ஜெயலலிதாவின் நினைவுநாள் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி வருகிறது. அதற்குள் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணிக்குள் வந்துவிடவேண்டும் என பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப அரசியல் நகர்வுகள் ஒவ்வொன்றாக ஆரம்பித்துள்ளது. அ.தி.மு.க.வில் நிலவும் களச் சூழலும் பா.ஜ.க.வுக்கு சாதகமாக இருப்பதால் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் மைதானத்தில் எகிறிவரும் வேகப்பந்துகளை ஆட முடியாமல் திணறும் விராட்கோலி போல தடுப்பாட்டத்தை எடப்பாடி ஆடி வருகிறார். அதில் அவர் சிக்கி அவுட் ஆவாரா? என்பதுதான் கேள்வியாக எழுந்துள்ளது.

tl

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை விவகாரம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் விசாரிக்கக்கூடாது என எடப்பாடி பழனிச்சாமி ஒரு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். அதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி கேட்டது போல தடை விதித்தது. ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் உட்பட அ.தி.மு.க. உட்கட்சி விவகாரங்களில் தேர்தல் கமிஷன் தலையிட முடியாது. கட்சியில் உறுப்பினராக இல்லாதவரிடம் தேர்தல் கமிஷன் சிவில் கோர்ட் போல விசாரிக்க முடியாது என எடப்பாடி தரப்பு வழக்கு தொடர்ந்தது. தேர்தல் கமிஷ னுக்கு இந்த வழக்குகளை விசாரிக்க எந்த அதிகாரமும் இல்லை என தேர்தல் கமிஷன் நட வடிக்கைகளுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்தத் தடையை எதிர்த்து புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சுப்ரமணியன், அருள் முருகன் ஆகியோர் 12ஆம் தேதி தீர்ப்பளித்தனர். அந்தத் தீர்ப்பில், “"அரசியல் கட்சிகளின் தேர்தல் சின்னங்கள் மற்றும் ஒதுக்கீடு ஆகியவற்றில் இரு பிரிவு உருவாகி அவர்களுக்கு இடையே பிரச்சினை இருந்தால் அதில் எந்தப் பிரிவினர் உண்மையான கட்சி என்பது குறித்து விசாரிக்க தேர்தல் கமிஷனுக்கு உரிமை உண்டு. எனவே அ.தி.மு.க.வில் இரண்டு பிரிவுகள் உள்ளதா என்பது குறித்து ஆரம்பகட்ட விசாரணையை தேர்தல் கமிஷன் மேற்கொள்ளலாம். இரண்டு பிரிவுகள் உள்ளதா என்பது குறித்து திருப்தி அடைந்தால் மட்டுமே மேற்கொண்டு விசாரணை நடத்த முடியும். எனவே, தேர்தல் சின்னங்கள் பதிவு மற்றும் ஒதுக்கீடு விதிகளின்படி தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த முடியும். எனவே தேர்தல் கமிஷன் விசா ரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறோம். தடை கேட்டு எடப் பாடி தாக்கல் செய்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்கிறோம்''” எனத் தீர்ப்பளித்துள்ளார்கள். மீண்டும் ‘தர்மமே வெல்லும்’ என இந்தத் தீர்ப்பு குறித்து ஓ.பி.எஸ். கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

எடப்பாடி தரப்பிலிருந்து கருத்து தெரிவித்த சி.வி.சண்முகம், “"தேர்தல் கமிஷன் என்பது ஒரு குமாஸ்தா வேலை செய்யும் அமைப்பு. ஒரு கட்சியில் உள்ள குறைகளை ஆராய்வதற்கு சிவில் நீதி மன்றங்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆகவே, இந்த மனுக்களை விசாரிப்பதற்கு முன்பாக தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்துவிட்டு முடிவு செய்யுங்கள் என உயர்நீதி மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இது நாங்கள் வைத்த கோரிக்கைதான். அதனை கோர்ட் தெளிவாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் அதிகாரம் இருக் கிறது என்று தேர்தல் கமிஷன் சொன்னால் நாங்கள் தேர்தல் கமிஷனை எதிர்த்து வழக்குப் போடுவோம்''’என்று தெரிவித்திருக்கிறார்.

ssஇந்தத் தீர்ப்பு அரசியல்ரீதியாக பெரிய முக்கியத்துவம் பெறுகிறது. அ.தி.மு.க., பா.ஜ.க. வுடன் கூட்டணி என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என பா.ஜ.க. அழுத்தம் கொடுக்கிறது. இது தொடர்பாக அமித்ஷாவிடம் பேசிய எடப்பாடி மகன் மிதுன், “"நாங்கள் விஜய்யை அ.தி.மு.க. கூட்டணிக்கு கொண்டுவர முயற்சி செய்கிறோம். ஒரு மெகா கூட்டணியை அமைக்க வியூகம் வகுக்கும் எங்களுக்கு, இப்பொழுதே பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பதை அறிவிக்க முடியாது. அப்படி அறிவித்தால் விஜய் கூட் டணிக்கு வர மாட்டார். விஜய்யுடன் பேச்சுவார்த் தை முடிந்த பிறகு பா.ஜ.க.வுடனான கூட்டணியை விஜய்யுடன் சேர்ந்து நாங்கள் இறுதி செய்வோம். அதற்கு மூன்று மாத காலமாவது அவகாசம் வேண்டும்''’என சொல்லி யிருக்கிறார்.

இந்நிலையில் பா.ஜ.க. வுடன் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. அறிவித்து விடக்கூடாது என்பதற்காக இரட்டை இலைச் சின்னம் வழங்கும் விவகாரத்தை தேர்தல் கமிஷனுக்கு நகர்த்தி யிருக்கிறது. நீதி மன்றத்தில் எடப்பாடி தடை கேட் கும்போது தேர்தல் கமிஷன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தடை கொடுக்க தேர்தல் கமிஷனுக்கு ஆட்சேபனை இல்லையென எடப்பாடிக்கு ஆதரவாக வாதிட்டார். இப்போது அதே வழக்கறிஞர் தேர்தல் கமிஷனுக்குத்தான் எல்லா அதிகாரமும் என வாதிட, அதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் எடப்பாடியின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. இப்பொழுது தேர்தல் கமிஷனுடன் பா.ஜ.க. கைகோர்த்திருக்கிறது. இதை முன்கூட்டியே கணித்த எடப்பாடி ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலைப் புறக்கணித்தார். இப்பொழுது பந்து பா.ஜ.க. வசம் சென்றிருக்கிறது இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாட எடப்பாடி முடிவு செய்துள்ளார். அ.தி.மு.க.வில் நிலவும் கடுமையான அதிருப்தி எடப்பாடியை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி உள்ளது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும் என்கிற பீதி பெரிதாக எழுந்துள்ளது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்

Advertisment