மிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்று குறைந்து வருகிறது, அதேநேரத்தில் கொரோனாவால் இறப் பவர்களின் எண்ணிக்கை குறையாமல் ஆட்டம் காட்டுகிறது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம், "கிராமப் புறங்களில் இறப்பு நிகழ்வுகளில் பொதுமக்கள் அதிகளவு கூடுவதால்தான் தொற்று பரவுகிறது. அதனால் இறப்பு நிகழ்வு களுக்கு செல்வதைத் தவிர்க்கப் பாருங்கள். சென்றாலும் இடைவெளியை கடைப்பிடியுங்கள். அதேபோல் சுக நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் போதும் சமூக இடை வெளியை கடைப்பிடியுங்கள், கூட்டம் கூடாதீர்கள்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேநேரத்தில், "சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனாவால் இறந்தவர்களின் உடலைத் தரும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை' என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

Advertisment

dd

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், "இராணிப்பேட்டை சிப்காட்டில் இயங்கி வருகிறது பிரபலமான லெதர் கம்பெனி. அந்தக் கம்பெனியின் முக்கிய பொறுப் பில் இருந்த ஒரு பெண்மணி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவர் சிகிச்சையில் இருக்கும் போதே இறந்துவிட்டார். அப்படி இறந்தவரின் உடலை அடக்கம்செய்ய அவர்களது உறவினர்களிடமே தந்துள்ளது மருத்துவமனை நிர்வாகம். அந்த உடலை ஆம்புலன்சில் பி.பி. கிட் போட்டுக்கொண்டு எடுத்துச் சென்றவர்கள் நேராக சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்லாமல் அந்தப் பெண்மணியின் வீட்டுக்கு எடுத்துச்சென்று, வீட்டிற்குள் சிலபல நிமிடங் கள் வைத்திருந்து... காத் திருந்த பலரும் அஞ்சலி செலுத்தியபின், சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்துள்ளார்கள். இதுபற்றி கேட்டவர்களிடம், "கொரோனா குணமான பின் இறந்தார்' எனச் சொல்லியுள்ளார்கள். பிரபலமான ஒரு தனியார் மருத்துவமனை, "கொரோனா நோயாளிகள் குறித்த தகவல் களை மாவட்ட நிர்வாகத் தோடு பகிர்ந்துக்கொள்வ தில்லை' என மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரித்தார் என்கிறார்கள்.

திருப்பத்தூர் மாவட் டம், ஆம்பூரில் ஒரு சர்ச் பாதிரியார் கொரோனாவால் இறந்துள்ளார். அவரது உடல் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது பிரச்சினையானதும் தாமதமாக வந்த நகராட்சி சுகாதாரத்துறையினர், அந்த உடலை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றி அடக்கம் செய்தனர். "கொரோனா பாசிட்டிவ்' என சிகிச்சை பெற்று இறந்துபோகிறவர்களின் உடலைக் கொடுக்கும்போது "கொரோனா நெகடிவ்' என சான்று தருகிறார்கள்.

Advertisment

d

திருவண்ணாமலைக்கு அருகில் உள்ள 58 வயது பஞ்சாயத்து தலைவர் ஒருவர் நம்மிடம், "ஊர்ல 45 வயதான ஒருத்தர் இறந்துட்டார். தலைவர்ங்கற முறையில் அஞ்சலி செலுத்திட்டு தூரமா வந்து நின்னுக்கிட்டிருந்தேன். "நீ எப்படி தூரமா வந்து நிற்கலாம்?' அப்படின்னு சிலர் வந்து கேட்டாங்க. அரசாங்க நெறிமுறையைச் சொன்னா, "அரசாங்கம் சொல்றதைத்தான் கேட் பியா நீ? நாங்கதானே உனக்கு ஓட்டுப் போட்டோம்னு பிரச்சனை பண்றாங்க'' என நொந்துபோய் பேசினார்.

மக்களிடம் சுய கட்டுப்பாடு வராதவரை கொரோனா பரவல் தொடர்அலைகளை தடுக்க முடியாது.