திருச்சியை எப்போதுமே திருப்பு முனை மாவட்டமாக புகழ்ந்துதள்ளும் அரசியல் கட்சிகள், தங்களுடைய கட்சி ரீதியான எந்த ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தாலும், இங்கி ருந்து ஆரம்பிப்பதை வழக்கமாகக் கொண் டுள்ளன. இதனால் தன்னுடைய முதல் மாநாட்டை நடிகர் விஜய் திருச்சியில் நடத்தத் திட்டமிட்டள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியினைத் தொடங்கி யுள்ள நடிகர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்கவும், தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தை பலப்படுத்தவும், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். கட்சியின் சார்பில் மாநில மாநாட்டையும், மண்டல மாநாடுகளையும் இந்த ஆண்டு நடத்தத் திட்டமிட்டுள்ளதால், த.வெ.க.வின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்டம்வாரியாக மாநாடு நடத்துவதற்காக திருச்சி, சேலம், மதுரை உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்துவருகிறார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடத்தவேண்டும் என தொண்டர்களிடமிருந்து கோரிக்கை வலுவாக எழுந்துள்ளதால் திருச்சியிலேயே மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் மாநாட்டை நடத்துவதற்காக ரயில்வே கோட்ட மேலாளரிடம் அனுமதிகேட்டு மனு அளித்துள்ளனர்.
மேலும் செப் டம்பர் மாதம் 10-ஆம் தேதிக்கு மேல் 30-ஆம் தேதிக்குள் ஒரு நாளை வழங்கிட வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், த.வெ.க. சார்பில் இதுவரை தேதி சரி யாகக் குறிப்பிடப்ப டாமல் உள்ளது. அதனால் தேதி குறிப்பிட்டு மீண்டும் கடிதம் வழங்குமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மாநாட்டுக்கு ரயில்வேயிடமிருந்து அனுமதிகொடுப்பதற்கு தயக்கம் காட்டப்பட்ட நிலையில், தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் பா.ஜ.க. தலைமை மூலம் அனுமதி வாங்கித் தந்துள்ளார். ஜி கார்னர் மைதானம் 8 ஏக்கர் மட்டுமே இருப்பதால் அளவுக்கு அதிகமான கூட்டம் வந்தால் அதைக் கட்டுப்படுத்துவது சிரமம், பார்க்கிங் பிரச்சனைகளும் வரலாம். எனவே இந்த இடம் மாநாடு நடத்த ஏதுவாக இருக்குமா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது ரயில்வே நிர்வாகம்.
இருப்பினும் மாநில கட்சிகள், காங்கிரஸ், பா.ஜ.க., போன்ற கட்சிகள் இந்த மைதானத்தில் தங்களுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியதால், விஜய்யும் சென்டிமெண்டாக தன்னுடைய அரசியலை திருச்சி ஜி கார்னரில் இருந்துதான் தொடங்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இந்த மாநாடு எந்த அளவிற்கு வெற்றிகரமாக அமையப்போகிறது என்பதை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.