நீதிபதிகள் நியமனத்தில் தீண்டாமை! வழக்கறிஞர்கள் கொந்தளிப்பு!

ss

யர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினரும் இடம்பெறும் வகையில் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த மார்ச் 3-ஆம்தேதி நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்பட, அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் கலந்துகொண்டன.

அதில் திருமாவளவன் பேசியபோது, "உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 12 பேரை நியமனம் செய்யவுள்ளனர். அதில், அனைத்து பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களை நியமிக்கவேண்டும். தென்மாவட்டங்களிலுள்ள பிறன்மலைக்கள்ளர், அருந்ததியர், மறவர், ஆதிதிராவிடர் சமுதாயங் களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நீதிமன்ற நியமனங் களில் இல்லை என்ற புகார் உள்ளது. இது தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங் களும் தீர்மானம் நிறைவேற்றி உரிய நீதிபதிகளின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டுள்ளார்கள். சமூகநீதியைப் பின்பற்றுவதற்கு உரிய வழிகாட்டுதல் களை அரசும் சட்டத்துறையும் வழங்கவேண்டும். கொலிஜியம், மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையிலிருப்பது சமூக நீதிக்கு எதிரானது.

ss

மேலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே சட்டத்தில் தரம்வாய்ந்தவர்கள், நேர்மை யானவர்கள், சட்டநுணுக்கம் தெரிந்தவர்கள், வல்லவர்கள் என்று அவர்களாகவே தீர்மானித்துக் கொண்டு இப்படிப்பட்ட அணுகுமுறைகளைக் கையாளுகிறார்கள். இது சரியான அணுகுமுறை அல்ல. தந்தை பெரியார் சொல்வதுபோல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து உச்சிக்குடுமிமன்றமாகவே உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றங்களும் செயல்படுகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது

யர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமூகத்தினரும் இடம்பெறும் வகையில் பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த மார்ச் 3-ஆம்தேதி நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்பட, அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களும் கலந்துகொண்டன.

அதில் திருமாவளவன் பேசியபோது, "உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 12 பேரை நியமனம் செய்யவுள்ளனர். அதில், அனைத்து பாதிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களை நியமிக்கவேண்டும். தென்மாவட்டங்களிலுள்ள பிறன்மலைக்கள்ளர், அருந்ததியர், மறவர், ஆதிதிராவிடர் சமுதாயங் களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நீதிமன்ற நியமனங் களில் இல்லை என்ற புகார் உள்ளது. இது தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங் களும் தீர்மானம் நிறைவேற்றி உரிய நீதிபதிகளின் கவனத்திற்கும் கொண்டுசென்றுள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சரை சந்தித்து முறையிட்டுள்ளார்கள். சமூகநீதியைப் பின்பற்றுவதற்கு உரிய வழிகாட்டுதல் களை அரசும் சட்டத்துறையும் வழங்கவேண்டும். கொலிஜியம், மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையிலிருப்பது சமூக நீதிக்கு எதிரானது.

ss

மேலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே சட்டத்தில் தரம்வாய்ந்தவர்கள், நேர்மை யானவர்கள், சட்டநுணுக்கம் தெரிந்தவர்கள், வல்லவர்கள் என்று அவர்களாகவே தீர்மானித்துக் கொண்டு இப்படிப்பட்ட அணுகுமுறைகளைக் கையாளுகிறார்கள். இது சரியான அணுகுமுறை அல்ல. தந்தை பெரியார் சொல்வதுபோல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து உச்சிக்குடுமிமன்றமாகவே உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றங்களும் செயல்படுகின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதேபோன்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகளை நீதிபதிகளாகக் கொண்டு வரவே புதிய அமைப்பு முறையை அறிமுகப்படுத்து கின்றனர். இவை இந்திய அரசியல் சட்டத்திற்கும், அனைத்து சமூகத்திற்கும் எதிரானவை. தற்போது உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றங்களிலும் 70 சதவீதத்திற்கும் மேல் உயர்சாதியினரே நீதிபதிகளாக இருக்கின்றனர். தற்போது இருக்கும் முறையை மாற்றி அனைத்து சமூகத்தினரும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக வர வாய்ப்பை ஏற்படுத்தித் தர, தற்போதிருக்கும் முறையை மாற்றி, இடஒதுக்கீட்டு அடிப்படையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய புதிய சட்ட அமைப்பை உருவாக்கவேண்டும்''’என்றார்.

இந்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் பேசினோம். “"நீதிபதிகள் நியமனத்தில் தீண்டாமை காலம்கால மாக இருந்துவருகிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை அரசியல் கோட்பாட்டினை பின்பற்றி தான் நீதிபதிகள் நியமனம் நடக்கவேண்டும். அதில் முக்கியமான கோட்பாடு சமூக நீதி. அது அரசியல் சட்டத்தின் முகப்புரையிலேயே இருக்கிறது. எல்லா சமூகத்திற்கும் சமமான பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். நீதித்துறை நிர்வாகம் எல்லாருக்கு மானதாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் என்ன சிக்கல் என்றால் சுதந்திரமடைந்து 1980 வரை, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் ஒரேயொரு பட்டியல் சமூகத்தினரோ, ஒரே ஒரு பிற்பட்ட வகுப்பினரோகூட நீதிபதிகளாக நியமிக்கப்பட வில்லை. 100% உயர்சாதியினரே நீதிபதிகளாக இருந்தார்கள்.

முதல்முறையாக பாத்திமா பீவி 1989-ல் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதற்குமுன் ஒரே ஒருமுறை தமிழ்நாட்டிலிருந்து பட்டியலினத்திலிருந்து வரதராஜன் என்பவர் நீதிபதியாக முதன்முதலில் தேர்வாகினார். அதுவும் பெரியாரின் கடும்முயற்சியால். எஸ்.சி., எஸ்.டி., ஐ.ஏ.எஸ். கூட்டமைப்பினர் கூட்டிய சிறப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரியார் "நீங்கள் கலெக்டராகக்கூட ஆகிவிடலாம். ஆனால் அருகிலுள்ள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக ஒரு பட்டியல் இனத்தவர்கூட இல்லை' என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது கலைஞர் முதலமைச்சராக இருந்ததால், ‘"ஐயா சொல்வது உண்மையா'’என்று சட்ட அமைச்சர் மாதவனிடம் கேட்க, அவர், "ஆமாம் தலைவரே ஒரு எஸ்.சி., எஸ்.டி.கூட இதுவரை உயர் நீதிமன்றத்தில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக வந்ததில்லை'’என்று சொல்ல, ‘"உடனே இதற்கான முயற்சி எடுங்கள்' என்று சொல்லி அதற்கான முயற்சியெடுத்து பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அவரை நீதிபதியாக்கினர். ஆனாலும், தற்போது வரை 80% உயர்சாதியினரே நீதிபதிகளாக உள்ளனர். மற்ற வகுப்பினருக்கு அதற்கான தகுதியே இல்லையா?

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, “"2017-லிலிருந்து 2023 வரை 554 பேர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நிய மிக்கப்பட்டனர். அவர்களில் பிற்படுத்தப்பட்டவர் கள் 58 பேர், எஸ்.சி. 19 பேர், எஸ்.டி. 6 பேர், பிராமணர்கள் மட்டும் 430 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது 77 சதவீதம். இது எந்த வகையில் நியாயம்? வெறும் பத்து சதவீதத்திற்கும் கீழுள்ளவர்கள் 80 சதவீத இடத்தை எடுத்துக்கொண்டு 90% உள்ளவர்களுக்கு பத்து சதவீத இடத்தைக் கொடுப்பது என்ன நியாயம்? அரசியல் சட்டத்தின் காவலனாக இருக்கும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகிய இரண்டுமே சமூக நீதியை அரசியல் சட்டத்தின் கோட்பாட்டை கடைப்பிடிக்கவில்லை என்றால் என்ன செய்வது? உச்ச நீதிமன்றத்தில் இன்றும் 70% பேர் பார்ப் பனர்களே உள்ளனர். நீதிபதிகளை தேர்வுசெய்யும் கொலிஜியம் அமைப்பு, உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள், ஒவ்வொரு மாநிலத்திலுமுள்ள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் இரண்டு சீனியர் நீதிபதிகள் கொண்ட குழுவே ஆகும். இவர்கள் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்களைத் தேர்வுசெய்து கொலிஜியத்துக்கு அனுப்பி வைக்கின்றனர். இறுதியாக ஜனாதிபதி அவர்களை நீதிபதியாக நியமிக்கிறார்.

ss

ஆரம்பத்தில் இந்த சிஸ்டம் கிடையாது. கொலிஜியம் எந்த அடிப்படையில் இவர்களைத் தேர்வுசெய்கிறது என்று எந்தவிதத் தெளிவும் இல்லை. தமிழ்நாடு வழக்கறிஞர்கள் அனைவரும் சேர்ந்து வைக்கும் கோரிக்கை, அனைத்து சமுதாயத்திற்கும், அனைத்து சாதியினருக்கும் சரியான பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும். பிறமலைக்கள்ளர், வண்ணார், பிள்ளைமார், மறவர், ஆதிதிராவிடர், இஸ்லாமியர் என அனைவருக்கும் சமமான பிரதிநிதித்துவத்தைக் கொடுங்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு முன்னுரிமை கொடுத்தால் ஒரு சாதி ஆதிக்கத்திற்குதானே நீதித்துறை போகும்?

தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் மற்றும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கமும் தீர்மானம் போட்டு அதை உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் நேரில்சென்று கொடுத்துவிட்டோம். சட்ட அமைச்சர்களைப் பார்த்து ஒன்றிய, மாநில சட்டமன்றங்களைப் பார்த்தும் கொடுத்துவிட் டோம். அதேபோன்று ஒன்றிய அரசு கொண்டு வரும் நீதிபதிகள் தேர்வுக்கான வழிமுறையும் சிக்கலாக இருக்கிறது. பிரதமர், சட்ட அமைச்சர், உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒரு லிஸ்ட் போட்டு, சி.பி.ஐ., தேர்தல் கமிஷனரை தேர்ந்தெடுப்பதுபோன்று இருக்கிறது. இதை முதலில் மாற்றியமைக்கவேண்டும்

நம் அரசியல் சாசனத்திலுள்ள சட்ட முன்வடிவில் உள்ளதுபோன்று அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில், இட ஒதுக்கீட்டு அடிப்படையில் நீதிபதிகள் தேர்வு இருக்கவேண்டும். தேர்வாகப் போகும் வழக்கறிஞர் எந்த அளவுக்கு நீதிமன்றங்களில் முறையாக நேர்மையாக வாதாடி உள்ளார், எவ்வாறு வாதத் திறமை உள்ளது, அவரின் அறிவுத்திறன் செயல்பாடுகள் ஆகியவற்றை உளவுப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு மட்டுமல்லாது பார் கவுன்சில் வழக்கறிஞர் சங்கத்தின் பரிந்துரையையும் கேட்டு, சட்ட அமைச்சர்கள், அந்தந்த மாநில நிர்வாக ஒப்ஆதலையும் பெற்று நீதிபதிகளை தேர்வு செய்வது சரியாக இருக்கும்

தற்போது கூட 12 பேர் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களில் 6 பேர் பார்ப்பனர்களாகவும், 2 பேர் உயர்சாதியைச் சேர்ந்தவர்களாகவும் 2 பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக பரிந்துரைக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. இதனால் சமூக நீதிக்கு முன்மாதிரியாக உள்ள தமிழ்நாட்டின் அனைத்து வழக்கறிஞர் சங்கங்களும், அனைத்து மாவட்ட வழக்கறிஞர் சங்கங்களும் ஒன்றிணைந்து போராட முன்வந்துள்ளோம். எங்களது நியாயமான கோரிக்கையை உச்ச நீதிமன்றமும் ஒன்றிய அரசும் அலட்சியம் செய்தால், போராட்டத்தை இந்திய அளவில் கொண்டுசெல்வோம்''’என்றார்.

முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹரிபரந்தாமன் மற்றும் சந்துரு ஆகியோர் பிப்ரவரி 17-ஆம் தேதி அன்று சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினார்கள். அப்போது பேசிய சந்துரு, "உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்படும் நீதிபதிகள் பெரும்பாலும் உயர் சாதிய பின்புலத்திலேயே வருகிறார்கள்''’என்று குறிப்பிட்டார்.

தி.மு.க. எம்.பி. வில்சன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தனிநபர் மசோதா தற்போது பரவலான விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.

மதுரையில் தொடங்கிய வழக்கறிஞர்களின் போராட்டம் தேசிய அளவில் அரசியல் கவனத்தை ஏற்படுத்தவேண்டுமென வழக்கறிஞர்கள் சங்கத் தினர் எதிர்பார்க்கிறார்கள்.

nkn080325
இதையும் படியுங்கள்
Subscribe