Advertisment

இணை ஆணையர் பாலியல் புகாரில் திருப்பம்! -உண்மை பின்னணி!

ss

சென்னை போக்குவரத்து வடக்கு மண்டல இணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தவர் மகேஷ்குமார். இவர்மீது தமிழக டி.ஜி.பி.யிடம் அதே துறையில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர், தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்துவருவதாக புகாரொன் றைக் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக மகேஷ் குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

Advertisment

ass

டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமை யில் விசாகா கமிட்டி அமைத்து விசா ரணை நடத்தினர். பெண் காவலர் கொடுத்த புகார் உண்மையா? இல்லை மகேஷ்குமார் மனைவி சொல்லும் தகவல் உண்மையா? எனும் கோணத்தில் விசா ரணையைத் தொடங்கியுள்ளனர். விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாகச் சொல்லப் படுகிறது. அவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில் இருவரின் கால் லிஸ்டையும் எடுத்துள்ளனர். இதில் மகேஷ்குமார் பெண் காவலரிடம் பேசியதைவிட பெண் காவலர் மகேஷ் குமாரிடம் பேசியதே அதிகமாக இருந்துள்ள தாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல, பெண் காவலரின் செல்போனி லிர

அதேபோல, பெண் காவலரின் செல்போனி லிருந்து மேலும் இரு செல்போன் எண்களுக்கும் அதிகமாக அழைப்புகள் சென்றுள்ளதாகவும் சொல் லப்படுகிறது. அதில் ஒன்று பெண் காவலரின் தங்கையின் கணவருடையது, மற்றொன்று பெண் காவலர் பணிபுரியும் இடத்தின் ரைட்டர் செல்போன் எனத் தெரியவந்திருக்கிறதாம்.

போக்குவரத்து இணை ஆணையர் மகேஷ்குமார் மீது புகார் கொடுத்த பெண் காவலர், அதே துறையில் போக்குவரத்து திட்டமிடல் பிரிவில் பணிபுரிந்து வந் துள்ளார். அவர் 2013-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள் ளார். அவரது கணவர் குடிப் பழக்கத்திற்கு அடிமையான வராம். இதனால் அடிக்கடி தனது தங்கையின் ஊருக்குச் சென்று விடுமுறை நாட் களில் தங்குவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த சூழ்நிலையில் பெண் காவலர் தனது தங்கை கணவரோடு தொடர்பில் இருந்துள்ளதாக வும் சொல்லப்படுகிறது. பிறகு 2013 பேட்ஜில் பணியில் சேர்ந்து ஏ.ஆர். போலீசாக பணிபுரியும்போது... மனோ என்பவ ருடன் பழக்கம் ஏற்பட்டு சைதா பேட்டையிலுள்ள மனோ வீட்டில் இருவரும் 2 வரு டம் வாழ்ந்து வந்ததாகவும் சொல்லப்படு கிறது. அதன்பிறகு தாம்பரத்தில் பணியில் சேர்ந்து பணிபுரிந்துவந்த நிலையில் தங்கை கணவரோடும், மனோவோடும் பழக்கத்தைத் தொடர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் இருவரோடும் மோதலாகி, தனியாக சேலையூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் சென்னை போக்கு வரத்துத் துறையில் பணியில் சேர்ந்துள்ளார். அங்கு சில பிரச்சினையால் ட்ராபிக் பிளானிங் டிபார்ட்மெண்டுக்கு மாற்றியுள்ளனர். இந்த காலகட்டத்தில்தான் பெண் காவலர் தங்களின் குடும்பச் சூழ்நிலையை அவ்வப்போது போக்கு வரத்து வடக்கு மண்டல இணை ஆணையர் மகேஷ்குமாரிடம் தெரிவிக்க, அவர் சில உதவி களையும் அவ்வப்போது செய்துவந்துள்ளதாக சொல்லப்படுகிறது. காலப்போக்கில் இருவரும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு உண்டாகியுள்ளது. இதில் பெண் காவலருக்கு சகல வசதிகளும் கிடைத்துவந்துள்ளது. இந்த சூழ்நிலையில் பெண் காவலருக்கு நெருக்கமான நண்பர் மனோ அதே துறையின் ரைட்டராகப் பணிபுரியவே, மீண்டும் இவர்களுக்குள்ளே பழைய நட்பு துளிர்த்துள்ளது. அது பெண் காவலரின் தங்கை கணவருக்குத் தெரிந்தவுடன் அவர் மீண்டும் பிரச்சினையை கிளப்பியுள்ளார்.

ac

Advertisment

மறுபுறம் மகேஷ்குமார் மூலமாகத்தான் 2023-ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத் தூர் வட்டம் காவனூர் கிராமத்தில் வாங்கிய இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்கான பணியை கையிலெடுத்து செயல்படத் தொடங்கியுள்ளார் பெண் காவலர். அதற்கு லோன் போடுவதில் தொடங்கி, வீடு பிளான் அனுமதி பெறுவதுவரை அனைத்துச் செலவும் மகேஷ்குமார் மூலமாக முடித்துள்ளார். திட்டமிட்டபடி வீடு கட்டி முடிக்க 45 லட்சம் தேவைப்பட, அதில் லோன் 11 லட்சம் போக, மீதம் 34 லட்சம் தேவைப்பட்ட தால் அதனை மகேஷ்குமாரிடம் கேட்கத் திட்ட மிட்டு, அவரோடு பிப்ரவரி மாதம் தொடங்கி ஈ.சி.ஆர்., தி.நகர், தாம்பரம் ரிசார்ட் என சுற்றியுள்ளார்.

இப்படி தொடர்ச்சியாக இணைந்து பயணித்தபோது, பெண் காவலருக்கு வேறு ஒரு கால் அடிக்கடி வர, மகேஷ்குமார் கால்லிஸ்ட் பார்த்ததில் மனோ, மற்றுமொருவரிடம் நீண்ட நேரம் பேசியதை கேள்வி கேட்டுள்ளார். அது பெரிதாக வெடித்து முற்றியுள்ளது. அதில் ஏற் பட்ட பிரச்சினையே இந்த பாலியல் புகா ருக்கு வித்திட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதுகுறித்து மகேஷ்குமார் மனைவி, "“புகாரில் என்ன இருக்கிறது என்றுகூட தெரியாது. இதைப்பற்றி எந்த விசாரணையும் செய்யாமலே எப்படி சஸ்பெண்ட் செய்ய முடியும்? தவறான நடவடிக்கை எடுத்துவிட் டால், நாளை மற்ற அதிகாரிகளுக்கும் இதே நிலைதானே! ஒரு பொய்யான புகாரில் நட வடிக்கை எடுப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? பணம் கேட்டு கொடுக் காத ஒரு காரணம்தான் இதில் அடிப்படை யானது''” என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பல கேள்விகளை எழுப்பினார்.

விசாகா கமிட்டி தலைவர் டி.ஜி.பி. சீமா அகர்வாலிடம் கேட்டபோது, "விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. தற்போது எந்தத் தகவலும் சொல்ல முடியாது. விசாரணை முடிவில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்''’என்றார்.

-சே

படங்கள் : ஸ்டாலின்

nkn190225
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe