செப். 4, 5 தேதிகளில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கள ஆய்வு, தி.மு.க. சார்பில் தி.மு.க.வின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியும் நிவாரணத் தொகையையும் வழங்கவந்தார் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சர்களான கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில், மாநில இளைஞரணி துணையமைப்பாளர் ஜோயல் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலையில் திரண்ட கூட்டத்தின் உற்சாக வரவேற்பில் உருக்கமாகப் பேசினார் உதயநிதி ஸ்டாலின்.
எடுத்த எடுப்பிலேயே தூத்துக்குடி மாவட் டம் வீரம்செறிந்த மாவட்டம். பல அடக்குமுறை களைச் சந்தித்து தகர்த்தெறிந்த மாவட்டம் என்று டைமிங்காகப் பேசியவர், “"இதுவரை 31 நிகழ்ச்சி களில் பங்கேற்று கழகத்தின் மூத்த முன்னோடி களுக்கு 31 கோடி வழங்கியுள்ளோம். இந்தப் பணம் உங்களுக்குப் பெரிதல்ல. இளைஞரணி சார்பில் கடந்த 4 மாதத்தில் 50 லட்சம் ரூபாய்வரை உதவி செய்துள்ளோம். தேவைப்படும்போது நீங்கள் இளைஞரணி அலுவலகத்தை அணுகினால் கண்டிப்பாக உதவி செய்வோம்'' என்றார்.
கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியை வழங்கிய உதயநிதி, "நீங்களெல்லாம் பெரியார், அண்ணாவைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் நான் அவர்களைப் பார்த்ததில்லை. உங்களை எல்லாம் அவர்களின் மறு உருவமாகப் பார்க்கிறேன்'' என் றார் உருக்கமாக. தென்காசி மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியின் முன்தினம், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், கடையம் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரான மகேஷ் மாயவன் சார்பில் இப்பகுதிகளில், "பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா? நிர்வாணமாக்கப்படும் பெண்கள் உங்கள் மக்கள் இல்லையா. பதில் சொல்லுங்கள் மிஸ்டர் எக்ஸ் ஆபீஸர் அண்ணாமலை'’ என கேள்வி கேட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள், தென்காசி மாவட்டத்தின் பரபர சப்ஜெக்டாகியிருக்கிறது.
ஆய்விற்குப் பின்பு நடந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி கௌரவித்த அமைச்சர் உதயநிதி, கட்சியில் அதிக உறுப்பினர்களைச் சேர்த்த நகர கழகத்தைச் சேர்ந்த 6 பேருக்கு தி.மு.க. நகர செயலாளர் சாதிர் ஏற்பாட்டில் செய்யப்பட்ட 5 கிராம் அளவுள்ள தங்க மோதிரத்தை பரிசாக அணிவித்துப் பாராட்டினார். அதன்பின் தனது உரையை தொடங்கிய அமைச்சர் உதயநிதியின் உரைவீச்சு அழுத்தமாகவே இருந்தது.
"சனாதனக் கொள்கை ஒழியும்வரை என்னு டைய குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அம்பேத்கர், பெரியார் சொன்னதைத்தான் நானும் சொன்னேன். மணிப்பூரில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்கமுடியாத ஒரு சூழல். நம் முதல்வர் மணிப்பூர் வீரர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து தங்கவைத்து பயிற்சியளித்திருக்கிறார். முதல்வரை மணிப்பூர் வீரர்கள் பாராட்டுகிறார்கள். இதுதான் திராவிட மாடலுக்கும் சனாதனத்திற்கும் உள்ள வித்தியாசம்''” என்றார்.
-செய்தி, படங்கள்: ப.இராம்குமார்