Advertisment

ஜல்லிக்கட்டில் தீண்டாமையா? மறுக்கும் மாடுபிடிவீரர் தமிழரசன்!

d

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 23 மாடுகளைப் பிடித்து முதலிடத்தில் வந்து கார் பரிசை தட்டிச்சென்ற தமிழரசன் செய்தியாளர்களிடம், "உயிரைப் பணயம் வைத்து காளை யைப் பிடிக்கிறோம். மாட்டை அடக்கியதற்காக என்னை மாட்டுக்காரங்க அடிக்கிறாங்க. அது எனக்கு மன வேதனையா இருக்கு” அதற்குக் காரணம் தனது சாதிதான்'' என்று சொல்ல... இதில் அரசு தலையிடவேண்டும் என குரலெழுந்ததோடு சர்ச்சையும் கிளம்பியிருக்கிறது.

Advertisment

ஜல்லிக்கட்டில் இன்னும

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 23 மாடுகளைப் பிடித்து முதலிடத்தில் வந்து கார் பரிசை தட்டிச்சென்ற தமிழரசன் செய்தியாளர்களிடம், "உயிரைப் பணயம் வைத்து காளை யைப் பிடிக்கிறோம். மாட்டை அடக்கியதற்காக என்னை மாட்டுக்காரங்க அடிக்கிறாங்க. அது எனக்கு மன வேதனையா இருக்கு” அதற்குக் காரணம் தனது சாதிதான்'' என்று சொல்ல... இதில் அரசு தலையிடவேண்டும் என குரலெழுந்ததோடு சர்ச்சையும் கிளம்பியிருக்கிறது.

Advertisment

ஜல்லிக்கட்டில் இன்னும் சாதியப் பாகுபாடு இருக்கிறதா? மதுரை காஞ்சிரம்பேட்டை யிலுள்ள சின்னப்பட்டிக்கு தமி ழரசனைத் தேடிச்சென்றோம். "ஆமாண்ணே இது எப்போதும் நடக்கும் சம்பவம். என்னை மட்டுமல்ல மாடுபிடிப்பதில் கொஞ்சம் வளர்ந்து வந்தா அவனை மாடு வளர்ப்பவர்கள் தங் கள் மாட்டைப் பிடிக் கக்கூடாது என்று மிரட்டுவார்கள்.

ss

பாலமேட் டுக்கு அருகே நடந்த ஒரு ஜல் லிக்கட்டில் 5-ஆம் சுற்று 6-ஆம் சுற்றுகளில் டீம் டீமாக என்னைச் சுற்ற ஆரம்பித்தார்கள். வேண்டுமென்றே மாடு வரும்போது வாடிவாசல் கட்டைக்கு முன்னே தள்ளிவிடுவது, நான் தாவிப் பிடித்துவிட்டால் வேண்டுமென்றே அவர்களில் யாராவது அதே மாட்டைப் பிடித்து, இருவர் பிடித்தால் பரிசு இல்லையென்பதால் பரிசுக் கணக்கை குறைப்பது என்று செய்தார்கள். இருந்தும் 23 மாடு பிடித்து முதல் பரிசை தட்டிச்சென்றேன்.

அதில் பேசும்போது என்னையறியாமல் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். மற்றபடி என்னைப் போன்ற எல்லா சாதி மாடுபிடி வீரனுக்கும் இந்த நிலைமைதான். இது எல்லா மாடுபிடி வீரனுக்கும் சகஜம். நான் முதல் பரிசு வாங்கியபோது என் பேட்டியை வைத்து சமூக வலைத்தளங்களில் நான் தாழ்த்தப்பட்ட சமூகம் என்ப தால்தான் என்னை அடித்தார்கள். ஜல்லிக்கட்டில் சாதியப் பாகுபாடு என்றல்லாம் வந்தது. எங்க தாத்தா காலத்தில் அந்தமாதிரி இருந் திருக்கலாம். முதல்ல எங்க சமூகமெல்லாம் ஜல்லிக்கட்டிற்கு வேடிக்கை பார்க்கத்தான் போகமுடியும் ஆனா இப்ப அப்படி இல்லை. நிறைய இளைஞர்கள் மாடுபிடி வீரனா வலம் வருகிறார்கள்.

நான் மாடுபிடிக்கப் போறது வெறும் வீரத்திற்காக மட்டுமல்ல. எங்கள் சமூகத்துக்கும் எல்லோரையும்போல சமமாகப் போட்டிபோடும் திறமை இருக்கு என்று காண்பிக்கவே. நான் பட்டப்படிப்பு படிக்கிறேன். எனக்கு இந்த கார், பரிசு, கேடயம் எல்லாம் வேண்டாம். படித்த படிப்பிற்கு ஏற்றாற்போல ஒரு அரசு வேலை இருந்தா போதும் சார்''’என்றார். ஆட்சியர் அனீஸ் சேகரிடம் இதுபற்றி கேட்டபோது, "இதுகுறித்து எந்த புகாரும் வரவில்லை. ஆனால் இதை கவனத்தில் எடுத்து அடுத்த முறை இதுபோன்ற சம்பவங்கள் நடக் காதவாறு அனைத்து மாடுபிடி வீரர்கள், மாடுவளர்ப்பவர்களை வரவழைத்து இதற்கு ஒரு ஒழுங்குமுறை கொண்டுவருவோம்''’ என்றார்.

nkn250123
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe