Advertisment

அரசு மருத்துவக் கல்லூரியில் தீண்டாமை! -மாணவர்கள் குற்றச்சாட்டு!

ss

சிதம்பரம் அண்ணாமலை நகரிலுள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியி லிருந்து மாணவ- மாணவிகள் கையெழுத்திட்ட கடிதம் நமது அலுவலகத்திற்கு வந்தது. அதில். மாணவர்களிடையே ஜாதிக் குழுவை உருவாக் கித் தீண்டாமையை நேரடியாகவும், நவீனமாகவும் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

Advertisment

அந்தக் கடிதத்தில் தேர்வு ஒருங்கிணைப் பாளர் சரவணன், மாணவர்களை சாதிக்குழுக்க ளாக மாற்ற முயல்வதாகவும், பட்டியலின மாணவர்களுடன் இதர மாணவர்கள் பேசுவதைத் தவிர்க்கும்படி செய்வதாகவும் குற்றம்சாட்டு வதுடன், மதிப்பெண்களைக் குறைத்தல், தேர்வில் தேர்ச்சி பெறுவதைத் தடைசெய்தல் உள்ளிட்ட மலினவேலைகளில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டப் பட்டது.

gg

சம்பந்தப்பட்ட கல்லூரிக் குச் சென்று விசாரணையில் ஈடுபட்டோம். கடிதத்தில் கையெழுத்திட்ட மாணவர் களில் ஒருவரை தொலை பேசியில் அழைத்துப் பேசி னோம். கல்லூரி வளாகத் தில் நம்மைத் தவிர்த்த அவர், தனியான இடத்திற்கு அழைத்துப் பேசினார். மேலும், செய்தியில் பெயர் களைத் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கல்லூர

இந்தக் கல்லூரியில் அண்ணாமலை செட்டியார் நிர்வாகத்தில் இருந்த காலத்திலிருந்து செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள்தான் இங்கு மருத்துவம், அதனைச் சார்ந்த கல்வியைப் பயின்றுவந்தார்கள். தற்போது அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தபிறகு தகுதி, திறமையின் அடிப்படையில் பல ஏழை மாணவர்களும் பயின்றுவருகிறார்கள். இதில் எஸ்.சி. மாணவர்கள் மருத்துவம் படிப்பதைப் பிடிக்காதவர்கள், மாணவர்களிடம் ஜாதியக் குழுக்களை ஏற்படுத்தி மனஉளைச்சலை உண்டாக்குகிறார்கள்.

இதில் முக்கியமாகச் செயல்முறை மருத்துவத் துறையில் தேர்வு ஒருங் கிணைப்பாளராகப் பணியாற்றும் சங்கர், எஸ்.சி. மாணவர்களிடம் வெளிப்படை யாகவும் நேரடியாகவும் "ஸ்காலர்ஷிப் பில்தானே படிக்கிறீர்கள்?' என அனைத்து மாணவர்கள் மத்தியிலும் கேட்பார். மேலும் ஜாதிய வன்மத்துடன் மாற்று சமூக மாணவர்களை எஸ்.சி. மாணவர்களுடன் சேரக்கூடாது எனக் கண்டிப்பார். இதனையும் மீறி சில மாணவர்கள் எஸ்.சி. பிரிவு மாணவர்களுடன் பழகிவந்தனர்.

Advertisment

ff

இதனால் கடந்த 2017-ஆவது வருடம் 5 எஸ்.சி. பிரிவு மாணவர்களையும், இவர்களுடன் பழகியதற்காக 2 மாற்று சமூக மாணவர்களையும் தேர்வில் குறைந்த மதிப்பெண் அளித்துத் தோல்வி யடையச் செய்தார். பின்னர் 2019 கொரோனா காலத்தில் யாரையும் பெயிலாக்கக்கூடாது என்ற நிலையிலும். 3 எஸ்.சி., 1 மாற்று சமூகத்து மாண வர்களை தோல்வியடையச் செய்தார். 2023-ல் 2 எஸ். சி மாணவர்களையும் 1 மாற்று சமூக மாணவரையும் பெயிலாக்கினார். இதுகுறித்து துறையின் தலைவரான தனபால்சிங், ஸ்ரீவித்யா மேடத்திடம் "நாங்கள் மோச மாகத் தேர்வு எழுதவில்லை. நல்ல முறையில்தான் எழுதினோம்' என்று முறையிட்டோம். சங்கர் சார் "ஸ்காலர்ஷிப்பில்தானே படிக்கிறீங்க இன்னும் 2 வருடம் பொறுமையா இருந்து படிச்சுட்டுப் போங்கடா' என நேரிடையாகக் கூறினார். அவர் எங்களைத் திட்டமிட்டு பெயி லாக்கிவிட்டாரென அழுது புலம்பி னோம், கண்டு கொள்ளவில்லை.

பின்னர் கல்லூரியின் முதல்வர் திருப்பதியை சந்தித்துக் கூறினோம். அவர் உடனடியாக ஒரு குழுவை அமைத்து இதுகுறித்து விசாரிக்கக் கூறினார். அப்போது எங்களது பேப்பரைப் பார்த்து மதிப்பெண் கூட்ட லில் தவறு இருந்ததை அறிந்து பாஸ் போடுவதற்கு நடவடிக்கை எடுத்தார். ஆனால் அவர் சாதியரீதியாக மாணவர்களிடம் செயல்பட்டதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது செயல்முறை மருத்துவத்துறைக்குத் தலைவராக உள்ள ஸ்ரீவித்யா சைக்காலஜி துறையின் லெக்சரர். இவருக்கும் செயல்முறை மருத்துவத்திற்கும் சம்பந்தமில்லை. அவரை மாற்றவேண்டும். இவரை வைத்துத்தான் சங்கர், "எஸ்.சி. மாணவர்களிடம் மற்ற மாணவர்கள் சேரக் கூடாது' என ஜாதிக்குழுவை உருவாக்குகிறார். சங்கரின் செயல்பாட்டுக்கும், துறைத்தலைவர் உள்ளிட்ட பலருக்கும் தொடர்புள்ளது.

மேலும் இந்தத் துறையில் 60 பேரா சிரியர்கள், ஊழியர்கள் உள்ளனர். இதில் ஒருவர் எஸ்.சி. மீதி அனைவரும் மாற்று சமூகத்தைச் சார்ந்தவர்கள். இவர்களில் சிலர் எஸ் .சி. மாணவர்களை மிகவும் மட்டமாகப் பார்க்கின்றனர். இது பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. கல்லூரி முதல்வர் திருப்பதி, கல்லூரியிலுள்ள எஸ்.சி., எஸ்.டி., செல்லின் ஒருங்கிணைப்பாளர் பிரபுதாஸ் உள்ளிட்டவர்கள் கூறிய அறிவுரையால் தற்போது உயிருடன் உள்ளோம்.

gg

கடிதத்தில் கையெழுத்திட்ட மாற்று சமூக மாணவிகளை ஜாதிரீதியாகப் பேசி சங்கர் மற்றும் அவரது சகாக்கள் மிரட்டினர். இதனால், விசாரணையில் அது அவர்கள் கையெழுத்து இல்லையெனக் கூறச் செய்துள்ளனர். அந்த மாணவிகளோ இனிமேல் எனது பெயர் வெளியே வந்தால் தற்கொலை செய்துகொள்வேன் என என்னிடம் கூறியதால் வேறு வழியின்றி விசாரணையில் நிர்வாகம் கேட்டபடி கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டேன்” என்றார்.

மருத்துவக் கல்லூரி முதல்வர் திருப்பதியோ, “ "இந்தச் சம்பவம் என் கவனத்திற்கு வந்த உடனேயே நான் ஒரு குழு அமைத்து மாணவர்கள் தேர் வெழுதிய பேப்பரை ஆய்வுசெய்யக் கூறினேன். அதில் மாணவர்கள் நல்ல முறையில் தேர் வெழுதியிருந்தது தெரியவந்தது. உடனடியாக மாணவர்களைத் தேர்ச்சிபெறச் செய்தேன். சம்பந்தப்பட்ட நபரை அழைத்து கமிட்டி உறுப் பினர்கள் கொண்ட குழு விசாரணை மேற் கொண்டோம். அவரிடம் அவர் செய்த தவறுக் கான கடிதமும் பெற்றுள்ளோம். அவருக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்காமல் டம்மியாக வைத்துள்ளோம். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்''’என்றார்.

பள்ளியளவில் இருந்த ஜாதிய நோய் தற்போது பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரிவரை விரிவடைந்துள்ளது. தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமா?

-காளிதாஸ்

nkn090823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe