ற்போது தேர்தல் நடந்த 5 மாநிலங்களில், இந்தியாவின் இதயம் போல் அமைந்திருக்கும் உத்தரபிரதேசத்தில் தொடர்ச்சி யாக இம்முறையும் படு தோல்வியைத் தழுவி யிருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் கட்சி. உத்தரப் பிரதேசம், காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் சொந்த மாநிலம் போன்றது. அங்கே, தனது 70 ஆண்டுகால தேர்தல் அரசியலில், கடந்த 2017 தேர்தலில்தான் முதன் முறையாக வெறும் 7 சீட்டுக்களை மட்டுமே வென்று, ஒற்றை இலக்க வெற்றி என்ற பெருத்த வர லாற்றுச் சரிவை காங்கிரஸ் சந்தித்தது. அப்போது காங்கிரஸின் வாக்கு சதவீதம் 6% ஆக இருந்தது. அவ்வளவு பெரிய இழப்பைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி, அதிலிருந்து மீள்வதற்கான ஏதேனும் நடவடிக்கையில் இறங்கியதா என்று பார்த்தோமானால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

congress

தொடர் தோல்வி!

உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதி, இந்திராகாந்தி குடும்பத்தின் செல்லத்தொகுதி எனலாம். அமேதி தொகுதியில் சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிட்டு வென்றுள்ளனர். குறிப்பாக ராகுல் காந்தி இத்தொகுதியில் மூன்று முறை தொடர்ச்சியாக வென்றிருக்கிறார். 2014-ம் ஆண்டு ஸ்மிர்தி இரானியை எதிர்த்து ராகுல் காந்தி வென்றபோதும், வாக்கு வித்தியாசம் சற்று குறைவாகவே இருந்தது. இதைப் புரிந்துகொண்ட ஸ்மிர்தி இரானி, அடுத்த ஐந் தாண்டுகளுக்கு தொடர்ச்சியாக அமேதிக்குள் சென்று மக்களைச் சந்தித்தவண்ணம் இருந்தார். அதன் பலனாக, 2019 தேர்தலில் ராகுல் காந்திக்கு அதிர்ச்சி வைத்தி யம் கொடுத்து வெற்றிபெற் றார். தோற்க வாய்ப்பிருப் பதை முன்கூட்டியே உணர்ந்த ராகுல், வயநாட்டிலும் போட்டியிட, நல்வாய்ப்பாக அங்கே வெற்றிபெற்று நாடாளுமன் றத்துக்குள் நுழைய முடிந்தது.

இந்த தோல்விக்குப் பிறகாவது காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் சுதாரித்துக் கொண்டார்களா என்று பார்த்தால், காங்கிரஸ் கட்சிக்கு யார் தலைமை வகிப்பது என்பதில் புதுக் குழப்பம் தொடங்கியது. சோனியாவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராக உருவெடுத்துவந்த ராகுல் காந்தி, 2017-ம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாகத் தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சந்தித்த தோல்விக்குப் பொறுப்பேற்று தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். யாருடைய சமாதானத்தை யும் ஏற்கவில்லை. இந்நிலையில், சோனியா காந்தி இடைக்காலத் தலைவர் பொறுப்புக்கு வந்தார். காங்கிரஸுக்கு வலிமையூட்ட நிரந்தரத் தலைவர் வேண்டுமென்று குலாம்நபி ஆசாத் தலைமையில் 23 மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இணைந்து அறிக்கைவிட்டனர். காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தம் தேவையென்று வலியுறுத்தினர். ஆனால் சோனியா காந்தியிடம் அதற்கு பெரிதாக ரியாக்சனே இல்லை.

Advertisment

congress

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி, கர்நாடகா, புதுச்சேரி, கோவா எனப் பல்வேறு மாநிலங்களில் தனது ஆட்சியை வரிசையாக பா.ஜ.க.வின் அதிகாரபல அர சியலுக்குப் பறிகொடுத்துவந்தது. இந்தியாவில் காங் கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. இதையெல்லாம் மதச் சார்பற்ற, முற்போக்கு சிந்தனை கொண்டவர்களும், அரசியல் கட்சிகளும் வருத்தமுடன் பார்த்துக்கொண் டிருக்க, காங்கிரஸ் கட்சி தரப்பிலோ அதுகுறித்த எவ்வித பதட்டத்தையும் காண இயலவில்லை. பா.ஜ.க. ஒவ்வொரு மாநிலத்திலும் திட்டமிட்டுச் செயல்படும் போது, காங்கிரஸ் தலைமையோ, அந்தந்த மாநிலப் பொறுப்பாளர்களை முடிவெடுக்கும்படி விட்டுவிட்டு வேடிக்கை பார்த்தது. காங்கிரஸின் மேலிடப் பார்வை யாளர்கள் என்பவர்கள் ஒப்புக்குக் கடமையாற்று பவர்களாகவே இருந்தார்கள்.

எழுச்சியில்லா எதிர்க்கட்சி!

இவற்றைத் தாண்டி, ஒரு தேசிய எதிர்க்கட்சிக் கான அடையாளமாக, மக்கள் பிரச்சனைகளில் மக்களுக்கு ஆதரவாகக் களமிறங்கி போராட்டம் நடத்துவது, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்துப் போராடுவது என்பதைச் சுத்தமாக மறந்தேவிட்டது காங்கிரஸ். டீமானிடைசேஷன், ஜி.எஸ்.டி., ரஃபேல் ஊழல், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை யேற்றம், டோல்கேட் கட்டணம் உயர்வு, நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, சி.ஏ.ஏ., வேளாண்மைச் சட்டங்கள் எனப் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ச்சி யாக இருந்தும், காங்கிரஸ் கட்சியோ பெரும்பாலும் சைலண்ட் மோடிலேயே இருந்தது. மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்காத எதிர்க்கட்சியை எப்படி தங்களுக்கான கட்சியாக மக்கள் பார்ப்பார் கள்? வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவ சாயிகளும், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி. சட்டங்களுக்கு எதிராக இஸ்லாமியர்களும் போராடினார்கள். தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். வலுவான போராட் டத்தை முன்னெடுத்திருக்க வேண்டிய காங்கிரஸ் கட்சியோ பல நேரங்களில் தனது இருப்பைக் காட்டிக்கொள்ளவேயில்லை.

Advertisment

cc

கூட்டணி சொதப்பல்!

இதர எதிர்க்கட்சியினருடன் கூட்டணி சேர்வதிலும் சோனியா காந்தி சொதப்பினார். கூட்டணிக்கு யார் தலைமையேற்பது என்ற ஈகோ பிரச்சனை முட்டுக்கட்டையாக இருந் தது. சரியான கூட்டணி அமையாததாலேயே பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வியை எதிர்கொண்டது. சமீபத்தில் நடந்துமுடிந்த 5 மாநிலத் தேர்தல்களை எடுத்துக்கொண்டால், ஏற்கனவே பலவீனமாக இருந்த காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. தவிர்த்த சில மாநிலக் கட்சி களோடு இணக்கமாகக் கூட்டணியில் சேர்ந்திருந்தால் உத்தரபிரதேசத்தில் இரட்டை இலக்கம் என்ற கவுரவமான இடங்களைப் பிடித்திருக்கலாம். கடந்த தேர்தலில் 6% வாக்குகளைப் பெற்றிருந்த காங்கிரஸ், இந்த தேர்தலில் இன்னும் தேய்ந்து, 2.33% வாக்குகளை மட்டுமே பெற்றது. மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி யைப் பிடிக்காமல் போனதற்கும் கூட்டணி அமையாததே காரணமாகும். அதேபோல கோவா, உத்தரகாண்டிலும் அதே சொதப்பல்தான் நடந்தது. பஞ்சாப் மாநிலத்திலோ, கடந்த ஓராண்டு காலமாக சித்து விளையாட்டில் சிக்கியதில், கடந்த 2017-ல் 77 இடங்களில் வென்றிருந்த காங்கிரஸ், தற்போது வெறும் 18 இடங்களில் மட்டுமே வென்று சின்னா பின்னமானது! சித்துவைக்கூட சமாளிக்க முடியா மல், காங்கிரஸ் முதல்வரை மாற்ற, அம்ரீந்தர் சிங் காங்கிரஸிலிருந்தே வெளியேறி புதுக்கட்சி தொடங்கி பா.ஜ.க.வை ஆதரிக்க, இந்த குழப்பத் துக்கு இடையே, தெளிவான அரசியலை முன்னெடுத்த ஆம் ஆத்மி மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்தது. ஆக, 5 மாநிலத் தேர்தலில் குறைந்தது 3 மாநிலங்களிலாவது வெற்றியைப் பறித்திருக்க வேண்டிய காங்கிரஸ், 5 மாநிலங் களிலும் தோல்வியைத் தழுவியது. அதன் எதிரொலியாக 5 மாநில காங்கிரஸ் தலைவர்களும் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.

காங்கிரஸ் இல்லாத இந்தியா

'காங்கிரஸ் முக்த் பாரத்' அதாவது 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்பதே பா.ஜ.க.வின் பிரச்சார மாக இருந்துவருகிறது. அதற்கேற்ப காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் ஆட்சியை இழந்தாலும் அவ்வப்போது சில மாநிலங்களில் வெற்றியையும் பெற்று நம்பிக்கை அளிக்கவும் தவறவில்லை. ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு சிறுகச்சிறுக கோமா நிலையை நோக்கிச்செல்வதாக உள்ளது. பா.ஜ.க. வின் திட்டமிட்ட தேர்தல் பிரச்சாரங்கள், இந்துத்துவா கொள்கையைத் தீவிரமாக மக்கள் மனதில் பதியவைக் கும் செயல்திட்டங்கள், அதிகார பலம், பண பலத்தின் முன்பாக காங் கிரஸ் கட்சி மிகவும் தள்ளாட்ட மாகவே காணப்படுகிறது. பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் தேர்தல் நெருங்கும்போது மட்டுமே அரசியல் களத்துக்கு வருவதும், ஏதேனும் படுகொலை, கற்பழிப்புச் சம்பவங்களின்போது பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறக் கிளம்புவதும் மட்டுமே அரசியலாகாது.

ஒருபுறம், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற மாநிலக் கட்சிகள் வலுவாக உருவெடுத்தாலும், காங்கிரஸ் கட்சியைப் போல் இந்தியா முழுவதும் பரவலான மக்கள் செல்வாக்கு இந்த கட்சிகளுக்கு கிடையாது என்பது உண்மை. எனவே இன்றைய சூழலிலும் காங்கிரஸ் கட்சியின் தேவை இந்தியாவுக்கு இருக்கிறது. பா.ஜ.க.வின் சிறுபான்மையினர் எதிர்ப்பு, இந்துத்துவ ஆதரவு அரசியலுக்கு எதிராகக் களமாடும் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. யானை தன் பலத்தை அறியாமல் கோவில் வாசலில் ஆசிர்வாதம் வழங்கிக்கொண்டு வாழ்வதுபோல், தனது பழம்பெருமை வரலாற்றை மறந்து ஏனோதானோ அரசியல் செய்துவருகிறது.

dd

இதோ, இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள குஜராத், இமாச்சலப்பிரதேசத்தில் பிரச்சாரத்தை மோடி தொடங்கிவிட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சி? குஜராத்தில் கடந்த தேர்தலில் பா.ஜ.க. 99 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங் களையும் வென்று, வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. அதேபோல், இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்தாலும், கடந்த ஆண்டில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றிகளைப் பெற்றிருந்தது. இப்படி யான சூழலில்... இப்போதே திட்டமிட்டு தீவிர மாகக் களமிறங்கினால் இவ்விரு மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றிபெறுவது சாத்தியமே.

அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலை இதே பாசிட்டிவ் எனர்ஜியோடு எதிர்கொண்டால், பா.ஜ.க.வுக்கு கடும் போட்டியை காங்கிரஸால் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதை இனியாவது உணருமா காங்கிரஸ் தலைமை?