லைஞர் உடல்நலம் இல்லாத போது, தி.மு.க.வின் செயல்தலைவராகி, கலைஞரின் மறைவுக்குப் பின் தலைவரானதும், கலைஞர் பிறந்த வீடிருக்கும் திருக்குவளைக்கு வந்தார் மு.க.ஸ்டாலின். தி.மு.க. இளைஞரணியின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்றதும், தந்தையின் பாணியில் கடந்த 13-ஆம் தேதி திருக்குவளை வந்தார் உதயநிதி.

12-ஆம் தேதி தனது தாயார் துர்கா ஸ்டாலினுடன் திருச்சி சென்று அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அழைத்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட்டு இரவு 8 மணிக்கு திருவாரூர் வந்தார் உதயநிதி. கலைஞர், ஸ்டாலின் பாணியி லேயே சன்னதி தெருவில் இருக்கும் கலைஞரின் சகோதரி இல்லத்தில் இரவு தங்கினார்கள்.

மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், இளைஞரணி துணைச் செயலாளர் களான அன்பில் மகேஷ், தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, துரை, ஆர்.டி.சேகர், கோயல் உள்ளிட்டோருடனும் திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களின் இளைஞரணி நிர்வாகிகளும் கலந்துரையாடி, அடிக்கடி கட்சிக்கூட்டங்கள், மக்கள் பிரச்சனைகளுக்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆலோசனை சொன்னார் உதயநிதி. காலை 9.50-க்கு அங்கிருந்து புறப்பட்டு, காட்டூரில் இருக்கும் பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவிடம் சென்று மாலை அணிவித்து வணங்கினார். சூடம் ஏற்றி, உதயநிதியை ஆசிர்வதித்தார் துர்கா ஸ்டாலின்.

அங்கிருந்த முரசொலி மாறன் உள்ளிட்ட அனைவரது படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், திருக்குவளையை நோக்கிப் பயணித்தார் உதயநிதி. செல்லும் வழியில் இருக்கும் ஊர்களான புலிவலம், மாங்குடி, மாவூர் கிராம மக்கள் சாலையில் திரண்டு நின்று உதயநிதிக்கு மிகப் பெரிய வரவேற்பு அளித்தனர். மக்களின் வரவேற்பால் நெகிழ்ச்சியான உதயநிதி, அனைவரையும் பணிவுடன் வணங்கினார். நாகை மாவட்ட எல்லையான குளப்பாட்டில் தி.மு.க.இளைஞரணியினர் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர்.

Advertisment

d

செல்லும் வழியில் பள்ளி மாணவ-மாணவி கள், முதியோர்களைப் பார்த்தால் காரைவிட்டு இறங்கி, "நான் கலைஞரின் பேரன்' என அறிமுகப் படுத்திக் கொண்டு கைகுலுக்கி மகிழ்ந்தார். கலைஞர் குடும்பத்து குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் முன்பு திரண்டிருந்த கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, கலைஞரின் இல்லத்திற்குள் நுழைந்தார் உதயநிதி. தஞ்சை எம்.பி.பழனி மாணிக்கமும் நாகை மாஜி எம்.பி. ஏ.கே.எஸ்.விஜயனும் ஆஜராகியிருந்தனர்.

வீட்டிற்கு அருகிலேயே கலைஞரின் 96-ஆவது பிறந்த நாள் கொடி ஏற்றுவிழாவில் கருப்பு-சிவப்பு கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டையும் திறந்து வைத்தார் உதயநிதி.

""எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் சக தோழரைப் போல் எங்களை ஊக்கப்படுத்தி யிருக்கிறார்'' என்கிறார்கள் திருவாரூர் மாவட்ட தி.மு.க.இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினி ஜின்னாவும் நாகை மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பாரியும். எதிர்பார்ப்பு கள் மிகுந்துள்ளன. உதயநிதியின் செயல்பாடு உற்று நோக்கப்படுகிறது.

-க.செல்வகுமார்