர்யப் பட்டிருக்காங்க. ஆனால் தலைவரோட டிரைவ ருக்கு உண்மை தெரிஞ்சதால, அதை அப்படியே தலைவரோட மனைவி காதுல போட... குடும்பத்துக்குள்ள பிரச்சனை வெடிச்சிருக்காம். இதுல அந்த டிரைவரை வேலைய விட்டு தூக்கினால் பிரச்சனை வெளில லீக்காகிடுமேன்னு மிரட்டி கூடவே வச்சிருக்காராம். இதுக்கிடையில, ஒரு கணவன் -மனைவி பஞ்சாயத்து தலைவர்கிட்ட வந்திருக்கு. அவரோ ரெண்டு பேரையும் பிரிச்சு, அந்த பெண்ணை தலைமைச் செயலகத்தில் பணியமர்த்தி தன்னோட வசமாக்கிட்டாராம். இதனாலதான் இப்பல்லாம் எங்கூட பேசறதில்லை யான்னு தலைவரோட முன்னாள் செட்டப் கோவிச்சுக்கிச்சாம். இந்த விவகாரம்தான் கிசுகிசுவா சுத்துது. இதெல்லாம் இருந்தாத்தான் பெரிய மனுசங்கபோல தலைவரே...''

"நானும் என் கவனத்துக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக ஆயுதப் படையில் ஐ.ஜி.யாக இருப்பவர் ஜெயகவுரி. இவர் தனது சொந்த உபயோகத்திற்கு, துறையின் 5 வாகனங்களைப் பயன்படுத்தி வருகிறாராம். மேலும் ’பந்தா’ காட்ட விரும்பும் அவர், தான் வெளியே செல்லும்போது தனது வாகனத்திற்கு முன்னும் பின்னும் இரண்டு வாகனங்களில் காவல்துறையினர் வரவேண்டும் என்றும் சொல்கிறாராம். இது அவரது துறையினரிடையே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறதாம்.''

nkn251025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe