Advertisment

சாட்டையை சுழற்றிய உதயநிதி! உதறலில் கோவை உ.பி.க்கள்!

ff

தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்காக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், பகுதி ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், ஊராட்சி, நகராட்சி செயலாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டலக்குழு தலைவர்கள் உள்ளிட்டோரை சென்னைக்கு அழைத்திருந்தது தி.மு.க. தலைமை. கட்சியின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோருடன் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமையன்று அறிவாலயத்தில் நடைபெற்றது. தேர்தல் சமயங்களில் தி.மு.க.வில் நடக்கும் சம்பிரதாயக் கூட்டமென்றே எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால் உளவுத்துறை ரிப்போர்ட்டை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் உதயநிதி கேள்வி கேட்கத் துவங்கியதும், நிர்வாகிகளின் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட சிலரிடம் பேச்சுக் கொடுத்தபொழுது, உதய

தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்துக்காக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், பகுதி ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், ஊராட்சி, நகராட்சி செயலாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர், மண்டலக்குழு தலைவர்கள் உள்ளிட்டோரை சென்னைக்கு அழைத்திருந்தது தி.மு.க. தலைமை. கட்சியின் முதன்மைச் செயலாளர் அமைச்சர் நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோருடன் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமையன்று அறிவாலயத்தில் நடைபெற்றது. தேர்தல் சமயங்களில் தி.மு.க.வில் நடக்கும் சம்பிரதாயக் கூட்டமென்றே எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால் உளவுத்துறை ரிப்போர்ட்டை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொருவரையும் உதயநிதி கேள்வி கேட்கத் துவங்கியதும், நிர்வாகிகளின் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட சிலரிடம் பேச்சுக் கொடுத்தபொழுது, உதயநிதி ஸ்டாலின் பாகுபாடு பார்க்காமல் அனைவரிடமும் சாட்டையைச் சுழற்றியதை சிலாகித்துப் பேசினர்.

Advertisment

uday

மதியம் 12.45 மணியளவில் கோவை மாநகர மாவட்டத்திற்குட்பட்ட சிங்காநல்லூர் 3 பகுதி கழக செயலாளர் சேக், பீளமேடு பகுதி கழக செயலாளர் செந்தமிழ் செல்வன், வேலாண்டிபாளையம் கிருஷ்ணராஜ் மற்றும் சாய்பாபா காலனி பகுதி கழக செயலாளர் கே.எம்.ரவி ஆகியோரை முதலில் அழைத்திருந்தனர். எடுத்த எடுப்பிலேயே, "கட்சியில் எந்த நிகழ்ச்சி என்றாலும் உங்க பையனைத்தான் முன்னிறுத்தி வருகிறீர்களாம். ஏன், மத்தவங்க எல்லாம் கட்சிக்காரங்க இல்லையா?'' என வேலாண்டிபாளையம் கிருஷ்ணராஜிடம் கொக்கியைப் போட்ட வேகத்திலேயே, மறுபக்கம் திரும்பி, "ஏன் சேக் பாய், மா.செ.வை மதிக்க மாட்டேன் என்கிறீர்களாம். உங்க மேல ஏகப்பட்ட குற்றச்சாட்டு வருது. ஜாக்கிரதை'' என்றிருக்கிறார் உதயநிதி.

ஏ.சி. அறையைத் தாண்டி 4 பகுதி செயலாளர்களுக்கும் வியர்த்துக் கொட்டிய நிலையில், "கடந்த உள்ளாட்சித் தேர்த லின்போது உங்க பகுதி கழகத்தில் மட்டும் ஓட்டு கம்மி'' என செந்தமிழ்செல்வனை கேள்வி எழுப்ப, "அந்த சமயத்துல நான் அங்க நிர்வாகியாக இல்லைங்க.. மா.செ. கார்த்தியோட ஆளு தான் இருந்தாரு'' எனப் போட்டுடைத்திருக்கிறார் அவர். "அடாவடி வசூல், கட்டப்பஞ்சாயத்து, மாமூல் என குறுநில மன்னனாகவே இருக்கீங்களா சார்ர்ர்ர்ர்?" என அழுத்தந்திருத்தமாக கே.எம்.ரவியை கேட்டிருக்கிறார். இதனிடையே எழுந்த சேக், "மா.செ. கார்த்திக்கின் தகிடுத்தத்தங் களை ஆதாரத்தோடு கொடுக்க ஒருநாள் அவகாசம் கொடுங்க'' எனக் கேட்டார். (அதேபோல் அடுத்த நாள் அத்தனை ஆதாரங்களையும் கொடுத்துள்ளதாகக் கூடுதல் தகவல்)

Advertisment

தொடர்ச்சியாக திருமலைபாளையம் பேரூர் கழகச் செயலாளர், குறிச்சி வடக்குப் பகுதி செயலாளர் எஸ்.ஏ.காதர், கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகர் மற்றும் கிணத்துக்கடவு மேற்கு ஒ.செ. செந்தில்குமார் ஆகியோரிடம், "உங்களுக்கு யார் மாவட்ட செயலாளர்? அவர் பேச்சைக் கேட்க மாட்டீங்களா? சேனாதிபதி பேச்சைக் கேட்டுத்தான் நடப்பேன் என்றால் கட்சிக்குள் இருக்க முடியாது'' என்று அதிரடி காட்டி அனுப்பிவைத்தார். அதற்கடுத்து, சூலூர் அன்பரசு, சுல்தான்பேட்டை மகாலிங்கம் ஆகிய பகுதி செயலாளர்களிடம், "உங்கள பத்தி பெரிசா கம்ப்ளைண்ட் வரலை. கட்சிக்கு நேரம் செலவிடுங்கள்'' என்றிருக்கிறார். இதே வேளையில், "நைட் 8 மணிக்கு மேல கட்சிக்காரங்க யாரும் கூப்பிடக்கூடாதுன்னு சொல்றீங்களாமே?'' எனக் கிணத்துக்கடவு தெற்கு ஒ.செ. செட்டியக்காபாளையம் துரையை நோக்கி பாய அவருக்கு வியர்த்துவிட்டது.

uday

அடுத்ததாக, கோவை மாநகர மா.செ. கார்த்தி, கோவை தெற்கு, வடக்கு மா.செ.க்களான தளபதி முருகேசன் மற்றும் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோரிடம், "ஐ.டி. டீமை வைத்து மிரட்டி வசூல் செய்வது, கோஷ்டி அரசியல் செய்வதுதான் உங்கள் செயல்பாடு. காரமடை யில் உங்களால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இப்படியே போனால் மாவட்ட செயலாளரை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்று கையில் வைத்திருந்த பேப்பர்களைக் காட்டி பேசியிருக்கின்றார் உதயநிதி. மேலும், "கோவை தெற்கு மாவட்டத்திலுள்ள ஒன்றிய செயலாளர்களை அ.தி.மு.க.விற்கு அனுப்பும் வேலையை வெகுசிறப்பாக செய்றீங்க'' என்று சாட் டையை சுழற்றியிருக்கிறார். அங்கிருந்த கோவை மேயர் உள்ளிட்டோரை கண்டுகொள்ளவே இல்லையாம் உதயநிதி. கூட்டத்தின் நிறைவாக, 'கோவை மாவட்டம் நமக்கு வீக்காகவே இருக்கிறது. நிர்வாகிகளின் செயல்பாடுகள் சரியில்லை' என்கிற வேதனையே அவருக்கு மிஞ்சியது. இதனால் கோவையையும், பொள்ளாச்சியையும் இழக்காமலிருக்க, குறிப்பிட்ட சில மா.செ-க்கள் தட்டி வைக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாமெனத் தெரிகிறது.

"மு.இராமநாதன், இரா.மோகன், மு.மா.சண்முக சுந்தரம், சி.டி.தண்டபாணி, கா.ரா.சுப்பையன் போன்றோர் மாவட்டத்தில் முக்கிய பதவிகளை வகித்தபோது கழகம் வளர்ச்சியடைந்தது. ஆனால் தற்போது இங்கே கழகம் அதலபாதாளத்தில் கிடக்கிறது. மாவட்ட செயலாளர் கள் மாற்றம் இல்லாமல் பாராளுமன்ற வெற்றி கோவையில் சந்தேகமே'' என்கின்றனர் கோவை மாவட்ட சீனியர் தி.மு.க.வினர்.

nkn030224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe