Advertisment

குழந்தைகளை விரட்டிய தீண்டாமைக் கொடுமை! பதட்டத்தில் சங்கரன்கோவில்!

ss

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள கிராமம் பாஞ்சாகுளம். சுமார் 25 குடும்பங்களைக் கொண்ட பட்டியலின மக்கள் மைனாரிட்டியாகவும், மற்றொரு பிரிவினரை மெஜாரிட்டியாகவும் உள்ளடக்கிய கிராமம். கடந்த ஆண்டு வரை இரண்டு தரப்பினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாகவே பழகி வந்துள்ளனர். இந்தச் சூழ-ல் இக்கிராமத்தின் மெஜாரிட்டி பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ராணுவத்தில் அக்னிபாத் படைப்பிரிவில் வேலைக்கு எடுக்கப்பட்டுள் ளார். பணியில் சேர்வதற்கு தேவையான ஆவணங்களோடு, அவர்மீது கிரிமினல் வழக்குகள் கிராமத்தின் காவல் சரகத்தில் பதிவாகவில்லை என்பதற்கான காவல் நிலையச் சான்றிதழ் வேண்டும். சமர்ப்பித்தால் தான் பணியில் சேரமுடியும் என்கிற நிலை.

Advertisment

ss

ஆனால் சூழலோ இவருக்கு நேரெதிர். கடந்த 2021ல் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியின்போது அங்குள்ளவர்கள் ஜாலியாக மது குடித்துவிட்டு, விசிலடித்தபடி பைக்கில் கண்மூடித்தனமான வேகத்தில் பறந்ததால், அதனை எதிர்த்தரப்பு தட்டிக் கேட்க, ஆத்திரத்தி

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள கிராமம் பாஞ்சாகுளம். சுமார் 25 குடும்பங்களைக் கொண்ட பட்டியலின மக்கள் மைனாரிட்டியாகவும், மற்றொரு பிரிவினரை மெஜாரிட்டியாகவும் உள்ளடக்கிய கிராமம். கடந்த ஆண்டு வரை இரண்டு தரப்பினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாகவே பழகி வந்துள்ளனர். இந்தச் சூழ-ல் இக்கிராமத்தின் மெஜாரிட்டி பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ராணுவத்தில் அக்னிபாத் படைப்பிரிவில் வேலைக்கு எடுக்கப்பட்டுள் ளார். பணியில் சேர்வதற்கு தேவையான ஆவணங்களோடு, அவர்மீது கிரிமினல் வழக்குகள் கிராமத்தின் காவல் சரகத்தில் பதிவாகவில்லை என்பதற்கான காவல் நிலையச் சான்றிதழ் வேண்டும். சமர்ப்பித்தால் தான் பணியில் சேரமுடியும் என்கிற நிலை.

Advertisment

ss

ஆனால் சூழலோ இவருக்கு நேரெதிர். கடந்த 2021ல் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியின்போது அங்குள்ளவர்கள் ஜாலியாக மது குடித்துவிட்டு, விசிலடித்தபடி பைக்கில் கண்மூடித்தனமான வேகத்தில் பறந்ததால், அதனை எதிர்த்தரப்பு தட்டிக் கேட்க, ஆத்திரத்தில் இரண்டு தரப்பினரும் அடிதடி என மோதிக் கொண்டதில் இரு தரப்பிலும் காயம் ஏற்பட, இரண்டு தரப்பின ரின் மீதும் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவாகின. ஒரு தரப்பினர் மீது அடிதடி வழக்குகளும், மற்றொரு பிரிவினர் மீது தீண்டாமை வழக்கும் பதிவாகியுள்ளன. இந்த மோதலில் ராணுவப் பணிக்கு தேர்வு செய்யப் பட்ட ராமகிருஷ்ணனின் மீதும் தீண்டாமை வழக்கு. இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டால் மட்டுமே பணி நிச்சயம் என்ற சூழல்.

இந்த நிலைமையை ராமகிருஷ்ணனின் தரப்பு சமூகத்தினர், தங்கள் சமூக நாட்டாமையும், கிரா மத்தில் பெட்டிக்கடை நடத்தி வருபவருமான மகேஸ்வரனிடம் தெரிவித் திருக்கிறார்கள். இதை யடுத்து நாட்டாமை மகேஸ்வரன் உட்பட சிலர், பட்டியலின சமூக நாட்டாமையான விக் னேஸ்வரன் தரப்பிடம் நிலைமையைத் தெரிவித்து, தங்கள் தரப்பினர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக் கேட்டுள்ள னர். அதுசமயம், எங்கள் பட்டியலின சமூதாயத் தினர் மீது தொடரப்பட்ட வழக்கை நீங்கள் வாபஸ் பெற்றால், பட்டியலின சமுதாய மக்களால் போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடியும் என்று தெரிவித்ததற்கு பதில் கிடைக்க வில்லையாம்.

இந்தச் சூழலில், நாட்டாமை மகேஸ்வரன் கடைக்கு வழக்கம் போல் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படிக்கும் 3ம் வகுப்பு குழந்தைகள் தின்பண்டங்களை வாங்கச் சென்றுள்ளனர். அந்தக் குழந்தைகளிடம், "எங்க சமுதாயத்தில் ஊர்க்கூட்டம் போட்டு ஒங்களுக்கு கடையில எந்தப் பொரு ளும் கொடுக்கக்கூடாதுன்னு கட்டுப்பாடு போட்டுருக்கோம். போங்க. போயி ஒங்க வீட்ல சொல்லுங்க''ன்னு சொல்லியதோடு, அதனை வீடியோவாக்கி வாட்சப்பிலும் போட, அது அப்படியே பரவி வைரலாகி, தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் முதல் எஸ்.சி.எஸ்.டி ஆணை யம் வரை சென்றடைய, உடனே நடவடிக்கை யில் இறங்கிய ஐ.ஜி. அஸ்ராகார்க், தென்காசி மாவட்ட எஸ்.பி.யான கிருஷ்ண ராஜை விரைவு படுத்த, பாஞ்சாகுளம் வந்த கரிவலம்வந்த நல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவத்திற்கு காரணமான நாட்டாமை மகேஸ்வரன் தலைமறைவாகி விட்டார்.

மாவட்ட கலெக்டர் ஆகாஷின் உத்தரவுப்படி சங்கரன்கோவில் கோட்டாட்சி யர் சுப்புலட்சுமி, தாசில்தார் பாலு தலைமையி லான வருவாய்துறையினர் மகேஸ்வரன் நடத்திவந்த பெட்டிக்கடைக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 5 பேர் மீது கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஸ்வரன், வீடியோ எடுத்த ராமச்சந்திரன் ஆகிய இருவரைக் கைது செய்தவர்கள், முருகன், குமார், சுதா ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

ss

Advertisment

கிராமத்தில் பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த பொன்னுத்தாய், "ஆம்பளைங்க இல்லாத நேரத்தில வந்து கேச வாபஸ் வாங்குங்கன்னு மெரட்டுறாக. நாங்க சொற்ப குடும்பங்கதான் இங்க இருக்கோம். மத்தவங்க காலனியில இருக்காங்க. எங்களுக்குன்னு நெலம் கிடையா துங்க. குடிதண்ணி எடுக்கப் போவ முடியல. ரெண்டு வருஷமா பிரச்சினை நடக்குய்யா'' என வேதனைப்பட்டனர். தங்களின் பெயர்களைச் சொல்ல விரும்பாத பெரும் பான்மை சமூகத்தைச் சார்ந்த பெண்களோ, "கல்யாண நிகழ்ச்சியில வெளியூர்க்காரங்கதான் பேசிட்டிருந் தாங்க. தவிர, ஊர்ல கோயில் கட்டணும்னுதான் நாங்க கூட்டம் போட்டு பேசினோம். அவுங்க கேசு குடுக்காங்கன்னு நாங்க ஒதுங்கிட் டோம். அவுங்ககிட்ட பேசவேயில்ல. சமரசத்துக்கு முடியாதுன்னுட்டாங்க. வம்புக்கு போவணும்னு எங்களுக்கு என்ன அவசியமா? இங்க எந்தவொரு பிரச்சனையும் இல்லய்யா'' என்று முடித்துக்கொண்டனர். இறுக்கமாகக் காணப்படுகிறது கிராமம்.

ss

மாவட்ட கலெக்டரான ஆகாஷ், "கிராமத்தில் சிறுவர் சிறுமி யர் தின்பண்டங்கள் கேட்டதற்கு தர மறுத்ததாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளின் அடிப்படையில், கரி வலம்வந்தநல்லூர் காவல் நிலையத் தில் குற்ற எண் 377/2022 பிரிவு 153 (ஆ) ஐ.பி.சி.ன்படி வழக்கு பதிவு செய் யப்பட்டு, மகேஸ்வரன், ராமச்சந்திரன் கைது செய்யப்பட்டனர். மேலும் குற்ற விசாரணை முறைச்சட்டம் 1973 பிரிவு 133 (1) (ஆ) கீழ் வருவதால் மஜரா பாஞ்சாகுளத்தில் மகேஷ்வரன் நடத்திவரும் பெட்டிக்கடை தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது'' என்றார்.

குழந்தைகளின் மீதான தீண்டாமைத் தாக்குதல் அக்னி திராவகத்தைவிட ஆபத்தானது.

-செய்தி மற்றும் படங்கள்: ப.இராம்குமார்

nkn240922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe