Advertisment

பல்கலைக்கழகம் யள் பதிப்பகம்! பந்தாடப்படும் மாணவர்கள்!

dd

கொரோனா லாக்டௌன், கல்வித் துறையைப் பெரிதும் பாதித்துள்ள நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கையால் அந்த பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ள னர். சமீபத்தில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள், இணைய தளத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தனர். அந்த கடிதம் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

Advertisment

அக்கடிதத்தில் பல்கலைக்கழகம் குறிப்பிட்டி ருந்த ஒரு பதிப்பகத்தில் மாணவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை அச்சிட்டு அதை

கொரோனா லாக்டௌன், கல்வித் துறையைப் பெரிதும் பாதித்துள்ள நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கையால் அந்த பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ள னர். சமீபத்தில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழ கத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள், இணைய தளத்தில் ஒரு கடிதத்தை வெளியிட்டிருந்தனர். அந்த கடிதம் தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

Advertisment

அக்கடிதத்தில் பல்கலைக்கழகம் குறிப்பிட்டி ருந்த ஒரு பதிப்பகத்தில் மாணவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை அச்சிட்டு அதை முழுப் புத்தகமாக வெளியிட அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, அச்சிடப்பட்ட கட்டுரைகளை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க முடியாமல் மாணவர்கள் வசமே வைத்திருந்த நிலையில், பல்கலைக்கழகம் இது குறித்து இன்னொரு சுற்றறிக்கை ஒன்றை வெளி யிட்டது. அதன்படி, முன்னதாக பல்கலைக்கழகம் எந்த பதிப்பகத்தில் கட்டுரைகளை அச்சிட அறிவுறுத்தியதோ, அந்த பதிப்பகத்தில் இருந்து வரக்கூடிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஏற்காது என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

dd

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கக்கூடிய கல்லூரிகளில், தமிழ்த் துறையில் உள்ள ஆராய்ச்சி மாணவர்களில் ஆயிரக்கணக் கானோர், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த அந்த பதிப்பகத்தில் தான் தங்களுடைய கட்டுரைகளை அச்சிட்டுள்ள னர். இந்நிலையில் அங்கே அச்சிடப்பட்ட கட்டுரைகளை ஏற்க முடியாது என்ற அறிவிப்பு மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக முறையிட்டதால், இவ்விவகாரம் குறித்து ஒரு குழு அமைத்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை அறிவிப்போம் என்று கூறியிருந்தனர். ஆனால், கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவேண்டிய ஜூன் மாத இறுதித் தேதிக்கு முன்னதாக, மாணவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாதென்ற பல்கலைக்கழகம், மாணவர்களின் கட்டுரைகளை நிராகரித்தது. அக்கட்டுரைகளை மாற்றுப் பதிப்பகத்தில் அச்சிட்டு பல்கலைக்கழகத்தில் வழங்க வேண்டும் என்று மாணவர்களுக்கு மின்னஞ்சலை அனுப்பியிருக்கிறது. இதில் இன்னொரு கொடுமை யாக, கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்தபின்னர் தாமதமாகக் கட்டுரை களை சமர்ப்பித்தால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை யையும் குறிப்பிட்டு அதிர்ச்சியளித்தது.

இவ்விவகாரத்துக்கு முன்பும் இந்த பதிப் பகத்தில் அச்சிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஏற்க மறுத்து, அபராதம் கட்டவைத்திருக்கிறது. தற்போது மீண்டும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. பல்கலைக்கழகத்துக்கும் குறிப்பிட்ட பதிப்பகத்துக்கு மான தனிப்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட் டுள்ள ஆராய்ச்சி மாணவர்களின் சிக்கலைத் தீர்க்க, உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தலையிட வேண்டுமென்றும், அபராதத்தொகை வசூலிப்பதைத் தடுக்க வேண்டுமென்றும் மாணவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

nkn060722
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe