உதிர்ந்து கிடக்கும் விவசாயிகள் ஒற்றுமை!

farmers

டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சினையான காவிரி விவகாரத்திலும் கூட விவசாய சங்கங்கள் ஓரணியாக திரண்டு போராடவில்லை. விவசாயத்தை பிரதானமாக கொண்ட டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் இருக்கின்றன.

""கடந்த சம்பாவிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்புக் கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் 3000 ரூபாய் கேட்கிறார், அதே கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரோ 2000 ரூபாய் கேட்கின்றனர். இப்படி நெல்லுக்கான இலக்கை நோக்கிக்கூட ஒரே குரலில் கேட்க முடியாத நிலையில்தான் சங்கங்களின் ஒற்றுமை இருக்கின்றது'' என திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் வருத்தத்தோடு கூறினார்.

""ஒருமுறை ரஜினிகாந்த்தை விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து, நதிகள் இணைப்பு குறித்து கேட்டார், அந்தச் சந்திப்பை, "காவிரி பிரச்சினையை திசை திருப்பும் வேலை' என்று கமெண்ட் கொடுத்தார் இன்னொரு சங்க தலைவரான பி.ஆ

டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சினையான காவிரி விவகாரத்திலும் கூட விவசாய சங்கங்கள் ஓரணியாக திரண்டு போராடவில்லை. விவசாயத்தை பிரதானமாக கொண்ட டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் இருக்கின்றன.

""கடந்த சம்பாவிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்புக் கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் 3000 ரூபாய் கேட்கிறார், அதே கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரோ 2000 ரூபாய் கேட்கின்றனர். இப்படி நெல்லுக்கான இலக்கை நோக்கிக்கூட ஒரே குரலில் கேட்க முடியாத நிலையில்தான் சங்கங்களின் ஒற்றுமை இருக்கின்றது'' என திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் வருத்தத்தோடு கூறினார்.

""ஒருமுறை ரஜினிகாந்த்தை விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து, நதிகள் இணைப்பு குறித்து கேட்டார், அந்தச் சந்திப்பை, "காவிரி பிரச்சினையை திசை திருப்பும் வேலை' என்று கமெண்ட் கொடுத்தார் இன்னொரு சங்க தலைவரான பி.ஆர்.பாண்டியன். ஆனால் பி.ஆர். பாண்டியன் கமல்ஹாசனை ஆதரித்தார். அதோடு உறவு பாசத்தில் ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதோடு இன்றுவரை பயணிக்கிறார்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு கழக தனபாலன் ஓ.என்.ஜி.சிக்கு ஆதரவாகவே இருந்து வருகிறார். டெல்டா பாசன விவசாயிகள் சங்க ரெங்கநாதனோ, கலைஞர் ஆட்சியில் இருக்கும்வரை அவரை ஆதரித்தார். பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், "காவிரி தாயே', "பொன்னியின் செல்வியே' என்று பட்டங்கள் கொடுத்துவிட்டு தற்போது, தான் உண்டு தன் வேலை உண்டு என மேல்மட்டத் தொடர்போடு மட்டுமே இயங்குகிறார்.

மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், தனக்கு சாதகமான சிலரை மட்டுமே இணைத்துக்கொண்டு போராட்டம் செய்கிறார்'' என்கிறார், விவசாய சங்கத் தலைவர் ஒருவரின் நிழலாக வலம்வந்த ஒரு விவசாயி.

ஒருங்கிணைப்பது பெரும்பாடு! -பி.ஆர்.பாண்டியன்!

prpandianவிவசாய சங்கங்களின் ஒற்றுமையின்மை பற்றி அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கிய பி.ஆர்.பாண்டியனிடம் கேட்டோம்... ""தமிழக உரிமைப் பிரச்சினை என்கிற முறையில் எனக்கு பி.ஜே.பி.யும் அ.தி.மு.க.வும் காங்கிரசும் தி.மு.க.வும் ஒண்ணுதான். அதனாலதான் அனைத்துக்கட்சி கூட்டங்களை பலமுறை கூட்டியிருக்கோம்.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் விவசாய சங்கம் இருக்கு. ஒவ்வொரு விவசாயியும் ஒரு கட்சியின் கொள்கையைச் சார்ந்தே இருக்கிறார். அந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விவசாயிகள் வெளியே வரத் தயாராக இல்லை. அதனால்தான் அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்தேன். நான் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கிற பார்வையில் காவிரி மீட்புக் குழுவின் மணியரசன் வேறுபட்டார். இன்னும் சிலர் வேறுபட்டாங்க. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் 50 ஆண்டுகளாக தமிழகத்தை சீரழிச்சிட்டாங்க என்கிற கருத்தில் உறுதியாக நின்றனர். நான் அதிலிருந்து மாறுபட்டேன்.

விவசாயிகளின் பிரச்சினை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி கிடையாது; மாவட்டத்திற்கு மாவட்டம், ஒன்றியத்திற்கு ஒன்றியம் மாறும், பாசன முறைகள் மாறும். அதற்கேற்ப அரசின் அணுகுமுறையும் மாறும் அதையெல்லாம் மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறோம்.

பேரூராட்சி உறுப்பினராகணும், சிற்றூரில் மெம்பராக இருக்கணும், சொஸைட்டி மெம்பராக இருக்கணும்னு விரும்புறாங்க. அதுதான் ஒற்றுமையின்மைக்கு காரணம். பல்வேறு வகையில் அடிமைபட்டுக்கிடந்தவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்த இயக்கங்களை விட்டு அவர்கள் வெளியேவரத் தயாராக இல்லை. அதுதான் ஒற்றுமையின்மைபோலத் தோன்றும்'' என்கிறார்.

ஒருங்கிணைக்க முடியாது! -அய்யாக்கண்ணு!

ayakannuதென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணுவிடம் கேட்டோம்...

""விவசாய சங்கங்கள் ஒற்றுமையா இல்லை என்பது உண்மைதான். அதை வெளிப்படையா கூறிவிட முடியாது, பிரபலமான வழக்கறிஞராக நான் இருந்தேன். என்னிடம் வந்த வழக்குகளில் என்னை கலங்கவைத்த விவசாயிகளின் விவாகரத்து வழக்குகளே அதிகம். இப்படி எத்தனையோ தனிப்பட்ட பிரச்சினைகள் விவசாயிகளின் வாழ்வில் உள்ளன.

1965-ல் காமராஜரின் காங்கிரஸிலும் பிறகு ஜனதாதளத்திலும் இருந்தேன். அதன்பிறகு எந்தக் கட்சியிலும் இருக்கவில்லை. நான் வந்தது இப்படி, மற்றவர்களுக்கு வேறு வேறு காரணம் இருக்கும். இப்படி எத்தனையோ தனிப்பட்ட பிரச்சினைகள் விவசாயிகள் வாழ்வில் உள்ளன.

அரசியல் கட்சின்னா ஒரு கட்டுப்பாடு இருக்கும், ஒருங்கிணைத்துவிட முடியும். ஆனால் விவசாய சங்கங்கள் அப்படியல்ல, அவ்வளவு சீக்கிரம் ஒருங்கிணைத்துவிட முடியாது.

அதையும் தாண்டி விவசாயிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை பலமுறை மேற்கொண்டுள்ளேன். டெல்லி போராட்டம் முடிந்து சென்னைக்கு வந்தபோது எக்மோரில் கூடிப் பேசினோம், அடுத்து திருச்சிக்கு கூப்பிட்டுப் பேசினோம், யாரும் ஒத்துக்கல. என் வழியில் பயணிக்கிறேன். விவசாய சங்கங்களை அவ்வளவு எளிதில் ஒருங்கிணைத்துவிட முடியாது. அப்படி நடந்தால் முதல் ஆளாக நான் அங்கு நிற்பேன்'' என்கிறார் அய்யாக்கண்ணு.

-க.செல்வகுமார்

ayakannu nkn13.07.2018
இதையும் படியுங்கள்
Subscribe