த்தியில் ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.க. அரசு உண்மையான வரலாற்றைவிட, அது நிறுவ நினைக்கும் புராண வரலாற்றையே இந்திய வரலாறாக மாற்றுவதில்தான் ஆர்வம்காட்டி வருகிறது என்கிறார் மதுரையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன். அதை நிரூபிக்கும் வகையில் சில தகவல்களைச் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடம் செப்டம்பரில் பாராளு மன்றத்தில் ஒன்றிய அரசு 16 பேர் கொண்ட இந்திய வரலாற்றுக் கலாச்சார பண்பாட்டு ஆய்வுக் குழுவை அறிவித்தது. அதில் ஒருவர்கூட தென்னிந்தியர் இல்லை. எனவே இந்த கலாச்சார ஆய்வுக் குழுவை கலைக்கச் சொல்லி குரல் கொடுத்தார்.

suba

12,000 ஆண்டு கால இந்திய பண்பாட் டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வுசெய்வதற்காக 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந் தக் குழுவில் பன்மைத்தன்மை இல்லை. தென்னிந் தியரோ, வடகிழக்கு இந்தியரோ, சிறுபான்மை யினரோ, தலித்தோ, பெண்ணோ இடம்பெற வில்லை. இந்து உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகத்தினைத் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதத்தை தவிர ஆதிமொழி இங்கு இல்லையா? ஜான் மார்ஷல், சுனிதிகுமார் சட்டர்ஜி துவங்கி ஐராவதம் மகாதேவன், டோனி ஜோசப், ஆர்.பாலகிருஷ்ணன் வரையிலான ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளையெல்லாம் நிராகரித்து, புராணங்களையே வரலாறு என நிறுவுவதற்கே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே இக்குழுவை கலைக்கும்படி கேட்டு கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்திய வரலாற்று தொல்லியல் துறைக்கு புதிதாக 758 வட இந்திய ஆய்வாளர்களை நியமித்துள்ளதைச் சுட்டிக்காட்டி மீண்டும் ஒன்றிய அரசின் தொல்லியல் துறை அமைச்சர் பிரகலாத்சிங் பட்டேலுக்கு எழுத, அதற்கு டிவிட்டரில் ஒன்றிய அமைச்சர், "கிணற்றுத் தவளையாக இருக்காதீர்கள்,’கல்வெட்டு குறித்து அறியாமையில் இருக்கிறீர்கள்'’என்று ட்விட் போட... அது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக ஆகியுள்ளது.

இதுகுறித்து தமிழக மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசனிடம் கேட்டோம். “"இந்தியாவின் வரலாற்றையும் பண்பாட்டையும் கட்டி யெழுப்பும் துறையாக கல்வெட்டு ஆய்வுத்துறை இருக்கிறது. இந்திய வரலாறு 85 சதவிகிதம் கல்வெட்டுகள் சார்ந்தே எழுதப்பட்டிருக்கிறது. மௌரியர்கள், சாதவாகனர்கள், சுங்கர்கள், குஷனர்கள், குப்தர்கள் உள் ளிட்ட இந்தியா வை ஆண்ட வம்சாவழிகள் கல்வெட்டுகள் மூலமாகவே சம கால வெளிச் சத்திற்கு வந்துள் ளன.

Advertisment

கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தே, 1886-ல் இந்திய தொல்லியல் துறையின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட கல்வெட்டு ஆய்வுத்துறை வரலாற்று ஆய்வுக்காக சிறப்பான பங்களிப்பைச் செய்துவருகிறது.

suba

இதுவரை, இந்தியா முழுவதிலும் கண்டுபிடிக் கப்பட்ட 80,000 கல்வெட்டுகளில் சுமார் 70 சதவிகிதம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளில் இருக்கின்றன. மீதி 30 சதவிகிதம் பிற மொழிகள்.

135 வருட பாரம்பரியம் கல்வெட்டு ஆய்வுத் துறைக்கு இருந்தாலும் போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் 50 சதவிகிதமான கல்வெட்டு கள் மட்டுமே துறை அறிக்கைகளில் பதிப்பிக்கப் பட்டிருக்கின்றன. மீதமுள்ள 50 சதவிகிதம் கல்வெட்டுகள் இன்னும் பதிப்பிக்கப்படவில்லை.

செய்வதற்கு பல வேலைகள் இருந்தபோதும் கல்வெட்டு ஆய்வுத்துறை மிக சொற்ப அளவிலான பணியாளர்களுடனேயே இயங்குகிறது. போதுமான பணியாளர்கள் இல்லாத காரணத்தால் தேங்கியிருக்கும் சில முக்கியமான பணிகளை உங்களுக்கு கவனப்படுத்த விரும்புகிறேன்.

.இந்திய தொல்லியல் துறை 758 புதிய பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளி யிட்டுள்ளது. இதில் கல்வெட்டு ஆய்வுக்கான புதிய பணியிடங்கள் எதுவும் இல்லை. 80 சதவிகிதத்துக் கும் மேல் கல்வெட்டுகள் திராவிட மொழிகளில் இருப்பதால் புறக்கணிக்கப்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது. எனவே இம்முடிவினை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கடிதத்தில் எழுதியிருந்தேன்.

எனக்கு என்ன ஆச்சரியமாக இருக்கிற தென்றால், நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். அவர் என் கடிதத்தை எப்படி புரிந்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. நான் ஒட்டுமொத்த இந்தியா முழுக்க இருக்கும் ஒன்றியப் பகுதிகளுக்கும் கல்வெட்டு ஆய்வாளர்களை நியமியுங்கள் என்றுதான் கூறியிருக்கிறேன். குறைந்தபட்சம் ஒரு மொழிக்கு இரண்டு ஆய்வாளர்களையாவது நியமியுங்கள் என்று கேட்டிருக்கிறேன். இதில் கிணறு, தவளை எல்லாம் எங்கிருந்து வந்தது என்று புரியவில்லை

வடக்கே கிடைத்த தமிழ் கல்வெட்டுக்கள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மைசூரில் இருக்கும் காப்பகங்களில் வைக்கப்பட் டுள்ளன. தஞ்சை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் கள் அதில் போய் ஆய்வு செய்வதற்கு பிரதி யெடுப்பதற்கு மிகப்பெரிய சிரமத்தைச் சந்தித்தார் கள். எனவே தமிழக அரசு அதன் பதிப்பக உரிமையை கோரிப் பெறவேண்டும். அதன் பிரதிகள் தமிழக அரசின் தொல்லியல் பிரிவில் இருக்கவேண் டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

நாம் ஒன்றிய அரசை கேட்டுக்கொள்வ தெல்லாம், வரலாற்றை அதன் முழுத்தன்மையோடு உயிரூட்டம் செய்யுங்கள். ஒரு பகுதியை மட்டும் வரலாறாக சித்தரிக்க ஒன்றிய அரசு முயற்சி செய்யக்கூடாது. அதுதான் நம் அறிவின் மரபு என்பதுதான் என் பதில்''’என்று விளக்கமான பதில் அளித்திருக்கிறார்.