Advertisment

விவசாயிகள், மாணவர்களுக்கு எதிரான ஒன்றிய அரசு! -முத்தரசன் குற்றச்சாட்டு!

cc

மிழ்நாடு ஏ.ஐ.டி.யு. சி.யின் 20வது மாநில மாநாடு, நெல்லை ரோஸ் மஹாலில் எம்.பி. சுப்பராயன் தலைமையில் நடந்தது. மாநாட்டை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் துவக்கி வைத்தார். அவரது துவக்க உரை யில், "ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டத்திற்கு மாறாக, தொழி லாளர்களுக்கு பச்சைத் துரோகம் செய்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்து வருகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பொதுத்துறை நிறுவனங்கள் அதிகமாக உருவாக் கப்பட்டன. மாறாக, த

மிழ்நாடு ஏ.ஐ.டி.யு. சி.யின் 20வது மாநில மாநாடு, நெல்லை ரோஸ் மஹாலில் எம்.பி. சுப்பராயன் தலைமையில் நடந்தது. மாநாட்டை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் துவக்கி வைத்தார். அவரது துவக்க உரை யில், "ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டத்திற்கு மாறாக, தொழி லாளர்களுக்கு பச்சைத் துரோகம் செய்து வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்து வருகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பொதுத்துறை நிறுவனங்கள் அதிகமாக உருவாக் கப்பட்டன. மாறாக, தற்போது பா.ஜ.க. ஆட்சியில் ஒரு பொதுத் துறை நிறுவனம் கூட உருவாக் கப்படவில்லை. பொதுத்துறை நிறுவனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அனைத்தையும் தனியார் மயமாக்கி வருகிறது. இதுவரை ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. விவசாயிகள், மாணவர் களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.

Advertisment

cc

இதனைக் கண்டித்து, கடந்த 26ஆம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட் டோம். அவரிடம் நேரடியாக மனு கொடுக்கச் சென்றபோது, அவர் வாங்க மறுத்து விட்டார். ஒன்றிய அரசின் ஆட்சியில், ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப் பும், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், கருப்பு பணம் மீட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது வரை எந்தவொரு நடவடிக்கை யும் இல்லை. மதங்களைக் காட்டி மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அது நடக்காது. இந்த ஒன்றிய அரசு, ஆர்.எஸ்.எஸ்.ஸின் கரங் கள் என்று நாங்கள் வெளிப்படை யாகவே குற்றம் சாட்டுகிறோம்'' என்று பேசினார்.

Advertisment

பத்திரிகையாளர்களிடம் பேசிய எம்.பி. சுப்பராயன், "இந்தியாவில் ஏ.ஐ.டி.யு.சி. சங்கம் ஆங்கிலேயர் காலத்திலேயே உருவானதாகும். மக்களின் குறை களை நிவர்த்தி செய்வதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறது. வருகிற 16ஆம் தேதி முதல் 20-வரை கேரள மாநிலம் ஆலப்புழையில் தேசிய அளவிலான மாநாடு நடக்கவிருக் கிறது. தொழிற்சங்க விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கிற ஒன்றிய அரசு, வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களை வரவேற் கிறது. உள்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல சலுகை களை வழங்குகிறது'' என்று குற்றம் சுமத்தினார்.

மாநாட்டில் ஏ.ஐ.டி.யு.சி. யின் பொதுச்செயலாளர் மூர்த்தி அறிக்கையினை வாசித்தார். ஏ.ஐ. டி.யு.சி.யின் தேசிய செயலாளர் வஹிதா நிஜாம், அகில இந்திய தலைவர் ராஜா ஸ்ரீதர், சி.ஐ.டி.யு. வின் மாநில பொதுச்செயலாளர் களான சுகுமாரன், சேவியர் மற் றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாள ரான காசிவிஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

-செய்தி, படங்கள்: ப.இராம்குமார்

nkn101222
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe