அ.தி.மு.க. சார்பில் ஜெ. பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணா மலை மாவட்டம் ஆரணியில் கடந்த மார்ச் 20-ஆம் தேதி திண்ணைப் பிரச்சாரம், பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை திருவண்ணாமலை மத்திய மாவட்ட அம்மா பேரவையும், ஆரணி தெற்கு ஒன்றியமும் இணைந்து செய்திருந்தது.
இதற்கு சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அம்மா பேரவைச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வருகை தந்திருந்தார். ஆரணி நகரில் மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு கொடி, தோரணம் கட்டி கூட்டத்துக்கு இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்களை அழைத்துவந்து உட்காரவைத்து, ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, உதயகுமாரை சந்தோஷப் படுத்திவிட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் அம்மா பேரவை மத்திய மா.செ.வும், நகரமன்ற வைஸ் சேர்மனுமான பாரிபாபுவையும், எம்.பி. தேர்தலில் ஆரணி தொகுதியில் நின்று தோல்வியைச் சந்தித்த ஆரணி தெற்கு ஒ.செ ஜி.வி. கஜேந்திரனையும் பெரிய அளவில் பாராட்டியுள்ளார் உதயகுமார். இது இருவரையும் தெம்பாக்கி
அ.தி.மு.க. சார்பில் ஜெ. பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திருவண்ணா மலை மாவட்டம் ஆரணியில் கடந்த மார்ச் 20-ஆம் தேதி திண்ணைப் பிரச்சாரம், பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை திருவண்ணாமலை மத்திய மாவட்ட அம்மா பேரவையும், ஆரணி தெற்கு ஒன்றியமும் இணைந்து செய்திருந்தது.
இதற்கு சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், அம்மா பேரவைச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வருகை தந்திருந்தார். ஆரணி நகரில் மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு கொடி, தோரணம் கட்டி கூட்டத்துக்கு இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்களை அழைத்துவந்து உட்காரவைத்து, ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, உதயகுமாரை சந்தோஷப் படுத்திவிட்டது. நிகழ்ச்சி முடிந்ததும் அம்மா பேரவை மத்திய மா.செ.வும், நகரமன்ற வைஸ் சேர்மனுமான பாரிபாபுவையும், எம்.பி. தேர்தலில் ஆரணி தொகுதியில் நின்று தோல்வியைச் சந்தித்த ஆரணி தெற்கு ஒ.செ ஜி.வி. கஜேந்திரனையும் பெரிய அளவில் பாராட்டியுள்ளார் உதயகுமார். இது இருவரையும் தெம்பாக்கியுள்ளது.
அதேநேரத்தில் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சேவூர்.ராமச்சந்திர னையும், மத்திய மாவட்டச் செயலாளர் ஜெயசுதாவையும் கலங்கவைத்துள்ளது என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.
இதுகுறித்து மத்திய மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்களிடம் பேசியபோது, "அமைச்சராக சேவூர்.ராமச்சந்திரனுடன் இருந்தபோது, அவ ருடனே இருந்து பொருளாதாரத்தில் பெரியளவில் வளர்ந்தவர் பாரி.பாபு. ஆட்சி முடிவுற்றதும் இருவருக்குள்ளும் மோதல் உருவானது. அமைச்சராக இருந்தபோது சேவூர்.ராமச்சந்திரன் சம்பாதித்த சொத்துவிவரங்களை தன் ஆதரவாளர்கள் மூலமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துமளவுக்கு இருவரும் எதிரும்புதிருமாக மாறிவிட்டனர். கட்சியில் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை தங்கள் அணிக்கு வாருங்கள் என ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் என ஆளாளுக்கு ஆள்பிடித்தபோது, முன்னாள்களுக்கு கட்சியில் பதவிதந்து தன்னுடன் தக்கவைத்துக்கொள்ள முடிவுசெய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்களுக்கு கட்சியில் பதவிகள் தந்தார் இ.பி.எஸ்.
அதன்படி கட்சி நிர்வாக வசதிக்காக திருவண்ணாமலை வடக்கு, தெற்கு என இரண்டு கழக மாவட்டமாக இருந்தது கிழக்கு, தெற்கு, வடக்கு, மத்தியம் என நான்கு மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. போளூர், ஆரணி தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதாவுக்கு மா.செ. பதவி தந்தனர். 2011-ல் போளூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார் ஜெயசுதா. 2016, 2021-ல் அவருக்கு சீட் தரப்படாமல் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தார். அவரை மத்திய மாவட்டச் செயலாளராக அறிவித்ததும், ஆரணி சிட்டிங் எம்.எல்.ஏ. சேவூர்.ராமச்சந்திர னுக்கு எதிரானவர்கள், ஆரணியில் ஜெயசுதா வுக்கு தடபுடலாக வரவேற்பளித்தனர். ஜெயசுதாவின் நிழலாகவே பாரி.பாபு, கஜேந்திரன், ஆரணி ந.செ. அசோக்குமார் போன்றோர் செயல்பட்டனர்.
ஆரணி, போளூர் தொகுதிகளை உள் ளடக்கிய மத்திய மாவட்டத்துக்கு செயலாளராக ஜெயசுதா இருந்தாலும், போளூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக முன்னாள் அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி இருப்பதால் போளூர் தொகுதிக்குள் அரசியல்செய்ய ஜெயசுதாவுக்கு தடைபோட்டார் அக்ரி. இதனால் அதிருப்திக்கு ஆளானாலும் அக்ரியோடு மோதி ஜெயிக்க முடியாது என போளூரை மறந்து ஆரணி தொகுதியை மட்டுமே சுற்றி வந்தார் ஜெயசுதா. ஆரணி தொகுதியிலுள்ள சிட்டிங் எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சேவூர்.ராமச் சந்திரனைக் கண்டுகொள்ளாமல் அவருக்கு எதிராக அரசியல் செய்யும் பாரி.பாபு, கஜேந்திரன் போன்றோருடன் சேர்ந்து ஜெயசுதா அரசியல் செய்தது, நிகழ்ச்சிகள் நடத்தியது சேவூர்.ராமச்சந்திரனை கடுப்பாக்கியது.
தனது கோபத்தை கட்சி பொது மேடையிலேயே வெளிப்படுத்தி ஜெயசுதாவை விமர்சித்தார். இது இ.பி.எஸ். வரை புகாராகச் சென்று விசாரணை நடைபெற்று, சமாதானம் செய்துவைக்கப்பட்டாலும் இருவரும் எதிரும்புதிருமாக இருந்துவருகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் போளூர் தொகுதியில் சீட் எதிர்பார்த்தவர், அங்கு கடுமையான மோதல் இருப்பதால் ஆரணி தொகுதியில் சீட் வாங்கவேண்டும் எனக் குறிவைத்து வேலை பார்க்கத் துவங்கியுள்ளார் ஜெயசுதா. இவரின் மூவ் தெரிந்த சேவூர் ராமச்சந்திரன், "ஆரணி தொகுதியில் மூன்றாவது முறையாக மீண்டும் எனக்கே சீட் தாங்க. தேர்தல் செலவுக்கு நீங்கள் பத்து ரூபாய்கூட தரத் தேவையில்லை. என் தொகுதிக்கான செலவை நானே பார்த்துக் கொள்கிறேன்' என இ.பி.எஸ்.ஸிடம் கூறியுள்ளார். இந்த இருவரின் மூவால் பாரி.பாபு, கஜேந்திரன் இருவரும் சுதாரித்துக்கொண்டு தனி ரூட் போடுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சிபாரிசில் எம்.பி. சீட் வாங்கி போட்டியிட்ட கஜேந்திரன் தோல்வியடைந்தார். தேர்தலில் சில கோடிகள் செலவு செய்துள்ளேன். அதனால் ஆரணி தொகுதி எம்.எல்.ஏ. சீட்டை எனக்கு தாங்க என அவர் வழியாகவே தலைமையிடம் கோரிக்கை வைத்துவருகிறார். ஆரணி தொகுதி வன்னியர் சமுதாயத்துக்கு ஒதுக்கப்படும் என்றால் நான் உங்களுக்கு சீட் தரச்சொல்லி சப்போர்ட் செய்கிறேன், முதலியார் சமுதாயத்துக்கு வாய்ப்பு தந்தால் நீங்கள் எனக்கு சிபாரிசு செய்யுங்கள் என கஜேந்திரனிடம் உறுதிமொழி தந்துள்ளாராம் பாரி.பாபு. தற்போது இருவரும் கைகோத்துக் கொண்டு ஜோடியாக தலைமைக்கு தங்களது பலத்தைக் காட்டவேண்டும் என்பதற்காகவே பொதுக்கூட்டத்தை பெரியளவில் நடத்தினர்''” என்கிறார்கள்.
கஜேந்திரன், பாபு இருவரின் செயல்பாடு சேவூர் ராமச்சந்திரன், ஜெயசுதா இருவருக்கும் அதிர்ச்சியையும், கலவரத்தையும் உருவாக்கி யுள்ளது. அ.தி.மு.க. மத்திய மாவட்ட அரசியல் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.