காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமா தாக்குதலில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மத்திய சிறப்பு காவல் படையினருக்கு (துணை ராணுவப்படை) அஞ்சலி செலுத்திய நிகழ்வு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய முன்னாள் ராணுவத்தினர், அரசின் சலுகை கள் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை என்கிற அதிருப்தியை வெளிப்படுத்தினர். இது, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புல்வாமா தாக்குதல் நடந்து 6

புல்வாமா தாக்குதல் நடந்து 6 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அதன் ரணம் இன்னும் ஆற வில்லை. அந்த தாக்குதலின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளை அனுஷ்டிக்கும் வகையில், தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவப் படையினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அண்மையில் நடந்தது.
இதில், எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய சிறப்பு காவல் படைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முன்னாள் வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அந்த அஞ்சலி நிகழ்ச்சி, மத்திய-மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கும் ஆர்ப்பாட்டமாகவும் மாறியது.
சி.ஆர்.பி.எஃப். கூட்டமைப்பின் தலைவர் சீனிவாசன் பேசும்போது, ‘’"இந்திய பாதுகாப்புப் படைகளில் பி.எஸ்.எஃப்., சி.ஆர்.பி.எஃப்., ஐ.டி.பி.பி., சி.ஐ.எஸ்.எஃப்., எஸ்.எஸ்.பி. மற்றும் ஏ.ஆர். என 6 படைப்பிரிவினர் இருக்கின்றனர். தேசத்தைப் பாதுகாப்பதில் இந்திய ராணுவத்தினர் போல இவர்களும் தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். ஆனால், ஓய்வுபெற்ற பிறகு ராணுவத்தினருக்கு கிடைக்கும் எந்த சலுகைகளும் துணை ராணுவப்படையினருக் குக் கிடைப்பதில்லை. இது குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், கண்டுகொள்ளப்படவே இல்லை. நாட்டுக்காக உழைத்த எங்களின் வாழ்வாதாரத்தை அரசாங்கங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்''’என்று ஆதங்கப்பட்டார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான டி.எஸ்.எஸ்.மணி பேசும்போது, "முன்னாள் ராணுவத்தினருக்கும், முன்னாள் துணை ராணுவத்தினருக்கும் இடையே பாரபட்சம் காட்டிவருகிறது ஒன்றிய அரசு. ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் ராணுவத்தினரும், உள்துறையின் கீழ் துணை ராணுவத்தினரும் வருகிறார்கள். ஒரு அரசின் கீழ் இயங்கும் இரண்டு அமைச்சகத்தில் பணிபுரிபவர்களை ஒரே தட்டில் வைத்து பார்ப்பதுதானே சரி? ஆனால், அப்படி பார்க்க ஒன்றிய அரசு மறுக்கிறது. முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் சலுகைகள், முன்னாள் துணை ராணுவத்தினருக்கு மறுக்கப்படுவது அநீதியானது''’என்று ஆவேசப்பட்டார்.