"அரசு உத்தரவிட்டும் பல்கலைக்கழகம் பணி தராமல் 6 மாதமாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. ஆறு மாதமாக சம்பளமில் லாமல் குடும்பத்தை நடத்தமுடியாமல் சிரமப்படுகிறோம்'' என புலம்புகிறார்கள் அலுவலர்கள். 

Advertisment

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்த 41 கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படுமென்று அப்போதைய அ.தி.மு.க. அரசால் 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக 2019ஆம் ஆண்டே 14 உறுப்புக் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன. அதன்பின் 11.12.2020 அன்று மீதி 22 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டன. அப்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளாக இருந்த அரக்கோணம், திருப்பத்தூர், தென்னாங்கூர், கள்ளக்குறிச்சி, திருவெண்ணெய் நல்லூர் கல்லூரிகள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டன. 

Advertisment

உறுப்புக் கல்லூரிகளாக இருந்தபோது பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் பல்கலைக்கழக பதிவாளரால் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனர். இவர்களுக்கான ஊதியத்தை பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கிவந்தது. உறுப்புக் கல்லூரிகளை அரசுக் கல்லூரியாக மாற்றிய அரசாணையிலேயே, உறுப்புக் கல்லூரிகளாக இருந்தபோது பணியாற்றிய பணியாளர்களை அந்தந்த பல்கலைக்கழகமே பணியமர்த்திக்கொள்ள வேண்டு மென்று கூறியிருந்தது. அதே நேரத்தில், அரசு நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கும்வரை பல்கலைக்கழக பணியாளர்களே இங்கு பணியாற்ற வேண்டுமென்றும் சொல்லியுள்ளது. 

அதன்படி 5 உறுப்புக் கல்லூரி களில் நிதியாளர்களாக (பர்தார்) இருந்த அரக்கோணம் கவிதா, திருப்பத்தூர் சித்ரா, தென்னாங்கூர் சற்குணராஜ், கள்ளக்குறிச்சி பிரதாப்குமார், திருவெண்ணெய்நல்லூர் ஜோதிபாஸ் ஆகியோர் அந்தந்த கல்லூரிகளிலேயே பணியாற்றினர். அதன்பின் படிப்படி யாக அரசு உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்களை நியமிக்க, நியமிக்க பல்கலைக்கழக பணியாளர்கள் விடுவிக்கப்பட்டனர். உயர்கல்வித்துறை உத்தரவுப்படி உறுப்புக்கல்லூரிகளில் பணியாற்றியவர்களை பல்கலைக்கழகம் திரும்ப அழைத்து பல்லைக்கழகத்தில் காலியாகவுள்ள இடங்களில் நிரப்ப வேண்டும் அல்லது புதிய பணியிடங் களை உருவாக்கி அவர்களை பணி யமர்த்த வேண்டும். ஆனால் 5 நிதியாளர்களை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் மாற்றுப்பணி வழங்காமல் வைத்துள்ளது. 

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய முன்னாள் நிதியாளர் ஒருவர், "நான் 10 வருடங்களாக உறுப்புக் கல்லூரி நிதியாளராக இருந்துள்ளேன். உறுப்புக் கல்லூரியாக இருந்ததிலிருந்து 10 ஆண்டுகள் அப்பணியில் இருந்தேன். அரசுக் கல்லூரியாக மாற்றுவதாக அறிவித்தபோதே, எங்களையெல்லாம் பல்கலைக் கழகம் அதே பணியை தர வேண்டுமென்றும், காலியிடங்கள் இல்லையென்றால் அதற்கு ஈக்வலான பதவிகளை உருவாக்கி பணிகளை வழங்கவேண்டுமென்றும் உயர்கல்வித்துறை ஆணையில் கூறியிருந்தது. அரசு பணியாளர்களை நியமிக்கும்வரை எங்களை அங்கேயே பணியாற்றச் சொன்னது. கல்லூரி கல்வித்துறையில் கண்காணிப் பாளர்களாக பணியாற்றிக் கொண்டிருந்தவர்களை நிதி யாளர்களாக பதவி உயர் வளித்து, அரசு கல்லூரிகளில் நிதியாளர்களாக பணியமர்த் தியது உயர்கல்வித்துறை. இதனால் பல்கலைக்கழக பதிவாளரால் நியமிக்கப்பட்ட நிதியாளர்களை விடுவித்தது. திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் எங்களை பணியில் சேர்க்கவில்லை. வருகைப் பதிவேட்டிலும் கையெழுத்திட அனுமதிக்கவில்லை. கடந்த 5 மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. எங்களுக்கு மாற்றுப்பணி தரச்சொல்லி உயர்கல்வித்துறை செயலாளர் கடந்த 2025, ஜூன் 14ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால் பதிவாளரோ பணி தர மறுக்கிறார். இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர், தலைமைச் செயலாளர் எனச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டும் பணி வழங்கவில்லை. 

tvaluvar-university1

அதே நேரத்தில், 2023, ஜனவரியில். அரக்கோணம், திட்டக்குடி, திருப்பத்தூர், தென் னாங்கூர், கள்ளக்குறிச்சி, திருவெண்ணய்நல்லூரி லிருந்த உறுப்புக் கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றி உத்தரவிட்டபோது, இக்கல்லூரி முதல்வர்களை மாறுதல் மூலம் பணியமர்த்திக்கொள்ளலாம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்ட மறுநாளே பல்கலைக்கழகத்திற்கு இடப்பெயர்வு செய்து, பதிவாளர் ஆணை வழங்கினார். ஆனால் நாங்கள் 20 முறைக்கு மேல் பதிவாளர், உயர்கல்வித்துறை செயலாளரை சந்தித்தும் எங்களை பணியமர்த்தாமல் இருக்கிறார்கள். இதனால் வேலையில்லாமல், சம்பளமில்லாமல் எங்கள் குடும்பங்கள் தத்தளிக்கிறது'' என்றார்கள் வேதனையுடன். 

இதுகுறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் செந்தில்வேல்முருகனிடம் நாம் கேட்ட போது, "அவர்கள் நீதிமன்றத்தில் இப்போது வழக்கு தொடுத்துள்ளார்கள். அதனால் இதுகுறித்து நான் பேச முடியாது'' என்றார். 

பல்கலைக்கழக வட்டாரத் தினரோ, "இதற்கு முன்பு ஆறுமுகம் என்கிற துணைவேந்தர் இருந்தார். அவர் நிதியாளராக இருந்த ஜீனியர்களை பதவி உயர்வு தந்து காலியிடங்களில் நியமித்துவிட்டு ஓய்வு பெற்று விட்டார். காலியிடங்களில் அவர்கள் நியமிக்கப்பட்டதால் இந்த ஐவரை நியமிக்க முடியவில்லை. கவர்னர் மாளிகை உத்தரவுப்படி அப்படி செய்தே னென்று சொல்லப்பட்டது. விதிமுறைகளை மீறி அப்படி செய்தார். தற்போது உயர்கல்வித்துறை செயலாளராக உள்ள சங்கர், ஆறுமுகத்திடம் பயின்றவர். சட்டப்படி நட வடிக்கை எடுத்தால் ஆறுமுகம் பாதிக்கப்படுவார் என்பதால் ஆறுமுகத்தை காப்பாற்ற செயலாளர் முயற்சிக்கிறார். அதோடு தலைமைச்செயலாளர் சொல்லிட்டா செய்துடணுமா என்கிற ஈகோவும் இதில் உள்ளது'' என்றவர்கள், "இப்போது இவர்களை டெபுடேஷனில் அரசு சார்பிலான கல்லூரிகளில் பணியாற்ற தென்மாவட்டங்களுக்கு அனுப்ப உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம்'' என்கிறார்கள்.

தவிக்கும் அலுவலர்களுக்கு நீதி கிடைக்குமா?