பதக்கப் பட்டியலில் பின்தங்கி இருந்தாலும், கிடைத்த பதக்கங்கள் அனைத்தும் ஊக்கம் தருபவையாக இந்தியாவுக்கு அமைந்துள்ளன. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக வெள்ளி-வெண்கலப் பதக்கங்களை வாங்கியவர்கள் பலரும் எளிமையான கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். கடுமையாகப் போராடி விளையாட்டுத் துறையில் இடம்பிடித்து, ஒலிம்பிக் வரை முன்னேறி பதக்கம் வென்றிருக்கிறார்கள்.
பேட்மின்டனில் பி.வி.சிந்து, பளு தூக்குதலில் மீராபாய், குத்துச்சண்டையில் லவ்லினா, மல்யுத்தத்தில் ரவிக்குமார்... என பதக்கப் பட்டியலில் இந்தியாவின் இடத்தைக் கௌரவப் படுத்தியுள்ளனர். அத்துடன், இந்திய ஹாக்கி அணியின் ஆடவர் -மகளிர் இரு பிரிவினரும் அரையிறுதிவரை முன்னேறியதும், அதில் ஆடவர் அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலம் வென்று பதக்கப் பட்டியலில் இடம் பெற்றிருப்பதும் பெருமையைத் தேடித் தந்துள்ளது.
இந்தியாவின் தேசிய விளையாட்டு எனப்படும் ஹாக்கியில் ரொம்பவும் பின்னடைவு ஏற்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து மீண்டு, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய மகளிர் ஹாக்கி அணி ஒலிம்பிக் அரையிறுதிக்குள் முதன்முறையாக நுழைந்ததும், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், தனது 74 வயதையும் மறந்து உற்சாகத்தில் துள்ளுகிறார். உடனே அவர்களை வாழ்த்தி வீடியோ பதிவு செய்கிறார். அதேபோல், இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெங்கலப் பதக்கத்தை வென்றதும் அந்த அணியினரை வாழ்த்தி வீடியோ கான்பரன்ஸில் பேசுகிறார். இந்திய ஹாக்கி அணிகளின் வெற்றிகளுக்காக ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் மட்டும் ஏன் அவ்வளவு உற்சாகம் கொள்கிறார்? ஏன் இந்திய ஹாக்கி அணியினரின் ஜெர்ஸியின் முன்புறத்தில் ஒடிஷா என்று எழுதப்பட்டிருக்கிறது? ஏனென்றால் அவர்தான் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த வீரர்களுக்கு ஸ்பான்சராக இருக்கிறார்.
2018-ம் ஆண்டுவரை இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சராக இருந

2018-ம் ஆண்டுவரை இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சராக இருந்த சகாரா நிறுவனம், தனது ஸ்பான்சர் ஷிப்பிலிருந்து விலகியதும், இந்திய அணிக்கு ஸ்பான்சர் செய்ய வேறெந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை. அப்போதுதான் ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், இந்திய ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்தார். இந்திய ஆடவர் அணிக்கு மட்டுமின்றி, ஜூனியர், சீனியர் என்ற இரு பிரிவுகளிலுமுள்ள ஆடவர், பெண்கள் அணிகளுக்கு 2018-2023 வரை 5 ஆண்டுகளுக்கு 150 கோடிக்கு ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ஹாக்கி அணிகளுக்கு புத்துணர்வூட்டியதாலேயே இன்றைய வரலாற்று வெற்றி விளைந்துள்ளது. இதுகுறித்து, மேலும் தகவல்களை அறிந்துகொள்ள ஒடிஷா மாநிலத்தின் விளையாட்டுத்துறை செயலாளர் வினீல் கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்டோம்.
வாழ்த்துகள் சார். இந்திய ஹாக்கி அணிகளுக்கு ஸ்பான்சர் செய்ய ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் முன்வந்ததன் காரணம் என்ன?
வினீல் கிருஷ்ணா: ஒடிஷா மாநிலத்தில் ஹாக்கி அனைவராலும் விரும்பப்படும் விளை யாட்டாக உள்ளது. தற்போதுள்ள ஹாக்கி ஆடவர் அணியின் துணைகேப்டன் பிரேந்திர லக்ரா, மகளிர் ஹாக்கி அணியின் துணை கேப்டன் டீப்கிரேஸ் எக்கா ஆகியோர் ஒடிஷா வைச் சேர்ந்தவர்கள். இவர்களைத் தவிர, ஒடிஷா மாநிலத்திலிருந்து திலீப் திர்கே, இக்னேஸ் திர்கே, பிரபோத் திர்கே, சுபத்ரா ப்ரதான், அனுபா பார்லா, பினிடா டோப்போ உட்பட பல் வேறு வீரர், வீராங்கனை கள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளனர். எங்கள் முதல்வர் நவீன் பட்நாயக்கே ஒரு முன்னாள் ஹாக்கி ப்ளேயர்தான். அவர் கோல்கீப்பராகச் செயல்பட்டவர். இந்த ஒப்பந்தம், இந்தியாவுக்கு எங்களுடைய பரிசு என்று ஒடிஷா முதல்வர் கூறியுள்ளார்.
இந்த ஸ்பான்சர்ஷிப் மூலமாக எத்தகைய உதவிகள் இந்திய வீரர்களுக்கு அளிக்கப்படுகிறது?
வினீல் கிருஷ்ணா: வீரர்களுக்கான உடை, விளையாட்டு உபகரணங்கள், பயிற்சிகள், பல்வேறு டோர்னமென்ட்களில் கலந்துகொள்வதற்கான அனைத்து செலவுகளும் இதில் அடங்கும். ஹாக்கி இந்தியா அமைப்புடன் ஒடிஷா மாநில அரசு இணைந்து, ஆடவர் உலகக்கோப்பை, வேர்ல்ட் லீக், ப்ரோ-லீக், ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டிகள் போன்ற பெரிய டோர்னமென்ட்களை புவனேஷ்வரில் நடத்தி யுள்ளது. புவனேஷ்வரிலுள்ள கலிங்கா ஸ்டேடி யத்தையடுத்து, சுந்தர்கார் மாவட்டத்திலுள்ள ரூர்கேலாவில் உலகிலேயே மிகப்பெரிய ஹாக்கி ஸ்டேடியத்தை ஒடிஷா அரசு கட்டிவருகிறது. இந்த ஸ்டேடியத்திற்கு, பழங்குடியின மக்களின் தலைவரான பிர்சா முண்டாவின் பெயர் சூட்டப்பட்டு, பிர்சா முண்டா வேர்ல்ட்வைட் ஹாக்கி ஸ்டேடியம் என்று அழைக்கப்படுகிறது. 2018-ம் ஆண்டில், ஆண்கள் ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை டோர்ணமென்டை வெற்றிகரமாக நடத்தியதால், வரவுள்ள 2023-ம் ஆண்டு உலகக்கோப்பை ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பையும் ஒடிஷாவில்தான் நடைபெறவுள்ளது.
கிராமப்புற விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன?
வினீல் கிருஷ்ணா: பழங்குடியின மக்கள் நிறைந்துள்ள எங்கள் மாநிலத்தில், இந்த குழந்தைகள், ஹாக்கி ஸ்டிக்கை ஊன்றித்தான் நடக்கவே கற்றுக் கொள்கிறார்கள். அந்த அளவுக்கு ஹாக்கி விளை யாட்டு, இங் குள்ள மக்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாக உள்ளது" என்று ஒடிஷா முதல்வர் குறிப் பிட்டுள்ளார். எனவே, இங்குள்ள கிராமப்புற இளைஞர்களை ஹாக்கி விளையாட்டுக்குத் தயார்படுத்துவதற்காக மட்டுமே தனியாக 200 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். 'ஹாக்கி விளையாட்டின் தொட்டில்' எனப்படும் ஒடிஷாவின் சுந்தர்கார் மாவட்டத்திலிருந்து எண்ணற்ற ஹாக்கி வீரர்கள் உருவாகியுள்ளனர். களிமண் தரையில் விளையாடிப் பயிற்சியெடுத்துவிட்டு அதன்பின்னர் சிந்தெடிக் மைதானத்தில் விளையாடும்போது மிகவும் கடினமாகிவிடும். எனவே கிராமப்புற ஹாக்கி வீரர்களுக்கு தொடக்கத்திலேயே மேம்பட்ட பயிற்சியை அளிப்பதற்காக நிறைய ஹை-டெக் பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 9 வயதுச் சிறுவர்களாக இருக்கும்போதே கிராமப்புற விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு திறமையான வீரர்களாக உருவாக்கப்படுகிறார்கள்.
சீனா, ஜப்பானால் ஒலிம்பிக்கில் சாதிக்கமுடிந்த அள வுக்கு இந்தியாவால் சாதிக்க முடியவில் லையே ஏன்?
வினீல் கிருஷ்ணா: அந்த நாடுகளில் உள்ளதைப்போல் விளை யாட்டின்மீது ஆர்வமுள்ள கலாச்சாரம், வாழ்க்கை முறை இந்தியாவிலும் உருவாகும் போது நம்மாலும் அதேபோல் சாதிக்க முடியும். அதற்கு முன்னெடுப்பாக, இந்திய ஹாக்கியின் தலைநகரமாக ஒடிஷாவை உருவாக்குவதே முதன்மை இலக்காகக் கருதி ஒடிஷா முதல்வர் செயல்படு கிறார் என்றார்.
