Advertisment

பல்கலைக்கழக லீலை! அமைச்சர்கள் லிங்க்! -டெல்லிக்கு கவர்னர் ரிப்போர்ட்!

ministers

நிர்மலாதேவி விவகாரத்தை டெல்லியும் சீரியஸாக கவனிக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கம்ப்யூட்டரில் 9 மெசேஜ்கள் கர்நாடக தேர்தல் குறித்து விழுந்தாலும், பத்தாவது மெசேஜாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குறித்த மெசேஜாக விழுகிறது என்கிறார்கள் மத்திய உள்துறை அதிகாரிகள். கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பன்வாரிலால் புரோகித்தை தொடர்பு கொண்டு "என்ன நடக்குது' என விசாரித்திருக்கிறார். பிரதமரிடமும் விளக்கியிருக்கிறார். ""டெல்லிக்கு கவர்னர் ஒரு ரிப்போர்ட் அனுப்பியுள்ளார்'' என்கிறது கவர்னர் மாளிகை வட்டாரம்.

Advertisment

ministers

""உள்துறை அமைச்சகம் தமிழக கவர்னர் மாளிகை மீது அக்கறை காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தினகரன் ஆதரவு அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இ

நிர்மலாதேவி விவகாரத்தை டெல்லியும் சீரியஸாக கவனிக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கம்ப்யூட்டரில் 9 மெசேஜ்கள் கர்நாடக தேர்தல் குறித்து விழுந்தாலும், பத்தாவது மெசேஜாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குறித்த மெசேஜாக விழுகிறது என்கிறார்கள் மத்திய உள்துறை அதிகாரிகள். கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பன்வாரிலால் புரோகித்தை தொடர்பு கொண்டு "என்ன நடக்குது' என விசாரித்திருக்கிறார். பிரதமரிடமும் விளக்கியிருக்கிறார். ""டெல்லிக்கு கவர்னர் ஒரு ரிப்போர்ட் அனுப்பியுள்ளார்'' என்கிறது கவர்னர் மாளிகை வட்டாரம்.

Advertisment

ministers

""உள்துறை அமைச்சகம் தமிழக கவர்னர் மாளிகை மீது அக்கறை காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தினகரன் ஆதரவு அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அதிகபட்சம் ஜூன் மாதம் வரைதான் தள்ளி வைக்க முடியும். தீர்ப்பைப் பொறுத்து, 2019 மார்ச் மாதம் நடக்கும் பாராளுமன்றத் தேர்தலோடு சேர்த்துதான் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டி வரும். அந்த கணக்குப்படி பார்த்தால் தமிழகம் கவர்னர் ஆட்சியின் கீழ் பல மாதங்கள் இருக்கும். அதனை பா.ஜ.க.வுக்கு தேர்தல் லாபமாக மாற்ற வேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல கவர்னர் தேவை என்றுதான் மத்திய அரசு பன்வாரிலால் புரோகித்தை அனுப்பியது. ஆனால் எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக எல்லாம் போய்க் கொண்டிருக்கிறது'' என நம்மிடம் விளக்கினார்கள் மத்திய உள்துறையை சேர்ந்தவர்கள்.

""அதற்காகத்தான் கவர்னரிடம் ரிப்போர்ட் கேட்டார்கள். அவர் அனுப்பக்கூடிய ரிப்போர்ட் மற்றும் தமிழக கவர்னருக்கு எதிராக எழும் போராட்ட அலையின் வீரியத்தைப் பொறுத்தே கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் புரோகித்தை தமிழ்நாட்டில் வைத்திருப்பதா வேண்டாமா? என்பதைப் பற்றி மத்திய உள்துறை முடிவு செய்யும்'' என்ற மத்திய உள்துறை அதிகாரிகளிடம் ""நிர்மலா விவகாரத்தை பற்றி புரோகித் அனுப்பிய ரிப்போர்ட்டில் என்ன இருக்கிறது'' என கேட்டோம்.

Advertisment

""புரோகித் அனுப்பிய ரிப்போர்ட்டில் பல விவகாரமான விவரங்கள் இருக்கின்றன. "நான் கவர்னராக வருவதற்கு முன்பு ராஜ்பவன் பல சட்டவிரோத செயல்களின் இடமாக இருந்தது. நான் வந்த பிறகு ராஜ்பவனில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தேன். இங்கே கணக்கு வழக்கின்றி கொள்ளையடித்து வந்த கவர்னரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவை மாற்றினேன். எனது செயலராக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ராஜகோபால் நிர்வாக ரீதியாகவும் குருமூர்த்தி அரசியல் ரீதியாகவும் எனக்கு உதவி செய்து வருகிறார்கள். எனது நடவடிக்கைகள் இங்கிருக்கும் அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கும் பிடிக்கவில்லை.

பல்கலைக்கழக நிர்வாகத்தில் நான் தலையிடுவது எடப்பாடி அரசுக்கும் பிடிக்கவில்லை. எல்லாரும் ஒன்று சேர்ந்து நிர்மலா விவகாரம் மூலம் என்னை சிக்க வைத்து எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கிறார்கள்.

governorதமிழகத்தின் உயர் கல்வித் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஊழலின் வெளிப்பாடுதான் நிர்மலா விவகாரம்.

நிர்மலா அதே மாவட்டத்தில் கல்வித்துறை அமைச்சராக இருந்த வைகைச்செல்வன் என்பவருக்குத்தான் மிக நெருக்கமாக இருந்தார். அதன்பிறகு உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பழனியப்பன், எடப்பாடி ஆட்சி அமைந்த பிறகு மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியை பயன்படுத்திய அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோரும் நிர்மலாவோடு தொடர்பில் இருந்திருக்கிறார்கள் என பல்கலைக் கழக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. கோடிக்கணக்கான பணம் புரளும் உயர்கல்வித்துறையில் பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் பெண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நான் கவர்னராக வந்த பிறகு ஒரே ஒரு முறைதான் மதுரை பல்கலைக்கழக விடுதியில் கவர்னர் மாளிகை சிப்பந்திகளுடன் தங்கியிருக்கிறேன். நிர்மலாவை ஒருமுறை கூட நான் சந்தித்தது இல்லை. தமிழகத்தில் உயர்கல்வியில் நடக்கும் ஊழல்களை கேள்வி கேட்பதால் என் மீது பழி போடுகிறார்கள்' என கவர்னர் ரிப்போர்ட் அனுப்பியுள்ளார்'' என்கிறது டெல்லி வட்டாரம்.

இதுபற்றி வைகைச்செல்வன், பழனியப்பன், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோரை கேட்டோம். அவர்கள் பதிலளிக்க மறுத்து விட்டார்கள். கவர்னர் மாளிகையின் செய்தித் தொடர்பாளரும் கவர்னர் அனுப்பிய ரிப்போர்ட் பற்றி வாய்திறக்க மறுத்துவிட்டார்.

தன்னைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை திசை திருப்பி, தமிழக அரசை போட்டுக் கொடுக்கும் விதமாகவே டெல்லிக்கு கவர்னர் ரிப்போர்ட் அனுப்பியுள்ளார் என்ற பதைபதைப்பும் பரபரப்பும் தமிழக அரசியல் வட்டாரங்களில் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

ministers
இதையும் படியுங்கள்
Subscribe