"மனைவி என்ற பெயரில் என் வாழ்க்கையில் புகுந்து பாண்டியம்மாள் செய்த காரியத்தால் நான் நிம்மதியிழந்து தவிக்கிறேன்...''’என உடைந்த குரலில் பேசினார் ராஜேஸ்வரன்.

ராஜேஸ்வரன் வாழ்க்கையில் என்ன நடந்தது?

திருச்சுழி தாலுகா- பனையூரைச் சேர்ந்த ராஜேஸ்வரன், தனியார் கல்லூரியில் வேதியியல் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியதோடு, பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பையும் மேற்கொண்ட நிலையில், கடந்த 9-9-2021-ல் பாண்டியம்மாள் என்ற வாசுகி என்பவரைத் திருமணம் செய்து, 28-9-2021-ல் பதிவும் செய்தார்.

Advertisment

pp

மறுநாள் 29-9-2021 அன்று ஜீவஆண்டனி என்பவர், "பாண்டியம்மாள் என் மனைவி. 7 வருடங்களாக அவளைக் காதலித்து 15-2-2021-ல் இந்து முறைப்படி திருமணம் செய்தேன். நீ செய்தது 2-வது திருமணம். நான் பாண்டியம்மாளைக் காதலித்தபோது எடுத்த போட்டோக் கள், திருமணம் செய்தபோது எடுத்த போட்டோக்கள், வீடியோவை உனக்கு வாட்ஸ்- ஆப்பில் அனுப்பியிருக் கிறேன். ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள். உன்னைத் திருமணம் செய்து பதிவு செய்து விட்டு மறுநாளே உன்மீது குற்றம் சொல்லிவிட்டு பாண்டியம்மாளை என் னிடம் வரச்சொன்னேன். அவள் சொல்லித்தான் உனக்கும் உனது உறவினர்கள் 15 பேருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோவை வாட்ஸ்-ஆப்பில் அனுப்பினேன். அவளை உடனடியாக என்னிடம் அனுப்பவேண்டும். இல்லையென்றால், இன்னும் 100 பேருக்கு போட்டோக்களை அனுப்பி வைத்து, உன் மானத்தை வாங்கிவிடுவேன்''’என்று செல்போனில் பேசி மிரட்டியிருக்கிறார்.

இதுகுறித்து 18-10-2021-ல் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும், அதனைத் தொடர்ந்து 23-10-2021-ல் திருச்சுழி காவல் நிலையத்திலும் ராஜேஸ்வரன் புகாரளித்தார்.

நம்மிடம் ராஜேஸ்வரன், "பாண்டியம்மாளும் ஜீவஆன்டனியும் வெவ்வேறு மதத்தவர். அம்மா மகாலட்சுமியிடம் பாண்டியம்மாள், ஜீவஆன்டனியுடன் சேர்ந்து வாழ்ந்து கர்ப்பமுற்றதைக் கூற, பதற்றத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மகாலட்சுமி இறந்துவிடுகிறார். தன்னுடைய காதல் திருமணத்தால் அவமானப்பட்டு தந்தையும் இறந்துவிடுவாரோ என்று பயந்த பாண்டியம்மாள், தன்னுடைய ஜாதியில் இன்னொரு திருமணம் செய்துகொண்டு கவுரவமாக வாழ முடிவெடுத்தார். ஜீவஆன்டனியுடன் தொடர்ந்து வாழவேண்டும், அதேநேரத்தில் தன்னுடைய சமுதாயத்தினரின் பார்வையில், குழந்தையின் இனிஷியலுக்காக வேறொரு கணவனும் வேண்டுமென்பதே பாண்டியம்மாளின் திட்டம். இதற்கு ஜீவஆன்டனி மற்றும் பாண்டியம்மாள் குடும்பத்தினரும் உடந்தை யாக இருந்துள்ளனர்.

Advertisment

ff

இப்படியொரு சதித்திட்டத்தோடு என்னைத் திருமணம் செய்தார் பாண்டியம்மாள். மோசடித் திருமணத்தால் புகாரோ, வழக்கோ வந்தால் நான் பார்த்துக் கொள் கிறேன் என்று பாண்டியம்மாளுக்குத் துணை நின்ற அவளுடைய சித்தப்பா தங்கப்பாண்டி, என்னையும் என் தந்தையையும் மிரட்டினார். பாண்டியம்மாளின் தாய்மாமா ஜெய்சங்கர், நான் ரெங்கையன்பட்டிக்கு பக்கத்தில்தான் இருக்கிறேன். ராஜேஸ்வரனையும் அவன் குடும்பத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று இந்த சதிக்கு உடந்தையாக இருந்திருக்கிறார்.

என்னிடம் பாண்டியம்மாள், ‘"நீ போலீஸுக்குப் போனா உனக்குத்தான் நஷ்டம். அப்புறம் கோர்ட், கேஸுன்னு அலையப்போற. எனக்கு குழந்தை பிறக்கப்போகுது. நான் கர்ப்பமா இருக்கிறதுனால போலீஸ் என்னை எதுவும் பண்ணாது. குழந்தைக்கு யாரு அப்பன்னு கேட்கிறல்ல. ஜீவஆன்டனியா இருக்கலாம், நீயா இருக்கலாம், வேற யாராவது இருக்கலாம். என் கிட்ட நீ வசமா மாட்டிக்கிட்ட. தப்பிக்கவே முடியாது. நான் கேட்கிற ரூ.10 லட்சத்தை தந்திரு. இதுக்கு முன்னால, ஜீவஆன்டனி கிட்ட இருந்தப்ப ஒரு தடவை கர்ப்பத்தைக் கலைச்சதுபோல கலைச்சிடறேன். டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட ணும்னா, அதுக்குத் தனியா ரூ.3 லட்சம் கொடு. இல்லைன்னா, உன்னை கோர்ட்டுக்கு அலையவச்சு ஜீவனாம்சம் வாங்காம விடமாட்டேன்''’இப்படிச் சொல்லிட்டா.

pp

என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட மறு நாளே ஜீவஆன்டனி பாண்டியம்மாகிட்ட, "ஃபர்ஸ்ட் நைட்ல உன்னைத் தொட்டானா? நீங்க ஒண்ணா இருந்தீங் களா'ன்னு கேட்டிருக்கான். இவ மாத்தி மாத்தி சொன்னதும், உடனே என்கிட்ட வான்னு கூப்பிட்டு சேர்ந் திருக்காங்க. நான் பாண்டியம்மாகூட வாழ்ந்தது வெறும் 19 நாள்தான். மனைவிங்கிறதுனால நானும் அவகூட தாம்பத்தியம் வச்சிக்கிட்டேன். திருமணத்துலயும் கர்ப்பத் துலயும் நாடகமாடி, அவ வயித்துல வளர்றது ஜீவஆன்டனி குழந்தையா, என் குழந்தையான்னு தெரியாம என்னைக் குழப்பி, உசிரோடு சாகடிச்சிட்டா. மகன் வாழ்க்கை இப்படி ஆயிருச்சேங்கிற கவலைல என் தந்தை ராமராஜ் இறந்துட்டாரு. என்னோட அம்மா பாண்டீஸ்வரியும் உடம்பு சரியில்லாம படுக்கைல கிடக்காங்க. நானும் என்னோட பிஎச்.டி. படிப்பைத் தொடர முடியல. இப்படியொரு சிக்கல்ல மாட்டிக்கிட்டதுனால காலேஜ் வேலைய விட்டுட்டேன்.

இன்னொரு விஷயம், நோட்டரி ராஜேஸ்வரி அவங்க முன் னால, பாண்டியம்மா பண்ணுன எல்லா தப்பையும் ஒத்துக்கிட்டு, இன்றைய தேதி வரைக்கும் (2-10-2021) என் வயித்துல வாரிசு உருவாகலன்னு சொல்லி, டைவர்ஸுக்கு சம்மதிச்சு, சம்மத சமாதான உறுதிமொழி உடன்படிக்கைல கையெழுத்து போட்டா. ஆனா இப்ப, என்னை ஏமாற்றிக் கையெழுத்து வாங்கிட்டாங்கன்னு கோர்ட்ல சொல்லுவேன். போலீஸ்கிட்ட சொல்லுவேன்னு சொல்லுறா.

இதுல கொடுமை என்னன்னா, பாண்டியம்மாளுக்கு திருமணம் ஆகவில்லை என்பதற்கான (பொய்யான) சான்றிதழை, திருச்சுழி தாசில்தார் 1-9-2021-ல் கொடுத்ததை நம்பி, நான் திருமணத்தைப் பதிவு செய்ததுதான். ஒருவிதத்துல அரசாங்கமும் என் வாழ்க்கைல விளையாடிருச்சு.

முதல் திருமணத்தையும் அந்தப் பழைய காதல் விவகாரத்தையும் மறந்து, மன்னித்து அவளை ஏற்றுக்கொள்ள நினைத்தாலும், முதல் கணவனை மறக்காமல், அவனுக்கு விசுவாசமா வாழணும்கிறதுல அவ உறுதியா இருந்ததுனால, கோர்ட் வரைக்கும் போகவேண்டியதாயிருச்சு''” என்று நொந்துகொண்டார்.

பாண்டியம் மாளின் சித்தப் பா முறையுள்ள தங்கப்பாண் டியைத் தொடர்புகொண் டோம். “"பாண்டியம்மா வீட்டுல எல்லாத்தயும் என்கிட்ட சொல் லிட்டு செஞ்சிருக்கணும். அவளுக்கு ஏற்கனவே திரு மணமான விஷயம் சத்தியமா எனக்குத் தெரியாது. இத னால, நானும் மனசு ஒடிஞ்சு போயிருக்கேன்''’என்றார்.

ராஜேஸ்வரன் குமுற லோடு, "காவல் துறையினர் சட்டத்தின் பாதுகாவலர்கள். மக்கள் அளிக்கும் புகார்களில் செயல்படக் கடமைப்பட்டவர்கள். விருதுநகர் எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர், திருச்சுழி டி.எஸ்.பி., இன்ஸ் பெக்டர், எஸ்.ஐ. என பலரிடமும் மனு கொடுத்தேன். தென் மண்டல ஐ.ஜி. அஷ்ரா கார்க்கிடம் நேரில் முறையிட்டேன். டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு அஞ்சலில் புகாரளித்தேன். என்னிடம் திருச்சுழி காவல்நிலைய போலீசார் ‘"இப்பத் தான் யாரும் யாருடனும் தொடர்பு வச்சிக்கலாம்னு சட்டமே வந்திருச்சு. நீ எங்ககிட்ட நியாயம் கேட்க வந்துட்ட...'’என்று அவமானப்படுத்தினார்கள். புகார் கொடுத்து ஏழு மாதங்களாகியும் மோசடி மற்றும் மிரட்டல் பேர்வழிகள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை''” எனக் கூறிய குற்றச் சாட்டை திருச்சுழி டி.எஸ்.பி. மதியழகன் முன்வைத்தோம்.

"ராஜேஸ்வரனின் புகார் குடும்ப உறவுகள் சம்பந்தப்பட்டது. திருச்சுழி மேஜிஸ்ட்ரேட்டிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். மேஜிஸ்ட்ரேட் பெர்மிஷன் கிடைத்த பிறகுதான், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும்''’என்றார். ராஜேஸ்வரனோ, "ஆதாரங் களோடு புகாரளித்தேன். முதல் திருமணத்தை மறைத்து திருமணம் செய்தது, கணவன் உயிருடன் இருக்கும்போதே அதை மறைத்து இன்னொரு திருமணம் செய்தது, ஜீவஆன்டனி குடும்பத்தினரும் பாண்டியம்மாள் குடும்பத்தின ரும் கூட்டுச்சதியில் ஈடுபட்டு மோசடி செய்தது, போலிச் சான்றிதழ் ஏற்பாடு செய்தது, மிரட்டியது என 6 பிரிவு களில் வழக்குப் பதிவுசெய்து கைது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், மேஜிஸ்ட்ரேட் அனுமதி பெறவேண்டும் என்று காவல்துறை இழுத்தடிக்கிறது. இப்ப எனக்கும் எங்க குடும் பத்துக்கும் பாதுகாப்பில்லை''’ என வேதனைப்பட்டார்.

கோயம்புத்தூரில் சித்தி முத்துலட்சுமியின் பாது காப்பில் பாண்டியம்மாள் இருப்பதை அறிந்து தொடர் புகொண்டோம். நம்மிடம் முத்துலட்சுமி, "யாரும் பண்ணாத தப்பையா பாண்டி யம்மா பண்ணிட்டா. எங் களுக்கு மொதல்லயே இது தெரியாம போச்சே''’என்று கூற, அதே லைனில் வந்த பாண்டியம்மாள், "இப்ப எனக்கு 9 மாச கர்ப்பம். அடுத்த மாசம் பிரசவம். இது யாரு குழந்தைங்கிறது டி.என்.ஏ. டெஸ்ட்ல தெரிஞ்சிரும். ராஜேஸ்வரன் கருவைக் கலைக்க ணும்னு என்னை மிரட்டினாரு. அவருகூட சேர்ந்து வாழணும்னு நினைக்கிறேன். அதனால, அவரு மிரட்டுனத எங்கேயும் சொல்லல. ஜீவ ஆன்டனி என்கூட படிச்சான். நான் அவனைக் காதலிக்கவும் இல்ல. கல்யாணமும் பண் ணிக்கல. ஜீவஆன்டனிகூட மாலையும் கழுத்துமா இருக் கிற போட்டோவும், வீடியோவும் மார்பிங். என் மேல எந்தத் தவறும் இல்ல''” என்று ஒரே போடாய்ப் போட்டபோது... "அந்த வீடியோவுமா மார்பிங்..?''’ என்று நாம் இடை மறிக்க... "இப்ப அதுக்கு என்ன பண்ணனும்கிறீங்க? எல்லாத்தயும் நான் கோர்ட்ல பார்த்துக்கிறேன்''’என்று லைனை துண்டித்தார்.

திருச்சுழி காவல்துறை துணை கண்காணிப்பாள ரிடம் ஜீவஆன்டனி எழுத்துமூலமாக அளித்துள்ள வாக்கு மூலத்தில், "நான்தான் பாண்டியம்மாளை முதலில் திரு மணம் செய்தேன். கும்பகோணம் அருகிலுள்ள திருமங்கலக்குடியில் தனிக்குடித்தனம் நடத்தினோம். திரு மண போட்டோக்களையும் வீடியோவையும் ராஜேஸ் வரனுக்கு அனுப்பி வைத்தேன்''’என்று ஒப்புக் கொண்ட நிலையில்... ’"போட்டோ, வீடியோ எல் லாமே மார்பிங் முறையில் சித்தரித்தது'’என பாண்டியம்மாள் கூறுவது, எந்தவிதத் திலும் பொருந்தாததாக உள்ளது.