Advertisment

மாமானா ? மச்சானா? கடலூர் தொகுதி பரபரப்பு!

ss

ss2024 பாராளுமன்றத் தேர்தல், அர சியல்வாதிகள் மத்தியில் அனல் பறக்க வைத் துள்ளது. கடலூர் தொகுதி இது வரை 17 நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது

Advertisment

தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி எம்.பி. விஷ்ணுபிரசாத்தும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. பண்ருட்டி சிவக்கொழுந்தும், பா.ஜ.க.- பா.ம.க. கூட்டணி சார்பில் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சானும். நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகமும் களத்தில் உள்ளனர். இதில் விஷ்ணுபிரசாத், ஆரணி தொகுதி எம்.ப

ss2024 பாராளுமன்றத் தேர்தல், அர சியல்வாதிகள் மத்தியில் அனல் பறக்க வைத் துள்ளது. கடலூர் தொகுதி இது வரை 17 நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது

Advertisment

தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி எம்.பி. விஷ்ணுபிரசாத்தும், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. பண்ருட்டி சிவக்கொழுந்தும், பா.ஜ.க.- பா.ம.க. கூட்டணி சார்பில் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சானும். நாம் தமிழர் கட்சி சார்பில் மணிவாசகமும் களத்தில் உள்ளனர். இதில் விஷ்ணுபிரசாத், ஆரணி தொகுதி எம்.பி.யாக இருந்தவர். அந்தத் தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால் கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

நான்குமுனைப் போட்டியைச் சந்திக்கும் கடலூர் தொகுதியில் பிரதான கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத், பா.ம.க. தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியாவின் உடன்பிறந்த சகோதரர்.

கடலூரில் தேர்தல் பிரச்சாரத்தில், "மாமனாக இருந்தாலும் மச்சானாக இருந்தாலும் போர்க்களத்தில் குறிவைத்து அவர்கள் மீது அம்பைச் செலுத்தவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது மகாபாரதம். நாங்கள் கொள்கைக்காகப் போராடுகிறோம்'' என்று பேசினார் விஷ்ணுபிரசாத் பண்ருட்டியில் தங்கர்பச்சானுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்த அன்புமணி, "காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் எனது மைத்துனர் தான். அரசியல் வேறு… உறவு வேறு.… ஆரணி திருமண மண்டபத்திற்கு செல்ல வேண்டிய மாப்பிள்ளைஅவர். வழிதவறி கடலூர் மண்டபத் திற்கு வந்துவிட்டார். தங்கர் பச்சான்தான் கடலூர் தொகுதியின் உண்மையான மாப்பிள்ளை. அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற அனைவரும் அவருக்கு வாக் களிக்க வேண் டும்'' என்று பேசினார்.

Advertisment

cc

இந்தத் தொகுதியில் வன்னிய சமூகத் தினர் சுமார் 37% பேர் உள்ளனர் அதேபோல் பட்டியலினத்தவர் 34 சதவீதமும் முஸ்லிம் உட்பட இதர சமூகத்தினர் கணிசமாகவும் உள்ளனர்.

பா.ம.க., காங்கிரஸ், தே.மு.தி.க.வைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்களும் கணிசமான அளவுக்கு வாக்குகளை போட்டி போட்டுக்கொண்டு பிரிப்பார்கள். இதனால் மூன்று கட்சி வேட்பாளர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் வேட்பாளர் கூட்டணிக் கட்சி பலத்தில் வென்றுவிடலாம் என்று நம்பிக்கையோடு உள்ளார். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்திய போராட்டத்தின் மூலம் பரவலாக மக்கள் மத்தியில் கிடைத்த செல்வாக்கும், திரைப்பட இயக்குனராக தனக்கென்று மக்கள் மத்தியில் இருக்கும் இமேஜும் பா.ம.க. வெற்றிக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு அடித்தட்டு மக்களை தேடிச்சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார் பச்சான்.

கடலூர் மாவட்டத்தில் விஜயகாந்துக்கென உள்ள தனிப்பட்ட வாக்கு வங்கி, அதோடு அ.தி.மு.க. வாக்குகள் என இவையிரண்டும் தன்னை வெற்றி பெறவைக்கும் என்று தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்து எதிர்பார்ப்பில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை நிச்சயம் பெறும். இந்த நிலையில் வெற்றி யாருக்கு என்பதைக் கணிக்கமுடியாமல் அலை வீசிக் கொண்டிருக்கிறது..

nkn100424
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe