Advertisment

கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!  அதிர்ச்சி  ரிப்போர்ட்!

kanchja

2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV)  இருந்து கஞ்சா நீக்கப்பட்டது. 

Advertisment

ஆனால் கஞ்சா முழுமையாக சட்டபூர்வ மாக்கப்படவில்லை. அது இன்னும் நஸ்ரீட்ங்க்ன்ப்ங் ஒ என்ற போதைப் பொருட்களின் பட்டியலில் உள்ளது. 

Advertisment

மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலிலிருந்து ஐ.நா., கஞ்சாவை நீக்கி யிருப்பதால்  கஞ்சா போதைப்பொருள் அல்ல என்று அறிவிக்கவில்லை. ஐ.நா. பார்வையில் கஞ்சாவின் ஆபத்து வகை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டமும் கட்டுப்பாடுகளும், இந்தியா உட்பட உலகம் முழுவதும் தொடர்கின்றன. அதா வது, மருத்துவப் பயன்பாடு தவிர, கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவாக வாக்களித் தன. 'இந்தியா வில் மருத்துவ & அறிவியல் பயன்பாட் டுக்கான ஆய்வுகளை கருத்தில் கொண்டு' என்ற நிலைப் பாட்டை கருத்

2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV)  இருந்து கஞ்சா நீக்கப்பட்டது. 

Advertisment

ஆனால் கஞ்சா முழுமையாக சட்டபூர்வ மாக்கப்படவில்லை. அது இன்னும் நஸ்ரீட்ங்க்ன்ப்ங் ஒ என்ற போதைப் பொருட்களின் பட்டியலில் உள்ளது. 

Advertisment

மிகவும் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலிலிருந்து ஐ.நா., கஞ்சாவை நீக்கி யிருப்பதால்  கஞ்சா போதைப்பொருள் அல்ல என்று அறிவிக்கவில்லை. ஐ.நா. பார்வையில் கஞ்சாவின் ஆபத்து வகை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டமும் கட்டுப்பாடுகளும், இந்தியா உட்பட உலகம் முழுவதும் தொடர்கின்றன. அதா வது, மருத்துவப் பயன்பாடு தவிர, கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இந்த தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவாக வாக்களித் தன. 'இந்தியா வில் மருத்துவ & அறிவியல் பயன்பாட் டுக்கான ஆய்வுகளை கருத்தில் கொண்டு' என்ற நிலைப் பாட்டை கருத் தில் கொண்டு கஞ்சாவுக்கு ஆதரவு தருவதாகத் தெரிவித்தது.

உலக அளவில், கஞ்சா மிகவும் ஆபத்தானது என்ற வகைப்படுத்தலில் இல்லை. அதேபோல் இந்தியாவின் நிலைப்பாட்டில் NDPS Act (1985)படி, கஞ்சா (ganja, charas) வைத்தல், விற்பனை, கடத்தல் இன்னமும் சட்டவிரோதமாகக் கருதப்பட்டு, தண்டனை தொடர்கிறது. ஆனால், பாங்  (Bhang) சில மாநிலங்களில் பாரம்பரிய, மதப் பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், ஆயுஷ், மருத்துவ ஆராய்ச்சிகள் அதிகரித்து வருகின்றன.

கஞ்சா தொடர்பான வாக்கெடுப்பிற்கு இந்தியா ஆதரவளித்ததற்கு முக்கிய காரணம், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், குறிப்பாக உத்திரபிரதேசத்திலுள்ள காசியில், அகோரிகள் அதிகளவில் கஞ்சாவை பயன்படுத்திவருகிறார்கள். மேலும், கஞ்சா பல்வேறு வடிவங்களில் கஞ்சா டீ, கஞ்சா அல்வா, கஞ்சா ஜூஸ் என்று தற்போது உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று இயல்பான விற்பனைக்கு பழகிவிட்டது. அதே சமயம், இன்று வெளிமாநிலங்களில் உள்ள கிராமங்களில், வயல்வெளிகளில் கஞ்சா செடிகள் வளர்ப்பு ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. அதேபோல், வெளி மாநிலங்களில் உற்பத்தியாகும் கஞ்சா செடிகள், தற்போது தமிழ்நாட்டுக்கு விற்பனைக்கு கொண்டுவரப் படுகிறது. 

உண்மை இப்படியிருக் கும் நிலையில், பா.ஜ.க.வோ, இதையெல்லாம் மறைத்துவிட்டு, கஞ்சா செடிகளை தமிழகம்தான் வளர்த்து புழக்கத்தில் விடுவதாகக் குற்றம்சாட்டி, தன்னுடைய அரசியல் லாப நோக்கத்திற்காக தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது. ஒன்றிய அரசானது, போதைப் பட்டியலிலிருந்தே கஞ்சாவை நீக்குவதற்கு முயற்சி செய்தது. இந்தியா உள்ளிட்ட 27 நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்தபோதும், அத்திட்டம் முழுமை யடையவில்லை. எனினும், அந்த திட்டத்தினை செயல்படுத்தும் விதமாகத்தான் இந்தியாவில் தொடர்ந்து சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதானி துறைமுகத்தில் பிடிபட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்களின் நிலை என்னவென்பதை எதிர்க்கட்சிகள் கேட்டும், இதுவரை ஒன்றிய அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கவேயில்லை. 

சமீபத்தில், மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து நடத்தப்பட்ட பெரிய அளவிலான நடவடிக்கையில், மாநில அமைச்சர் பிரதிமா பக்ரியின் சகோதரர் அனில்பக்ரி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அனில் பக்ரி மற்றும் பங்கஜ் சிங் ஆகியோரிடமிருந்து 46 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.9.22 லட்சம் ஆகும். இந்த கைது நடவடிக்கைக்கு சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் பிரதிமா பக்ரியின் மைத்துனர் ஷைலேந்திர சிங், உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டாவில் 10.5 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டி ருந்தார். ஏற்கெனவே அவர் மற்றொரு போதைப்பொருள் தடுப்பு வழக்கில் பாண்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு, சுமார் ரூ.5.5 கோடி மதிப்புள்ள போதை மருந்து கலந்த இருமல் சிரப் கடத்தல் சம்பவத்தில் சத்னாவில் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இப்படி தொடர்ந்து கஞ்சா உற்பத்தியில் வெளி மாநிலங்கள் அதிக ஆர்வம் காட்டிவரும் நிலையில், கஞ்சா புழக்கத்தை தமிழகத்தில் உருவாக்க பா.ஜ.க., ஆன்மிக அரசியலை தொடங்கி விட்டது என்றே சொல்லலாம். காசியில் எப்படி கஞ்சா புழக்கம் சர்வசாதாரணமாக நடைபெறு கிறதோ, அதேபோன்ற நிலை காசிக்கு அடுத்துள்ள இராமேஸ்வரத்தில் நடக்கவும், அங்குள்ள சாமியார்கள் பயன்படுத்தவும் ஒன்றிய அரசு தொடர்ந்து கஞ்சாவிற்கான தடையில் தளர்வு ஏற்படுத்தி, கஞ்சா பழக்கத்தினை இளைஞர்கள் மத்தியில் அதிகப்படுத்த முயற்சிக்கிறது. 

இளைஞர்கள் கஞ்சாவிற்கு அடிமையாகவும், அதன்மூலம் கல்வியை இழந்து, படிப்பறிவு இல்லாமல் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்காக ஒரு மாபெரும் திட்டத்தை கையிலெடுத்துள்ளது. கஞ்சாவினை ஊக்கப் படுத்துவதன் முக்கிய நோக்கமே, கல்வி யறிவில்லாமல் தமிழக இளைஞர்கள் காட்டு மிராண்டிகளாக மாறவேண்டும் என்பதே. இந்த நோக்கில்தான் ஐ.நா.வில் கஞ்சாவுக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

nkn131225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe