பொள்ளாச்சி காமக் கொடூரத்தில்... மறுபடியும் ஒரு பெண்ணின் அபயக்குரல் ஆடியோ வடிவத்தில் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் நாட்டையே நடுநடுங்க வைத்தது.

""அண்ணா ஏதாவது செய்து எங்கள காப்பாத்துங்கண்ணா... திருநாவுக்கரசு மட்டுமில்ல அவனோட 9 பேர். பண்ணைவீட்ல என்னோடு சேர்ந்து 5 பெண்களை அடைச்சிவச்சிருக் காங்கண்ணா. அதுல ஒரு பொண்ணு வயசுக்கு வராத பொண்ணு. நைட்டு முழுக்க பலாத்காரம் செஞ்சதுல அந்தப் பொண்ணு செத்து போயிருச்சுண்ணா. இதப்பத்தி யாரும் வாயை திறக்கக் கூடாதென சொன்னாங்க.

p

Advertisment

அப்புறம் அந்தப் பொண்ணை பொதைச்சுட் டாங்கண்ணா, நான் அதுலருந்து தப்பிச்சு வந்துட்டேன். எங்களுக்கு உதவி பண்ணுங்கண்ணா'' என கதறுகிறது பெயர் முகம் தெரியாத செல்போன் செயலி மூலம் பேசும் அபலைப் பெண்ணின் குரல். அதைக் கேட்கும்போதே ஒரு பயமும் கொடூரத்தை சந்தித்த அதிர்ச்சியுமாக வெளிப்படும் அந்த குரலில் பதட்டத்துடன் வெளிப்படுகிறது பயங்கர உண்மை.

""அமெரிக்காவுல இருக்குற என் பிரண்டுக்கு ஊட்டியில் ஒரு கெஸ்ட் அவுஸ் இருக்கு. இந்த பொள்ளாச்சி சம்பவங்கள் பெருசா வெளியான பிறகு அந்த நண்பர் தனது கெஸ்ட்ஹவுஸ் வாட்ச்மேன்னுக்கு போன் பண்ணினார். அவர் இல்லாதபோது வாடகைக்கு விடப்படும் அந்த கெஸ்ட் ஹவுசில் ஒரு இளைஞர் பட்டாளம் தங்கி இருப்பதாக வாட்ச்மேன் சொன்னார். "உடனே அவங்கள போக சொல்லு' என உத்தரவிட்டு கெஸ்ட்ஹவுசின் உரிமையாளர் அதை வந்து பார்த்தார். சாராயம், சிகரெட், காண்டம் என அனைத்து விதத்திலும் அந்த கெஸ்ட் ஹவுஸ் சீரழிக்கப்பட்டிருந்தது. விசாரித்த போது "பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் மற்றும் நண்பர்கள் வந்து தங்கியிருந்தார்கள். அவர்களுக்காக பெண்கள் பெங்களூரி லிருந்து விமானம் மூலம் வரவழைக் கப்பட்டு காத்திருந்தனர். அவர்கள் அடித்த கூத்துதான் இவை' என வாட்ச்மேன் சொன்னார்'' என்கிறார் பொள்ளாச்சி நகரில் மிகப் பிரபல மான குடும்பத்தை சேர்ந்த பணக்கார பெண் சமூக சேவகி.

dஇத்தனைக்கும் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக போராட்டங் கள், கடையடைப்பு, கைது நடவடிக் கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, ஜெயராமன் மகன் கேங் ஊட்டி யில் நடத்திய திருவிளையாடல் இது.

Advertisment

""பிரவீனின் நண்பர்களான திருநாவுக்கரசு கோஷ்டிக்கு எதிராக நான்தான் புகார் கொடுக்க வைத்தேன்'' என பொள்ளாச்சி ஜெயராமன் சொல்கிறார். போதாக்குறைக்கு ஒரு பெண்ணும் "எங்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன்தான் உதவி செய்தார்' என ஒரு ஆடியோவில் பேசுகிறார். அதற்கு ஒரு சுவாரசியமான பின்னணி உள்ளது என்கிறார்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள்.

திருநாவுக்கரசையும் சபரியையும் பூபாலன் மற்றும் அருண் ஆகியோர் அடித்து உதைக்கும் வீடியோ ஒன்று வெளியானது. அதில், கன்னத் திலும் காலிலும் இரத்தம் சொட்டும் அளவிற்கு திருநாவுக்கரசு தாக்கப்படுகிறார். ஆனால், அந்த சுவடுகள் எதுவும் இல்லாமல் ரொம்ப ப்ரெஷ்ஷான முகத்தோடு போலீசார், திருநாவுக்கரசை கைதுசெய்கிறார்கள். திருநாவுக்கரசு கைதாவதற்கு முன்பே பூபாலன், அருண் கோஷ்டியினர் தாக்கி யிருக்க வேண்டும். இது குறித்து காவல்துறையில் விசாரித்தோம்.

""பூபாலனும் அருணும் சேர்ந்து திருநாவுக் கரசையும் சபரியையும் தூக்கி கொண்டு வந்து தாக்குவதும் "டே அருண் என்னை விட்டுடுடா' என திருநாவுக்கரசு கதறிய காட்சியும் அடங்கிய வீடியோ பதிவு செய்யப்பட்ட நாள் 17.02.2019. சம்பவம் நடைபெற்ற இடம் -ஆனைமலை டாப்சிலிப் போகும் வழியில் உள்ள ஒரு பண்ணை வீடு. மோதல் கடுமையாக நடைபெற்றதால் அலறிப் போன திருநாவுக்கரசின் உறவினர்கள் கோட்டாறு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அனைவரையும் dகாவல்நிலையத்திற்கு தூக்கி வந்து விசாரிக்கிறது. திருநாவுக் கரசின் செல்போனில் இருந்த அத்தனை வீடியோக்களையும் பார்க்கிறது. அவையனைத்தும் ஆனைமலை டி.எஸ்.பி. விவே கானந்தன் மூலம் மேலிடத்திற்கு அனுப்பப்படுகிறது. விவகாரத்தை கேள்விப்பட்ட பொள்ளாச்சி ஜெயராமன் மகன் களத்தில் குதிக்கிறார். மாவட்ட அமைச்சரின் காதுக்கும் சம்பவம் போகிறது. திருநாவுக்கரசு, சபரி உட்பட அனைவரது செல் போன்களும் பிடுங்கப்பட்டு ஆபாசப்படங்கள் சோதிக்கப்பட்டன. சுமார் 13 ஙஇ அந்த ஆபாசப் படங்களில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன், மந்திரிக்கு நெருக்கமான "பார்' நாகராஜ் ஆகியோரை பார்த்து அதிர்ச்சியாகின்றனர்.

உடனே கோவை புறநகர் எஸ்.பி. பாண்டிய ராஜன் லைனுக்கு வந்தார். அவரது அறிவுரைப்படி போலீசார் நடந்து கொண்டார்கள். அதற்காக திருநாவுக்கரசு டீம் லட்சக்கணக்கில் கோட்டாறு காவல்நிலையத்திலிருந்த காவல்துறையினரை குளிப்பாட்டியது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கோட்டாறு காவல்நிலையத்தின் துணை ஆய்வாளராக இருந்த ராஜேஸ்கண்ணா விளக்கி னார். இரண்டு தரப்பும் புகார் பண்ணலை. "என் தங்கை ஜானகியை (பெயர் மாற்றம்) திருநாவுக்கரசு கிண்டல் பண்ணினான்' என்றார்கள். "ஆமாம் சார்... இனிமேல் ஜானகியை கிண்டல் செய்யமாட்டோம்' என திருநாவுக்கரசும் சபரியும் எழுதிக் கொடுத்தார் கள். "இனி எங்களுக்குள் எந்த சண்டையும் வராது' என சமாதானமாக போக... அவர்களை விட்டு விட்டோம்' என்கிறார் ராஜேஸ்கண்ணா. "அவர்களது செல்போன் வீடியோக்கள் எங்கே? அதற்காக எவ்வளவு தொகை பரிமாறப் பட்டது' என கேட்டதற்கு, "அதெல்லாம் இல்லை சார்' என்றார் ராஜேஸ்கண்ணா. திருநாவுக்கரசோ, தான் தாக்கப்பட்ட கோபத்தில், வீடியோவை ரிலீஸ் செய்யப்போவதாக மிரட்டினான். மறுபடியும் 24-02-2019 அந்தப் பெண் மூலம் பொள்ளாச்சி நகர காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

m

அப்போது தலைமறைவாகிவிட்ட திருநாவுக்கரசு, "இந்த காமக்கொடூரங் களுக்கு பின்னணியில் ஆளும் கட்சி பிரமுகர்கள் இருக்கிறார்கள்' என வீடியோ வெளியிட்டான். உடனே கொத்தாக அவனை அள்ளிய போலீசார் தப்பிக்க முடியாத அளவிற்கு லாக் செய்தனர். "புகார் கொடுத்த பெண்ணின் வீடியோ வெளியே வராது' என வாக்குறுதி கொடுக்க, அதை நம்பி பொள்ளாச்சி ஜெயராமன் நல்லவர் என புகாரளித்த பெண் ஆடியோவில் பேசினார். தற்போது கோவை மாவட்ட காவல்துறையின் லேப்டாப்பில் உள்ள அந்த வீடியோவுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிற்கின்றனர்'' என்கிறார்கள் காவல்துறையினர்.

