சென்னையிலிருந்து மதுரைக்கு கடந்த 9-ஆம் தேதி, அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் மதுரை ஒத்தக்கடையில் மாவட்ட நிர்வாகம், அரசுத் துறைகளில் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகைதந்த உதயநிதி ஸ்டாலின், 11,500 பேருக்கு வீட்டுமனைப்பட்டா, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 2500 கோடி மதிப்பிலான கடனுதவி, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் களுக்கு 298 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாலையில் தமிழக அரசின் விரிவான திட்டங்களை, மக்களிடையே எவ்வாறு கொண்டு சேர்க்கவேண்டும், பல்வேறு துறைகளில் உள்ள குறைபாடுகளைக் கேட் டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான ஆலோ சனைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக் கப்பட்டிருந்தது. மக்களோடு தொடர்புடைய வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, பொதுப் பணித்துறை, கூட்டுறவுத்துறை, கல்வித்துறை என்று அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் குழுமியிருந்தனர். கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கையில் லேப்டாப்புடன் ஒவ்வொரு துறைரீதியாக, "நான் முதல்வன்' திட்டத்தில் மக்க
சென்னையிலிருந்து மதுரைக்கு கடந்த 9-ஆம் தேதி, அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் மதுரை ஒத்தக்கடையில் மாவட்ட நிர்வாகம், அரசுத் துறைகளில் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகைதந்த உதயநிதி ஸ்டாலின், 11,500 பேருக்கு வீட்டுமனைப்பட்டா, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு 2500 கோடி மதிப்பிலான கடனுதவி, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் களுக்கு 298 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மாலையில் தமிழக அரசின் விரிவான திட்டங்களை, மக்களிடையே எவ்வாறு கொண்டு சேர்க்கவேண்டும், பல்வேறு துறைகளில் உள்ள குறைபாடுகளைக் கேட் டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான ஆலோ சனைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக் கப்பட்டிருந்தது. மக்களோடு தொடர்புடைய வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, பொதுப் பணித்துறை, கூட்டுறவுத்துறை, கல்வித்துறை என்று அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் குழுமியிருந்தனர். கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கையில் லேப்டாப்புடன் ஒவ்வொரு துறைரீதியாக, "நான் முதல்வன்' திட்டத்தில் மக்கள் கொடுத்திருந்த மனுவாரியாக அது எந்தளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது, நிவர்த்தி செய்யாததற்கு என்ன காரணம்? என்று ஒவ்வொரு அதிகாரியையும் தனித்தனியாக கேள்விமேல் கேள்வி கேட்க, அவர்கள் சொல்லும் பதிலுக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் போனில் தொடர்புகொண்டு பேசிய ஆடியோ ஒலித்தது.
சரியான பதிலைத் தராத அதிகாரிகளுக்கு பணிமாறுதலுக்கான உத்தரவு பிறப்பிக்க, அதிர்ந்துபோயினர் அதிகாரிகள். அடுத்தடுத்த துறைகளின் செயல்பாடுகள், அங்கு நடந்து கொண்டிருக்கும் சமீபத்திய பிரச்சனைகள், என்ன நடந்தது, ஏன் இப்படி நடக்கிறது, ஏன் உங்களால் இதைச் சரிசெய்யமுடியவில்லை என்று கேள்வியெழுப்பி, மழுப்பலாக பதில் சொன்னவர்களை இடைமறித்து, உங்கள் கவனத்திற்கு இந்த பிரச்சனை வந்து 10 நாட் களுக்கு மேலாகியும் நீங்கள் இதுகுறித்து நட வடிக்கை எடுக்கவில்லை என்பதை ஆதாரத் துடன் எடுத்துவைத்து கிடுக்கிப்பிடி போட்டார்.
துறைரீதியாக மக்கள் அளித்த மனுக்களின் எண்ணிக்கையிலிருந்து, அது எவ்வாறு கையாளப்பட்டிருக்கிறது, அதிகாரிகள் பற்றி மக்கள் என்ன கருதுகிறார்கள் என்று அலசினார்.
இதெப்படி சாத்தியமாகியது? ஒவ்வொரு துறைக்கும் ஒரு டீம் விவரங்களைச் சேகரித்து உதயநிதி ஸ்டாலினின் தமிழக அரசின் சிறப்பு திட்டச் செயலர் தரைஸ் அகமது தலைமையி லான இளம் அதிகாரிகள் குழுவிற்கு அனுப்பு கின்றனர். மக்கள் தொடர்புடைய துறை அலுவலகங்களுக்கு இந்த குழு செல் கிறது. சென்று, மக்களோடு மக்களாக அங்கு நடக்கும் விஷயங்களைக் கிரகித்து, குறிப்பெடுத்து, அங்கு நடை பெற்ற அலுவல் பணிகள் எவ்வளவு, அதனால் மக்கள் பயனடைந்தது எவ்வளவு என்று முழு விவரங்களையும் உதயநிதியின் அலுவல் குழுவிற்கு அனுப்பிவைக்கிறது. மற்றொரு குழு இவற்றை ஆய்வுசெய்து குறிப்புகளை அவருக்கு வழங்குகிறது
மதுரை அரசு விடுதி ஒன்றில் வாட்ச்மேன் மீதான புகார் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உதய நிதியின் குழு கேள்வி எழுப்பியபோது, அதற்கு அவர், தான் பணியில் இல்லாத நாள், நேரம் குறித்து விவரங்களைத் தெரிவித்ததும், அவர் பணியிலில்லாத நேரத்தில் எங்கு இருந்தார் என்பதற்கான அலைபேசி உரையாடல் ஒன்றை உதயநிதியின் அதிகாரிகள் குழு வெளியிட, இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த அலுவலர் அதிர்ச்சியில் உறைந்தார்.
இதேபோல் கிழக்கு ஒன்றியத்தில் ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியர், வார்டனுக்குள் நிலவிய மோதல் தொடர்பான புகாரில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை, தலைமை ஆசிரியைக்கும், வார்டனுக்கு மான அரசியலை அதிகாரிகள் குழு ஆதாரத்தோடு நிரூபிக்க, இருவரையும் அங்கிருந்து பணியிட மாற்றம்செய்ய உத்தர விட்டார் உதயநிதி.
அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களில் 1,500 பேர் மேல்நிலைக் கல்விக்கு செல்லாதது ஏன் என்ற கேள்விக்கு கல்வி அதிகாரி அளித்த பதில் திருப்தியாக இல்லாமல் போகவே, மாணவர்களைக் கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மதுரை கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஏசி வேலை செய்யாதது, நீர்க்கசிவு உள்ளிட்ட குறை களையடுத்து கிளை நூலகத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரி மாதம் ஒருமுறையாவது ஆய்வுசெய்ய உத்தரவிடவேண்டும் என கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.
இதுகுறித்து மதுரை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டோம். தி.மு.க. நிர்வாகி ஒருவர் நம்மிடம், "எல்லாம் சரிதான், கலைஞர் இருக்கும்போது ஒவ்வொரு கிராமம், வார்டுகளிலும் அந்தந்த பகுதி தி.மு.க. நிர்வாகிகளிடம்தான் மக்கள் தங்கள் குறைகளைச் சொல்வார்கள். அதை கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிகாரிகள் மட்டத்தில் கொண்டுபோய் செய்துகொடுப்பது வழக்கம். அதுதான் மக்களுக்கும் தி.மு.க.வுக்கும் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. இப்போது அதிகாரிகள் ஆட்சிதான் நடக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ யாரோ சொல்லி ஐ.ஏ. எஸ். அதிகாரிகள் பேச்சைக் கேட்டு ஆட்சியை அதிகாரிகள் கையில் திணிப்பது கட்சிக்கும் மக்களுக்குமான தொடர்பை முறிக்கும். உதயநிதி கையில் சாட்டையை சுழற்றியிருப்பது கொஞ்சம் ஆறுதலளித்தாலும், கட்சிக்காரனை யும் மக்கள் பிரச்சனைகளில் ஈடுபடுத்தும்படி திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும்'' என்றார்.
அதன்பின், பரமக்குடி சென்ற அமைச்சர் உதயநிதி, தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்துக்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திவிட்டு சென்னை திரும்பினார்.