கொடநாடு விவகாரம் விஸ்வ ரூபமெடுத்து வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் இயல்பு பற்றி நக்கீரனிடம் விரிவாக எடுத்துரைத்தார் அவருடைய சகோதரர் முறை உறவினர் எடப்பாடி விஸ்வநாதன்.
எடப்பாடியும் நீங்களும் ஒண்ணா வளர்ந்தீர்களா?
எடப்பாடி எனது அம்மாவின் தங்கச்சி மகன். அதாவது சின்னம்மா மகன். சிறு வயசுல பவானி ஸ்கூல்ல படிச்சோம். இரு வரும் பெருந்துறை, சித்தோட்டுல வெல்ல வியாபாரம். பண்ணினோம். 1982, 83 வரை நாங்க ரொம்ப அன்னியோன்யமா இருந்தோம்.
அவரது குணாதிசயம் என்னவாக இருந்தது?
அவர் ஆதாயமில்லாமல் எதையும் செய்யமாட்டார். விரைவில் பணக்காரனாக வேண்டுமென்ற எண்ணம் சிறுவயதிலேயே இருந்தது. எடப்பாடி நிறைய எம்.ஜி.ஆர் படம் பார்ப்பார். சினிமா பார்க்கிறதுக்காக பொறுப்பை என்கிட்ட விட்டுட்டு தங்கவேல்ங்கிறவர்கூட போவார்.
எடப்பாடி வீட்டில் அப்போது ஏதோ தகராறு நடந்ததாக சொல்கிறார்களே?
1978, பிப்ரவரியில எடப்பாடிக்கும் அவரது சித்தப்பா குடும்பத்துக்கும் தகராறு. வண்டிப் பாதை சம்பந்தமா பிரச்சனை. நான் கேள்விப்பட்ட வகையில இருவருக்கும் வாக்குவாதம் நடக்குது. கிருஷ்ணமூர்த்திங் கிறவர் எடப்பாடி அப்பா கருப்பக் கவுண்ட ரை குத்திடறார். அப்பாவைக் குத்திட்டாருங் கிற கோபத்துல எடப்பாடி பதிலுக்கு குத்தினதுல, அவர் சித்தப்பா மகனும் அவரது சகலை கருப்பண்ண கவுண்டரும் இறந்துட றாங்க... கேஸ் ஆயிடிச்சி.
இந்த கொலை வழக்குல இருந்து எடப்பாடி எப்படி தப்பிச்சார்?
அப்ப அ.தி.மு.க. எம்.பி.யா இருந்த பி.கண்ணன் உதவி செஞ்சார். டாக்டர் ஹண்டே சுகாதாரத் துறை மந்திரி, காயம் பட்டவங்களுக்கு நல்ல மருத் துவம் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டார். விவகாரம் பெரிய பிரச்சினையா ஆகாம சேலம் கண்ணன் பார்த்துக்கிட்டார். எடப்பாடி மேல எப்.ஐ.ஆர். போட்டாங்க. நான் ஜாமீன் எடுத்தேன். தொடக்கத்துல என் பேரையும் சேர்த்திருந்ததால ஈரோட்டுல சரண்டரானோம். இன்ஸ்பெக்டர் விசாரிச்சுட்டு சார்ஜ் சீட்லயிருந்து என் பேரை எடுத்துட்டார். சரண்டரான மறுநாளே எனக்கு ஜாமீன் கொடுத்துட்டாங்க. எடப்பாடி பழனிச்சாமி 27 நாள் ஈரோடு கிளைச் சிறையில் இருந்தார். இது 1978-ல நடந்தது.
போக்குவரத்துத் துறை அமைச்சரா இருந்த நெடுங்குளம் முத்துச்சாமி கூப்பிட்டுப் பேசி னார். அவர் ஒருவகையில் எங்கள் உறவினரும்கூட.. தடத்துப் பிரச்சினையைத் தீர்த்து பைசல் பண்ணிவிட்டார். பாதிக்கப்பட்ட வங்க, யார் கொலை செஞ்சதுனு தெரியலைன்னு சாட்சி சொல்லிட்டாங்க. அதனால எடப்பாடி தப்பிச்சுட்டார்.