பொள்ளாச்சி காமக்கொடூர நிகழ்வு வெளிவந்த பிறகு அந்த வீடியோவில் இடம்பெற்ற பெண்கள் எங்கே என தேடினோம். "அவர்கள் தற்போது பொள்ளாச்சியில் இல்லை. திருமணம் ஆகிவிட்டது' என ஊரார் சொல்கிறார்கள். ஆனால், பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் இந்த சம்பவத் திற்கு பிறகு நிறைய தற்கொலைகள் நடந்துள்ளன. நெகமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், திருநாவுக்கரசால் சீரழிக்கப்பட்ட ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டார். ஆனை மலை காவல் நிலையத்தில் இந்த வீடியோக்களில் சிலவற்றை ஆபாச இணையதளத்தில் பதிவிட்ட வீடியோகிராபர் தற்கொலை செய்துகொண்டார் என மக்கள் சொல்கிறார்கள்.

போலீசார் அப்படி யேதும் இல்லையென மறுக்கிறார்கள். "எந்த தற்கொலையையும் வழக்காக பதிவு செய்யக்கூடாது' என எஸ்.பி. பாண்டியராஜன் உத்தர விட்டுள்ளாராம். "போஸ்ட் மார்ட்டம் இல்லாமல் பிணங்கள் புதைக்கப்படும் அவலமும் பொள்ளாச்சியில் நடக்கிறது. அப்படித்தான் திருநாவுக்கரசின் பண்ணைவீட்டில் இறந்த பெண்ணும் காவல்துறை உதவியுடன் புதைக்கப்பட்டி ருக்கலாம்' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். நாம் சின்னப்பம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்குச் சென்றோம். அங்கு "பிணம் ஏதாவது புதைக்கப்பட்டிருக்கிறதா' என ஆராய்ந்தோம். "பொதுமக்களால் அடித்து உடைக்கப்பட்ட அந்த வீட்டில் பிணம் புதைக்க வாய்ப்பில்லை' என்கிறார்கள் அவ்வூர் மக்கள்.

p

"திருநாவுக்கரசுக்கு சொந்தமாக சின்னப்பம் பாளையத்திலும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் சுமார் 80 ஏக்கர் நிலம் உள்ளது. முதலில் சாராயத் தொழில், அதற்குப் பிறகு வட்டி பிசினஸ் என பணம் பார்த்துள்ளனர் திருநாவுக் கரசின் பெற்றோரான கனகராஜும் லதாவும்! அந்தப் பணத்தில் வாங்கிய காரில் கருப்புக் கண்ணாடியை ஏற்றிக்கொண்டு வரும் திருநாவுக் கரசு, சபரி மற்றும் அவரது ஆண் நண்பர்களை மட்டும்தான் ஊரார் பார்த்திருக்கிறார்கள். காரில் வரும் பெண்களின் நடமாட்டம் வெளியே தெரியாத அளவிற்கு வீட்டுக்குள்ளேயே பார்க்கிங் வசதியோடு நடமாடிய திருநாவுக்கரசு, இறந்துபோன அந்தப் பெண்ணை தனக்குச் சொந்தமான தோட்டத்தில் புதைத்திருப்பார்' என்கிறார்கள் ஊர்மக்கள். இதில், திருநாவுக்கரசின் தந்தை ஜி.கே. வாசனின் ஆதரவாளராம்.

இந்த பிரச்சனைகளுக்காக சமூக வலைத் தளங்களில் இயங்கும் மூகாம்பிகாவை மக்கள் நீதி மய்யத்தின் பொள்ளாச்சி பாராளுமன்ற வேட்பாளராக்கியுள்ளார் கமல். ""பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தை எனக்கு நன்றாகத் தெரியும். மகன் நான்கு வயது இருக்கும்போதே ஜெயராமன் எம்.எல்.ஏ.வாகிவிட்டார். அதிகார போதையிலே வளர்ந்த பிரவீன், ஜெயராமனின் மனைவிகள் சொல்வதையும் மதிக்கமாட்டார்'' என்கிறார்.

-தாமோதரன் பிரகாஷ்