த.வெ.க.வின் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை, புதுவையில் லட்சிய ஜனநாயகக் கட்சியை தொடங்கியுள்ள ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் விஜய்யுடன் புதுவையில் கூட்டணி வைக்க விரும்புவதாக சார்லஸ் பேசிவருகிறார். அதேபோல், புதுச்சேரியில் விஜய் பேசும்போது, "அமைச்சர் பதவி தந்து 200 நாட்களாகிவிட்டது, இன்னமும் ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்கவில்லை' எனச் சாடினார்.
பா.ஜ.க.வை சேர்ந்த ஜான்குமாரும், அவரது மகன்களும்தான் சார்லஸை புதுவை அரசியலுக்குள் இழுந்துவந்தவர்கள். நடிகர் விஜய்க்கு நிதியுதவி செய்து அவரை இயக்குவது ஆதவ் அர்ஜுனா. ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக விமர்சித்துள்ள சார்லஸை இயக்கும் ஜான்குமாரை ஆதரித்து விஜய் பேசுகிறார்! அப்படியானால்..?
அதேதான்... மாமனும், மச்சானும் சேர்ந்து நாடகம் நடத்துகிறார்கள். இதன் பின்னணியில் பா.ஜ.க.வின் பக்கா பிளான் உள்ளது. முதலமைச்சர் ரங்கசாமியோ, பா.ஜ.க.வை கழற்றிவிட்டு த.வெ.க.வை இணைத்துக்கொண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள நினைக்கிறார். அப்படி நடந்தால் புதுவையில் பா.ஜ.க.வுக்கு டெபாசிட்கூட தேறா தென்பதால், ரங்கசாமியை சுற்றி வலைப்பின்னலை உருவாக்கியுள்ளது பா.ஜ.க. குறிப்பாக, என்.ஆர்.சி. - த.வெ.க. கூட்டணி உருவாகக்கூடாது எனக் காய் நகர்த்துகிறது. புதுவையில் பா.ஜ.க.வின் பி டீமாக களமிறக்கப்பட்டுள்ள சார்லஸ் மார்ட்டினையும், விஜய்யையும் சேர்த்துவைக்க முடிவு செய்துள்ளது. இந்த கூட்டணிக்கு ஆதவ் ஒப்புக்கொள்ளமாட்டாரே என நினைக்கலாம். மாமன் - மச்சான் இருவரையும் இயக்குவதே பா.ஜ.க. தான் என்கிறார்கள் என்.ஆர்.காங்கிரஸார்.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்டுவிக்கும் பொம்மையாக இருக்கிறது மார்ட்டின் குடும்பம். அந்தளவுக்கு மார்ட்டின் குடும்பத்தார் மீது வழக்குகளும், புகார்களும் உள்ளது என்கிறார்கள் புதுவை காங்கிரஸார்.
அதுபற்றி நம்மிடம் பேசியவர்கள், "வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் அரசாங்கத்துடன் 2004, அக்டோபர் 6ஆம் தேதி, லாட்டரி அச்சடித்து விற்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது மார்ட்டினின் லாட்டரி நிறுவனம். அதோடு, சிக்கிம் மாநில லாட்டரிகளை கேரளாவிலும் விற்பனை செய்கிறது. சிக்கிம் மாநில லாட்டரிகள் கேரளாவில் விற்கப்பட்டதால் கேரளாவுக்கு பெரியளவில் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் விற்கும்போது அந்தந்த மாநிலங்களுக்கும் அந்நிறுவனம் வரி செலுத்தவேண்டும். வரி ஏய்ப்புப் புகார்கள் கிளம்பியதால் அதை மறைக்க, கட்சிப் பத்திரிகைக்கு மார்ட்டின் நிறுவனம் 2 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டை, 2008-ல், அப்போது முதலமைச்சராக இருந்த வி.எஸ்.அச்சுதானந்தன் சொன்னார். அதன்பின் இப்பிரச்சனை பூதாகரமானது.
அதற்கடுத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, மார்ட்டின் நிறுவனங்கள் மீது 22 வழக்குகளை பதிவு செய்தது, வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. 2014, பிப்ரவரி 4ஆம் தேதி எர்ணாகுளத்திலுள்ள பி.எம்.எல்.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஏழு வழக்குகளில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், 2008-2010 வரையில் கேரளாவில் சிக்கிம் லாட்டரி சீட்டுகள் 4,752 கோடிக்கு விற்கப்பட்டன. சிக்கிம் அரசாங்கத்துக்கு 142.93 கோடி மட்டுமே வரியாகக் கட்டியுள்ளது, இதனால் சிக்கிம் அரசாங்கத்துக்கு நட்டம். அதோடு, விற்காத லாட்டரி குறித்த தகவலை 45 நிமிடத்துக்கு முன்பாக இணையத்தில் வெளியிடவேண்டும், அரசுக்கு தெரிவிக்கவேண்டும் இது எதையும் வெளிப் படுத்தவில்லை. அதேபோல், லாட்டரி குலுக்கல்களில் வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட்டுள்ள 202 பேரில், மூன்று பேர் மட்டுமே கேரளாவைச் சேர்ந்தவர்கள், மீதி 199 வெற்றி யாளர்களில் யாரும் கேரளாவில் லாட்டரிச்சீட்டு வாங்கவில்லை. 150 பேர் மகாராஷ்டிரா, 14 பேர் மேற்குவங்கம், 13 பேர் தமிழ்நாடு, 9 பேர் கர்நாடகா, தலா 3 பேர் குஜராத், ஜார்க்கண்ட், உ.பி, தலா 2 பேர், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/15/adhav1-2025-12-15-16-37-09.jpg)
அரசுத்துறையின் அதிகாரிகள் 72 பேரின் கறுப்புப்பணத்தை, 15 புரோக்கர்கள் மூலமாக லாட்டரியில் பணம் விழுந்ததாகக் கணக்கு காட்டி வெள்ளையாக்கியுள்ளனர். இதற்கு இந்நிறுவனம் முழுக்கமுழுக்க உடந்தையென்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் தெரிவித்தது. 2011-ல் ஆட்சிக்கு வந்திருந்த ஜெ., மார்ட்டின் குடும்பத்தின் தொழில்களை குறிவைத்து அடிக்கத்துவங்கினார். மார்ட்டின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம், மார்ட்டினின் தொழில் பார்ட்னரான சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் 7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. அந்தப் பணம், மார்ட்டி னோடு இணைந்து கேரளா, மகராஷ்டிராவில் லாட்டரி விற்பனை செய்ததில் வந்த தொகை யென்றும், ஏஜென்டுகள் அனுப்பிவைத்தார்கள் என்றும் நாகராஜன் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து நாகராஜன், மார்ட்டின், மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். 10 ஆண்டுகளுக்கு பின்னர், எந்த முறைகேடும் நடைபெறவில்லை எனக்கூறி, வழக்கை முடித்து வைக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதையேற்ற நீதிமன்றம், மார்ட்டினுக்கு எதிரான வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை உள்ளே நுழைந்தது. சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவே வழக்கை திரும்பப் பெறுவது என்பது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்றத்தில் வாதம் வைத்தது அமலாக்கத்துறை. அதன்பின் மத்திய குற்றப்பிரிவு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென்று உத்தரவிட்டதால் அவ்வழக்கும் உள்ளது.
மேகாலயா மாநிலத்தில் லாட்டரி தொழில் செய்வதற்கான உரிமையை பெற்றுள்ளது மார்ட்டின் நிறுவனம். கள்ள லாட்டரிகள் விற்பனை செய்து, இதன்மூலம் அரசாங்கத்துக்கு பெரியளவில் நட்டம் உருவாகியுள்ளது. மேகாலயா மாநில லாட்டரி துறையின் இயக்குநர் மேரிசோன் டிமார்க்குடன் இணைந்து மோசடி யில் ஈடுபட்டிருப் பதை கண்டறிந்து, 2024-ல் மேகாலயா காவல்துறை ஒரு வழக்கை ஷில்லாங் கில் பதிவு செய் துள்ளது.
2014-ல் கேரளாவில் பதியப் பட்ட வழக்குகள், 2022-ல் மேற்குவங்க காவல்துறையால் பதியப்பட்ட இரண்டு வழக்குகள், 2024-ல் மேகாலயா அரசாங்கம் பதிவு செய்த ஒரு வழக்கையும் கையிலெடுத்த அமலாக்கத்துறை, 2024, நவம்பரில், தமிழ்நாடு, மேற்குவங்கம், கர்நாடகா, மேகாலயா, உத்திரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் 22 இடங்களில், மார்ட்டின் குடும்பத்தின் ப்யூச்சர் கேமிங் அன்ட் ஹோட்டல் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற முதன்மை கம்பெனிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா, டெய்சன், சார்லஸ் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இதில், 12.41 கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் 8.8 கோடி ரூபாயை சென்னை அலுவலகத்தில் பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை.
இதுகுறித்து அமலாக்கத்துறை தரப்பில் வெளியிட்ட செய்திகளின்படி, 6 மாநிலங்கள், 22 இடங்கள், நான்கு லாட்டரி சீட் அச்சடிக்கும் மையங்களில் நடத்தப்பட்ட ரெய்டில், 6 இலக்க லாட்டரி தான் அதிகளவில் அச்சடிக்கப் பட்டுள்ளது. 90 சதவீத வியாபாரம் இதில் தான் நடந்துள்ளது. பெரும்பாலான பரிசுகள் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. பரிசு வென்றவர்கள், விற்பனையான மற்றும் விற்காத லாட்டரி விவரங்கள் எதுவும் நிறுவனத்திடம் இல்லை. இதனால் பெரியளவில் வருமானம் குவிந்தது. அதேபோல் மற்ற லாட்டரி நிறுவனங்களை செயல்படவிடாமல் எதேச்சதி காரமாக நடந்துகொண்டனர். போலி லாட்டரி சீட்டுகளை விற்றனர். பரிசு விழுந்த எண்களை விழாததாகக் கணக்கு காட்டினர் எனப் பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இதில் மார்ட்டினுக்கு சொந்தமான சொத்துக் களை கொச்சியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகம், 622 கோடி மதிப்புள்ள சொத்துக் களையும், கொல்கத்தா விலுள்ள அமலாக் கத்துறை அலுவலகம் 409 கோடி மதிப்புள்ள சொத் துக்களையும் முடக்கியதாகத் தெரிவித் தது. அதேபோல் துபாய், லண்டனிலும் இவர் களுக்கு சொத்துக்கள் உள்ளதென்றும், சில ஆயிரம் கோடி ரூபாயை ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்துள்ளனர் என்றும், 350 போலி நிறுவனங் களைத் தொடங்கி நடத்திவருவதையும், அதில் மார்ட்டின் குடும்பம் நேரடியாக 114 நிறுவனங்களில் இயக்குநராக இருந்து செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டியது.
இவ்வளவு வழக்குகள் உள்ளதால்தான் இதிலிருந்து தப்பிக்கவே பா.ஜ.க.வுக்கு அதிகளவு தேர்தல் நிதி வழங்கியது. பா.ஜ.க.வோ... சார்லஸ் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவை தங்களது கைப்பாவையாக்கி அரசியல் விளையாட்டு நடத்திவருகிறது. இவர்களும் தங்களின் பாது காப்புக்காக அரசியல் அதிகாரம் பெற, அவர்களுக் கேற்ப ஆடுகிறார்கள் என்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2025/12/15/adhav-2025-12-15-16-36-58.jpg)