ஒரேயொரு மாநிலம், இந்திய ஹாக்கி அணிகளுக்கான அனைத்துப் பொறுப்புக் களையும் ஏற்றுக்கொண்டு, ஒலிம்பிக்கிலும் பதக்கத்தை வென்று சாதித்துள்ளது. பல்வேறு மாநிலங்களின் திறன் களை உள்ளடக்கிய ஒன்றி யம்தான் இந்தியா என்பதை இது நிரூபித்துள்ளது. இந்திய ஒன்றியத்திலுள்ள மற்ற மாநிலங்களும் ஒடிஷாவைப் போல முயற்சியெடுக்கும்போது மற்ற நாடுகளைப்போல் நம்மா லும் ஒலிம்பிக் பதக்கங்களைக் குவிக்க முடியுமென்ற நம்பிக்கை பிறக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த முறை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழக விளையாட்டு வீரர் களுக்கான சிறப்பு கொரோனா முகாம் நடத்தி, அவர்களுக்கான ஊக்கத் தொகையை அறிவித்ததுடன், ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு அரசு வேலை வாய்ப்பையும் அறிவித்தது, விளையாட்டுத் துறைக்கு நம்பிக்கையை ஏற் படுத்தியுள்ளது.
_________________
இதிலேயுமா சாதி?
இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு இணையாக, அதேயளவு எதிர்பார்ப்பை எழுப்பிய மகளிர் ஹாக்கி அணி பிரிட்டனுடனான ஆட்டத்தில் 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவினாலும், நான்காம் இடத்திற்கு வந்திருப்பது விளையாட்டு ஆர்வலர்களை ஊக்கப்படுத்தியுள்ளது.
மகளிர் அணியினரைப் பலரும் பாராட்டி வரும் வேளையில், அந்த அணியில் உள்ள வந்தனாவின் குடும்பத்தார் தங்களை சாதியப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும், கொலைமிரட்டல் விடுத்ததாகவும் காவல் நிலைய வாசல் ஏறியிருக்கிறார்கள்.
மகளிர் அணி, தொடக்கத்தில் முதலிரண்டு ஆட்டங்களைத் தோற்ற நிலையில் அடுத்தடுத்த கட்டத்துக்குச் செல்லுமா என்று சந்தேகத்துடன் பார்க்கப்பட்டது. ஆனால் ஹாக்கி மகளிர் பிரிவில் வலுவான அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும் திடீர் நம்பிக்கை எழத் தொடங்கியது. எனினும் அரையிறுதியில் அர்ஜென்டினா முன்னிலை பெற்றதால் வெள்ளிப் பதக்கத்தை இந்தியா தவறவிட்டது. இதையடுத்து பிரிட்டன் அணியுடனான ஆட்டத்தில் வென்றால்தான் ஆறுதல் பரிசான வெண்கலம் கிடைக்கும் நிலை உருவாகியது.
அர்ஜென்டினாவுடனான ஆட்டத்தில் மகளிர் ஹாக்கி அணி தோற்றதையெடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்துவாரில் மகளிர் ஹாக்கி அணியில் ஆடும் வந்தனா கட்டாரியா வீட்டு முன் சில இளைஞர்கள் வெடி வெடித்துக் கொண்டாடியதுடன், சாதிய ரீதியிலான வசையை உதிர்த்ததுடன், தலித் சமுதாயத்தினர் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம்பெற்றதுதான் தோல்விக்குக் காரணம் என சொல்லி மிரட்டலும் விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இதையடுத்து வந்தனாவின் சகோதரர் சேகர், காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விஜய்பால் என்பவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரிடம், அவர் வீட்டுமுன் வசைபாடி, ஆட்டம் போட்ட மற்றவர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. "எங்கள் குடும்பமே தற்போது பயத்திலிருக்கிறது. அவர்கள் வசைபாடியதுடன் எங்கள் சமூகத்தினர் ஆடியதுதான் தோல்விக்குக் காரணம் என்றும், எங்களைக் கொல்வோம் என்றும் கத்தினர்''’என்கிறார் வருத்தமாக.
இதே வந்தனா தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மூன்று கோல்களை அடித்தபோது வாழ்த்திப் பேசிய வாய்கள், தோற்கும் போது வசைபாடும் என்றால் அதற்கு எந்த மரியாதையும் இல்லை.
-க.சுப்பிரமணியன்