இளைஞணியுடன் உதயநிதி சந்திப்பு!  திக்திக் மா.செ.க்கள்!

youth dmk

தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டா-ன், 72 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களைச் சந்திப்பது, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களின் நிம்மதியைக் குலைத்துள்ளது.

youth dmk

தி.மு.க. இளைஞரணி, நிர்வாக ரீதியாக 72 மாவட்டங்களாக உள்ளது. அது 9 மண்டலங்களாகப் பிரித்து நிர்வாகம் செய்யப்படுகிறது. ஓராண்டுக்கு முன்பு இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதில் இரண்டு மண்டலங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை சந்தித்தார் உதயநிதி. அப்போது இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட சேலம் மாநாடு, நாடாளுமன்றத் தேர்தல் பணிகளால் இளைஞரணி அமைப்பாளர்களுடனான சந்திப்பு தற்கா-கமாக நிறுத்தப்பட்டது. இப்போது தேர்தல் முடிந்து, தேர்தல் விதிமுறைகள் அம-ல் இருப்பதால் அரசு நிகழ்ச்சிகள் ஏதுவும் இல்லாமல் ஓரளவு நேரம் கிடைத்துள்ளதால் மீண்டும்

தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டா-ன், 72 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களைச் சந்திப்பது, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களின் நிம்மதியைக் குலைத்துள்ளது.

youth dmk

தி.மு.க. இளைஞரணி, நிர்வாக ரீதியாக 72 மாவட்டங்களாக உள்ளது. அது 9 மண்டலங்களாகப் பிரித்து நிர்வாகம் செய்யப்படுகிறது. ஓராண்டுக்கு முன்பு இளைஞரணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதில் இரண்டு மண்டலங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் இளைஞரணி மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை சந்தித்தார் உதயநிதி. அப்போது இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட சேலம் மாநாடு, நாடாளுமன்றத் தேர்தல் பணிகளால் இளைஞரணி அமைப்பாளர்களுடனான சந்திப்பு தற்கா-கமாக நிறுத்தப்பட்டது. இப்போது தேர்தல் முடிந்து, தேர்தல் விதிமுறைகள் அம-ல் இருப்பதால் அரசு நிகழ்ச்சிகள் ஏதுவும் இல்லாமல் ஓரளவு நேரம் கிடைத்துள்ளதால் மீண்டும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளார்.

கடந்த மே 16ஆம் தேதி 3வது மண்டலத்தில் அடங்கியுள்ள திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டம், பாண்டிச்சேரி மாநில இளைஞரணி நிர்வாகிகளை அழைத்து ஓராண்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மே 17ஆம் தேதி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களை சந்தித்தார். சந்திப்பில் நடந்தது குறித்து இளைஞரணி நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ""புதிய இளைஞரணி நிர்வாகிகள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கான ஆய்வுக்கூட்டமே இது. எங்களுக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஒதுக்கியிருந்தார். துணை அமைப்பாளர்கள் ஒவ்வொருவரிடம் 5 நிமிடங்கள் வரை பேசி அவர்களின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டார். நீட் தேர்வு தொடர்பாக மக்களிடம் எவ்வளவு கையெழுத்து வாங்கினீர்கள், கோடைகாலத்தில் இளைஞரணி சார்பில் எத்தனை இடத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது? அது சரியாக செயல்படுகிறதா?, இளைஞரணி சார்பில் திறக்கச்சொன்ன நூலகம் திறக்கப்பட்டதா? எத்தனை இடங்களில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது? அங்கு எவ்வளவு பொதுமக்கள் வருகிறார்கள்? கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு செய்த நலத்திட்ட உதவிகள் என்னென்ன? என்றெல்லாம் கேட்டறிந்தவர், 'இல்லந்தோறும் இளைஞரணி' என்கிற நிகழ்ச்சியை எப்படி நடத்தினீர்கள்? புதிதாக இளைஞரணியில் எவ்வளவு பேரை சேர்த்துள்ளீர்கள்?' எனக்கேட்டார். நாங்கள் ஒவ்வொருவரும் செய்த கட்சிப் பணிகள் குறித்த புகைப்படங்கள், பத்திரிகை செய்திகளை புத்தகமாகத் தயாரித்திருந்ததை அவரிடம் தந்தோம். அதைப் புரட்டிப் பார்த்தவர், பின்னர் மினிட் புக்கினை ஆய்வு செய்து அதில் கையெழுத்திட்டார். திருவண்ணாமலை மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி எம்.பியும், எம்.பி. வேட்பாளருமான சி.என்.அண்ணாதுரையிடம், "தேர்தல் எப்படி இருந்தது?, வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் எவ்வளவு இருக்கும்?' என்று தேர்தல் பணிகள் குறித்த கள நிலவரத்தை கேட்டறிந்தார். அதேபோல் புதுச்சேரி மாநில இளைஞரணி அமைப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான சம்பத்திடம், 'புதுச்சேரி தொகுதியில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வெற்றி பெறுமா?, தேர்தல் பணி எப்படி நடந்தது? காங்கிரஸ் நிர்வாகிகள் நமக்கு மரியாதை தந்தார்களா?' எனக்கேட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ.விடம் தனியே பேசும்போது, நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் குளறுபடி ஏற்பட்டதாமே? யார் செய்தது? என விவரங்கள் கேட்டதாகக் கூறுகின்றனர். அணி அமைப்பாளர்களுடன் தனியாகவும் பேசியுள்ளார். இளைஞரணி நிர்வாகிகள், கட்சி மா.செ.க்களுடன் இணைந்து செயல்படவேண்டும், ஒத்துழைக்காத மா.செ.க்கள் குறித்து தனக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும், ஜீன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்தவேண்டும் எனவும் சொல்-, புதிய பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என வாழ்த்தி அனுப்பினார்'' என்றார்கள்.

இளைஞரணி அமைப்பாளர்கள் தங்களைப் பற்றி ஏதாவது குறை சொல்-யிருப்பார்களா? என ஒவ்வொரு மா.செ.வும் துணை அமைப்பாளர்களிடம் கேட்டு வருகின்றனர். சில மா.செ.க்கள் கூட்டத்துக்கு போவதற்கு முன்பே மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளைச் சந்தித்து சமாதானக்குர-ல் பேசி அனுப்பியுள்ளனர்.

தி.மு.க.வில் நிர்வாக ரீதியாக மாவட்டங்களைப் பிரிக்கத் திட்டமிடுவதால், நாடாளுமன்றத் தேர்தல் ரிசல்ட் வருவதற்கு முன்பு இளைஞரணிக்கான ஆய்வை முடித்துவிட்டு அடுத்தகட்டப் பணிகளை மேற்க்கொள்ள வேண்டும் என அமைச்சர் உதயநிதி நினைக்கிறார் என்கிறார்கள். அதனைப் புரிந்துக்கொண்டு சில மாநில, மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் பதவிக்கு காய் நகர்த்தி வருகின்றனர். இந்த ஆய்வால் கட்சிப்பணி சரியாக செய்யாத மா.செ.க்கள்தான் திக்... திக்... மனநிலையில் உள்ளனர்.

இதையும் படியுங்கள்
Subscribe