கனகராஜை கொடநாட் டில் கொள்ளையடிக்க எடப்பாடி ஏவிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ற செயல் இல்லையா?
யார் உதவி செய்றாங் களோ அவரைப் பழிவாங்கிறவர் எடப்பாடி. முதல் உதாரணம் நான், அப்புறம் சேலம் எம்.பி. கண்ணன். செங்கோட்டையன் எடப்பாடிக்கு ஒருகாலத்துல நிறைய உதவி பண்ணார், அவருக்குத் துரோகம் பண்ணார். செல்வகணபதியை கட்சியை விட்டு நீக்க வழிசெய்தார். அடுத்து சசிகலாம்மா. சசிகலா தான் இவருக்கு முதல்வர் பதவி கொடுத்தார். அவருக்கு இவர் என்ன பண்ணினார்? ரெட்டை இலை சின்னம் வழக்கு நடந்த போது தினகரனை ஜெயில்ல போட்டது இவர்தான். துரோகம் பண்ணுறதுல இவரை மிஞ்சி யாரும் இருக்க முடியாது. ஈவு ஈரக்கம் அவர்கிட்ட எதிர்பார்க்க முடியாது. கனகராஜோட விபத்தே திட்டமிட்ட கொலை தான். அதன் பின்னணியில் யார் இருப்பாங்கனு நினைக்கிறீங்க? சர்வீஸ் ரோட்டுல போறவரைப் போய் கார் அடிச்சுக் கொல்லுதுனா திட்டமிடாம கொல்ல முடியாது. திட்டமிட் டுக் கொல்லணும்னா யாருக் காவது ஆதாயம் வேணும் அல்லது யாராவது பாதிக்கப் படணும். அப்படிப்பட்டவங்க தான் இத்தகைய வேலையைச் செய்திருப்பாங்க.
"என்னைப் பழிவாங்க சதி செய்கிறது தி.மு.க.' என ஆர்ப்பரித்த எடப்பாடி, உச்சநீதிமன்றம் வழக்கை விசாரிக்க முகாந்திரம் இருக்கு என்றதும் "என்ன வேணா விசாரிங்க' என வித்தியாசமான முகங்களைக் காட்டுகிறாரே…
காரியம் ஆகணும்னா எப்படி வேண்டுமானாலும் செயல்படுவார். அந்நியோன்ய மாக இருந்து காரியம் சாதிப்பார். முதலமைச்சரா இருக்கும்போது பார்த்திருப்பீங்களே...…
என்னைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க தி.மு.க. சதி செய்யுதுனு எடப்பாடி சொல்கிறார் அதில் உண்மை இருக்குதா…?
தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். அம்மா மரணம், கொடநாடு கொலை விவகாரங்கள் சந்தேகத்துக் குரியவை... ஆட்சிக்கு வந்தால் நாங்க உண்மையை வெளிக் கொண்டுவருவோம்னு.
பக்கத்து மாநிலம் கேரளாவால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியலை. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது எப்படி இருந் துச்சு… இப்ப கொரோனா எப்படி கட்டுப்பாட்டுல இருக்கு. அதுக்கு முதல்வர்தான் காரணம். இவர்மேல் பழி போட்டு அவருக்கென்ன ஆதாயம்?
உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான். சட்டமன்றத்துல யாரும் இவரைக் குற்றவாளின்னு பழி சொல்லலை. ஆனா, அந்த வழக்கில் சம்பந்தம் இருப்ப தால்தான் எடப்பாடி பதறுகிறார். பதட்டப்பட என்ன அவசியம் இருக்கு.… "எங்கப்பன் குதிருக்குள் இல்லை'னு எதுக்குச் சொல்ல ணும். சயான், தினகரன், சசி கலா, பன்னீர் பேரையெல்லாம் சொல்லிருக்கலாம் ஏன் சொல்லலை? நெருப்பில்லாம புகையாது.