சட்டப்பேரவையில் தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக செயல்படுகிறார் என்று ஆளுநர் மீது குற்றம் சுமத்துகிறார் பேரவையின் அவை முன்னவரும் சீனியர் அமைச்சருமான துரைமுருகன்.
புத்தாண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்குவது வழக்கம். அதனடிப்படையில் ஜனவரி 6-ந்தேதி இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. இதற்காக சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநருக்கு உரிய அணிவகுப்பு மரியாதையை முறைப்படி வழங்கியது அரசு. ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தி உரிய மரியாதையுடன் ஆளுநரை சபைக்கு அழைத்து வந்தார் சபாநாயகர்.
மிகச்சரியாக 9:30 மணிக்கு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை துவங்கியது. இதனையடுத்து ஆளுநர் தனது உரையை வாசிக்க வேண்டும். ஆனால், தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கப் பட்டதாகக் கூறி, தனது உரையை வாசிக்க மறுத்து அவையிலிருந்து அவசர மாக வெளியேறினார் ஆளுநர் ரவி. இதனால் அவையில் பரபரப்பு ஏற் பட்டது. இதனையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்து முடித்தார் சபாநாயகர் அப்பாவு.
இந்தச் சூழலில், ஆளுந

இந்தச் சூழலில், ஆளுநர் ஏன் அவையை புறக்கணித்தார் என்பதற்கு விளக்கமளித்த ராஜ்பவன், "அரசியல் சட்டமும், தேசிய கீதமும் தமிழக சட்டசபையில் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசிய லமைப்பு சட்டத்தில் கூறி யுள்ள முதல் கடமை. ஆளுநர் ரவி சட்ட சபைக்கு வந்ததும் தமிழ்த் தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது. தேசிய கீதத்தை பாடுவதற்கு முதல்வர் ஸ்டாலின், சபா நாயகர் ஆகியோருக்கு ஆளுநர் ரவி வலியுறுத்தி னார். ஆனால் தேசிய கீதம் பாட மறுப்பு தெரி விக்கப்பட்து. அரசிய லமைப்பு சட்டம், தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் ஆளுநர் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறினார். தேசிய கீதம் பாட மறுக்கப்பட் டது கவலைக்குரிய விஷயமாகும்' என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆளுநரின் புறக்கணிப்பைக் கண்டிக்கும் வகையில் பேசிய துரைமுருகன், "அரசியல் சாசனத்திற்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் பதவிக்கு தி.மு.க. எதிராக இருந்தாலும், அந்த பதவி இருக்கும் வரை அதில் இருப்பவருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதே கலைஞரின் கொள்கை. முந்தைய ஆண்டினைப் போல இந்த முறையும் உரையை படிக்காமல் ஆளுநர் சென்றுள்ளார். ஆளுநர் உரையின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து, உரையின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்பது தான் மரபு. இதனை சபாநாயகர் அப்பாவு, கடந்த ஆண்டே ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் தெளிவு படுத்தியிருந்தார். ஆனால், இந்த ஆண்டும் அதே காரணத்தைச் சொல்லி வெளியேறியிருக்கிறார் ஆளுநர். தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப் பாட்டின் மீதும் தமிழ்நாடு மக்களும், அரசும் மாறாத பற்று கொண்டது. தமிழ்நாட்டு பேரவை மரபுப்படி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடுவதே வழக்கம். ஆளுநரின் செயல்பாடு மூலம் அவரது உள்நோக்கம் என்ன என்பது தெளிவாகிறது'' என்று குறிப்பிட்டார்.
இதனையடுத்து, ஆளுநர் உரையில் அச்சிடப் பட்டவை மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெறும் என்ற தீர்மானத்தை துரைமுருகன் கொண்டுவந்தார். அந்த தீர்மானம் சட்டப்பேரவை யில் நிறைவேற்றப்பட்டதும், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டம் நிறைவடைந்தது.
கவர்னர் உரையின்போது தி.மு.க.வுக்கு எதிராக அமளியில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தனர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப் பினர்கள். இதற்காக அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரத்தில் தி.மு.க.வை எதிர்க்கும்வித மாக, "யார் அந்த சார்?' என்கிற பேட்ஜை ஒட்டிக்கொண்டு வந்திருந்தனர். பல்கலை பாலியல் விவகாரத்தை கடந்த 15 நாட்களாக பெரிதாக்கி வரும் அ.தி.மு.க.வினர், அதை முன்னிறுத்தி சட்டசபையில் அந்த பிரச்சனையை எழுப்பத் தயாராக வந்திருந்தனர். அதற்கேற்ப, பாலியல் விவகாரத்தை கண்டிக்கும் வகையில் சபையில் கூச்சலிட்டனர். சபை நடவடிக்கைக்கு அ.தி.மு.க. வினர் குந்தகம் விளைவித்ததால் அவர்களை அதிரடியாக வெளியேற்றினார் சபாநாயகர்.
கவர்னரின் புறக்கணிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கவனம் ஈர்த்ததால், அ.தி.மு.க. திட்டமிட்டிருந்த இந்த விவகாரம் புஸ்வாண மாகிப்போனது. கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்து வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், உரையைப் புறக்கணித்த கவர்னரை கண்டித்து முழக்கமிட்டுவிட்டு வெளி நடப்பு செய்தனர். அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைக்கு ஆளுநர்தான் பொறுப்பு என்றும் குற்றம்சாட்டியது காங்கிரஸ்.
இந்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநரின் புறக்கணிப்பு, அ.தி.மு.க.வினர் வெளியேற்றம், காங்கிரஸ் வெளிநடப்பு என ஒரே பரபரப்பாக இருந்தது.
உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர் ரவியின் செயலை விமர்சித்த தி.மு.க. உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள், "தமிழகத்தையும், தமிழ்நாட்டு மக்களையும் அவமதித்துள்ளார் ரவி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசுடன் மோதல் போக்கினை அவர் கைவிட மறுக்கிறார். அரசின் சாதனைகளைப் பேச அவருக்கு விருப்பம் இல்லை. அதனால்தான் மரபுக்கு எதிராக ஒரு நொண்டிச்சாக்கினைக் கூறி வெளியேறினார் கவர்னர்'' என்று குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி, இம்மாதம் 11-ந் தேதிவரை சட்டப்பேரவையை நடத்தத் தீர்மானித்தார் சபா நாயகர். இதனைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, "சட்டமன்றத்துக்கென ஒரு மரபு உள்ளது. ஆளுநருக்காகவெல்லாம் மரபுகளை மாற்ற முடியாது. கலவர நோக்கத்துடன் அ.தி.மு.க.வினர் நடந்துகொண்டதால் அவர்களை வெளியேற்றி னேன். விதி மீறல், சட்டமீறல் எல்லாம் ஆளுநர் மாளிகைக்கு கைவந்த கலையாக இருக்கிறது. இதுவரை எந்த ஆளுநரும் இப்படிப்பட்ட பிரச்சனையை உருவாக்கியதில்லை'' என்று கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தார்.