கேரளாவில் 2016-ஆம் ஆண்டு நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத் காரம் செய்யப் பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல நடிகைகள் தங்க ளுக்கு திரையுலகில் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்து பகிரங்கமாக புகார் சொல்லத் தொடங்கினார்கள்.

அதைத்தொடர்ந்து அவர்களுக்கு திரை வாய்ப்புகள் பறிபோயின. தங்களுக்கு எதிராக நடிகர்கள் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை சமாளிக்க, "விமன் இன் சினிமா கலெக்டிவ்' எனும் மலையாள பெண் கலைஞர்கள் சங்கம் தொடங்கப்பட்டது.

c

கேரளா முதல்வர் பினராயி விஜயனை இந்தச் சங்கத்தினர் சந்தித்து, மலையாள சினிமா வில் நடிகைகள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளை விசாரிக்க பெண் நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கும்படி கோரிக்கை விடுத்தா ர்கள். அதை ஏற்ற முதல்வர் பினராயி, நீதிபதி ஹேமா, நடிகை சாரதா உள்ளிட்ட மூவர் அடங்கிய ஆணையத்தை அமைத்தார். இந்த வகையில் முதன்முதலாக அமைந்த ஆணையம் இதுதான்.

இந்த ஆணையம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மலையாள சினிமா நடிகர்கள், நடிகைகள் என பலரிடம் நேரடியாகவும் தனித்தும் விசாரணை நடத்தியது.

""கடந்தவாரம் பினராயி விஜயனிடம் நீதிபதி ஹேமா அளித்துள்ள அறிக்கையில் பல அதிரவைக்கும் உண் மைகள் இடம் பெற்றிருப்பதாக தக வல்கள் கசிகின்றன. குறிப்பாக பட வாய்ப்பு வேண்டும் என்றால் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை இருப்பது உண்மைதான். உடன் படாத நடிகைகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படும். அதுமட்டுமின்றி, திரைப்படத்தின் சூட்டிங் எங்கே நடக்க வேண்டும் என்பது உள்பட முக்கியமான விஷயங்களை ஒரு அண்டர்வேர்ல்டு கேங் தீர்மானிக்கிறது. அந்த கேங் லீடரை பகைத்துக் கொண்டால் படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள். முன்னணி நடிகர்களும் இதற்கு விலக்கல்ல. படப்பிடிப்பு மட்டுமின்றி, வெளி நாடுகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில்கூட இந்த டான்களின் ஆதிக்கம் இருக்கிறது. நடிகை ஒருவர் மிக வெளிப்படையாக மலையாள சினிமாவின் இருட்டுப் பகுதியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். முடிவாக, சினிமா உலகில் நடிகை களை படுக்கைக்கு அழைப்போரை கண்காணிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று நீதிபதி ஹேமா கூறியுள்ள யோசனையை செயல்படுத்த முதல்வர் பினராயி முடிவெடுத்திருக்கிறார்'' என்கிறார்கள்.

அனேகமாக மலையாள சினிமா உலகம் சுத்தம் செய்யப்படும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

-பரமசிவன்