த.வெ.க. போராட்டம்! சாதித்தாரா விஜய்?

tvk

 

தி.மு.க. அரசுக்கு எதிராக த.வெ.க.வின் முதல் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னையில் நடத்தி முடித்திருக்கிறார் நடிகர் விஜய். ஆனால், முதல் ஆர்ப்பாட்டமே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்கிற அதிருப்திகள் த.வெ.க.வினரிடமே எதிரொலிக்கிறது. இந்த நிலையில், தி.மு.க. பாணியில் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகியிருக்கிறார் விஜய். 

தமிழக காவல்துறையினரால் திருப்புவனம் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை 13-ந்தேதி சென்னை சிவானந்தா சாலையில் முன்னெடுத்தது த.வெ.க.! இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது காவல்துறை. மேடை, தடுப்புகள், மைக் செட்டுகள் என ஆர்ப்பாட்டத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் கவனித்திருந்தார். ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு துவங்குவதாக சொல்லப்பட்டிருந்தாலும் 8 மணிக்கெல்லாம் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். நேரம் ஆக ஆக, தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 

அஜித்குமார் படுகொலையை மட்டும் உயர்த்திப் பிடிக்காமல் தி.மு.க. ஆட்சியில் நடந்த லாக்அப் மரணங்களுக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டமாக கடைசி நேரத்தில் மாற்றியிருந்தார் விஜய். இதற்காக, போலீசாரின் சித்ரவதையில் படுகொலையான 24 நபர்களின் குடும்பத்தினர் முதல்நாளே சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பாக அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர்களை மேடையேற்றினார் புஸ்ஸி ஆனந்த். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்க கறுப்புச் சட்டை அணிந்து மேடையேறிய விஜய்,  "ஸாரி வேண்டாம்; நீதி வே

 

தி.மு.க. அரசுக்கு எதிராக த.வெ.க.வின் முதல் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னையில் நடத்தி முடித்திருக்கிறார் நடிகர் விஜய். ஆனால், முதல் ஆர்ப்பாட்டமே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்கிற அதிருப்திகள் த.வெ.க.வினரிடமே எதிரொலிக்கிறது. இந்த நிலையில், தி.மு.க. பாணியில் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகியிருக்கிறார் விஜய். 

தமிழக காவல்துறையினரால் திருப்புவனம் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை 13-ந்தேதி சென்னை சிவானந்தா சாலையில் முன்னெடுத்தது த.வெ.க.! இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்திருந்தது காவல்துறை. மேடை, தடுப்புகள், மைக் செட்டுகள் என ஆர்ப்பாட்டத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் கவனித்திருந்தார். ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு துவங்குவதாக சொல்லப்பட்டிருந்தாலும் 8 மணிக்கெல்லாம் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். நேரம் ஆக ஆக, தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 

அஜித்குமார் படுகொலையை மட்டும் உயர்த்திப் பிடிக்காமல் தி.மு.க. ஆட்சியில் நடந்த லாக்அப் மரணங்களுக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டமாக கடைசி நேரத்தில் மாற்றியிருந்தார் விஜய். இதற்காக, போலீசாரின் சித்ரவதையில் படுகொலையான 24 நபர்களின் குடும்பத்தினர் முதல்நாளே சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பாக அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர்களை மேடையேற்றினார் புஸ்ஸி ஆனந்த். ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்க கறுப்புச் சட்டை அணிந்து மேடையேறிய விஜய்,  "ஸாரி வேண்டாம்; நீதி வேண்டும்' என்கிற பதாகையை ஏந்தியிருந்தார். அதே போல மேடையில் இருந்த த.வெ.க.வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கைகளி லும் தி.மு.க. அரசுக்கு எதிராக அச்சிடப்பட்ட பதாகைகள் இருந்தன. ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்படும் முழக்கங்களுக்கேற்ப மட்டுமே பதாகைகளின் வாசகங்கள் இருக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்டாக விஜய் சொல்லியிருந்ததால், அதனையொட்டியே பதாகையின் வாசகங்கள் இருந்தன. 

"ஸாரி வேண்டாம்; நீதி வேண்டும்,     உயிரின் மதிப்புத் தெரியுமா? மன்னராட்சிக்கு புரியுமா? எஸ்.ஐ.டி. இருக்க? சி.பி.ஐ. எதற்கு? நீதி வேண்டும், நீதி வேண்டும் அஜித்குமாருக்கு நீதி வேண்டும், போதாது போதாது பொய் மன்னிப்பு போதாது, வேண்டும் வேண்டும் அனைவருக்கும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் வெள்ளையறிக்கை வேண்டும்' போன்ற முழக்கங்களை புஸ்ஸி ஆனந்த் குரல் எழுப்ப, அதனை தொண்டர்கள் எதிரொலித் தனர். 

ஆனால், புஸ்ஸி ஆனந்திடமும் சரி, தொண்டர்களிடமும் சரி முழக்கங்களில் ஆக்ரோஷம் தெரியவில்லை. அதேசமயம், முழக்கங்கள் எழுப்பப்பட்டபோது அதனை விஜய் எதிரொலிக்கவில்லை, அமைதியாக கூட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தார். 

கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல் ஆளாக பேசிய கட்சியின் உதவி பொதுச் செயலாளர் நிர்மல்குமார், "கடந்த நான்கரை ஆண்டுகளில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஸ்டாலின் நாடகம் ஆடினார். இப்போது அதே நாடகத்தை வேறு வகையில் ஆடிக்கொண்டிருக்கிறார். எந்த ஆட்சியிலும் நடக்காத அளவுக்கு தி.மு.க. ஆட்சியில் லாக்அப் மரணங்கள் நடந்துள்ளன''’என்றார் ஆவேசமாக. 

இதனையடுத்து மைக் பிடித்த தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ”"கடந்த ஆட்சியில் ஜெயராஜ் படுகொலை செய்யப்பட்டபோது அதனை அன்றைய அரசு சி.பி.ஐ.க்கு மாற்றியது. இதனை கண்டித்து போராட்டம் நடத்திய நீங்கள் (ஸ்டாலின்), சி.பி.ஐ.க்கு ஏன் மாத்தினீங்க? தமிழக காவல் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் (எடப்பாடி ) பதவி விலகணும்னு சொன்னீங்க. அந்த போராட்ட குணம் இப்போ எங்கே போனது? உங்க ஆட்சியில் போலீசாரால் கொல்லப் பட்டவர்களை அக்யூஸ்ட்டாக புனைந்து பொய்க் கதைகளை சித்தரித்தீர்கள். இதனால் அந்த குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறி யாகிக் கிடக்கிறது. 31 அரசு கொலைகள் நடந்திருக்கிறது. காவல்துறைக்கு அமைச்சரான நீங்கள் இதற்கு பதில் சொல்லவேண்டும்''’என்று ஆவேசப்பட்டார். 

tvk1

இறுதியில் பேசிய விஜய், "அஜித் குமார் குடும்பத்திடம் ஸாரி சொல்லியிருக் கீங்க, தப்பில்ல. உங்கள் ஆட்சியில் போலீஸ் விசா ரணையில் 24 பேர் இறந்துபோயி ருக்காங்க. அந்த 24 குடும்பங் களுக்கும் ஸாரி சொன்னீங் களா? தயவு செய்து சொல்லிடுங்க சி.எம்.சார்.  அஜித்குமார் குடும்பத்துக்கு நிவாரணம் கொடுத்த மாதிரி, இந்த 24 குடும்பங்களுக்கும் கொடுத்தீங்களா? சாத்தான் குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாத்தினப்போ, இது தமிழ்நாட்டு போலீசுக்கு அவமானம்னு சொன்னீங்க. இன்னைக்கு நீங்க உத்தரவிட்டதுக்கு பேர் என்ன சார்? ஆர்.எஸ்.எஸ்., பாஜக,வின் கைப்பாவையாக இருக்கும் சி.பி.ஐ.யிடம் போய் ஏன் ஒளிஞ்சிக்கிறீங்க? 

ஏன்னா, லாக்அப் மரணங்கள் குறித்து நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு விசாரணை வேண்டும்னு த.வெ.க. சார்பில் கேட்டிருக்கிறோம். அந்த பயத்துலதான் ஒன்றியத்தின் பின்னால் ஒளிஞ்சிக்கிட்டீங்க! இன்னும் உங்க ஆட்சியில் எத்தனை அட்ராசிட்டிஸ்! அண்ணா யுனிவர்சிட்டி தொடங்கி அஜித்குமார் படுகொலை வரைக்கும் நீதிமன்றம் தலையிட்டு உங்களை கேள்வி கேட்டுக்கிட்டிருக்கு. நீதிமன்றம் கேள்வி கேட்கணும்னா… நீங்க எதுக்குங்க சார்? உங்க ஆட்சி எதுக்குங்க சார் ? உங்க சி.எம். பதவி எதுக்குங்க சார்? எப்படி கேள்வி கேட்டாலும் உங்ககிட்டேயிருந்து பதில் வராது... இருந்தாதானே வரும்? அப்படியே வந்தாலும், ஸாரிம்மா… அவ்வளவுதான்! இந்த வெற்று விளம்பர மாடல் சர்க்கார், ஸாரிம்மா மாடல் சர்க்காராக மாறிடுச்சு. உங்க ஆட்சி போறதுக்குள்ள நீங்க செஞ்ச தப்புக்கு பரிகாரமா சட்டம் ஒழுங்கை சரி செய்தே ஆகணும். இல்லைன்னா, மக்களோடு இணைஞ்சி சரி செய்ய வைப்போம்''” என்று ஆவேசப்பட்டார். 

விஜய்யின் பேச்சு அதிகபட்சம் 3 நிமிடத்தில் முடிந்து விட்டது. அதே சமயம், தி.மு.க. ஆட்சியில் 31 லாக்அப் டெத் நடந்திருப்பதாக ஆதவ் அர்ஜுனா சொல்கிறார்; ஆனால், 24 என்று விஜய் சொல்கிறார். அப்படி யானால் எது உண்மை என்கிற குழப்பம் விஜய்க்கு மட்டுமல்ல; ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொண்டர்களுக்கும் இருந்தது. இது மட்டுமல்ல, ஸாரி வேண்டாம்; நீதி வேண்டும் எனும் பதாகையை உயர்த்திப் பிடித்திருந்த விஜய், அந்த 24 குடும்பங்களுக்கும் ஸாரி சொல்லிடுங்க'' என பேசியது தொண்டர் களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பலரிடமும் நாம் பேச்சுக்கொடுத்த போது,”தி.மு.க. அரசுக்கு எதிராக தலைவர் தலைமையில் நடக்கும் முதல் ஆர்ப்பாட்டம் மிக வலிமையாக இருக்கும்னு எதிர்பார்த்தோம். குறைந்தபட்சம் 2 லட்சம் பேர் திரண்டுநின்று சென்னையை ஸ்தம்பிக்க வைப்பதன் மூலம் விஜய்யின் வலிமையை தி.மு.க. அரசுக்கு உணர்த்துவார்கள் என நினைத்தோம். ஆனால், அந்தளவுக்கு வலிமையில்லை. இத்தனைக்கு சென்னையில் மட்டுமே 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்திருப்பதாக புஸ்ஸி ஆனந்த் ஒரு புள்ளிவிபரத்தை ஏற்கனவே சொல்லியிருந்தார். அதில் பாதி பேராவது வந்திருக்க வேண்டாமா? மேலும், முதல் ஆர்ப்பாட்டம் என்பதால், 1 மணி நேரம் விஜய் பேசுவார் என எதிர்பார்த்தோம். ஆனா, வெறும் 3 நிமிசத்தில் பேச்சை முடித்துக்கொண்டார். அதனால், ஆர்ப்பாட்டம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, பிசுபிசுத்துவிட்டது''’என்று ஆதங்கத்துடன் அதிருப்தியை வெளிப் படுத்தினர். 

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அடுத்தகட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கையில் கவனம் செலுத்தவிருக்கிறார் விஜய். அதாவது, "ஓரணியில் தமிழ்நாடு, ஒன்றிணைவோம் வா!' எனும் திட்டத்தின் மூலம் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க செயலாற்றி வருகிறது தி.மு.க. அதே பாணியில், த.வெ.க.வுக்கான செயலி (ஆப்) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனை விஜய் வெளியிடவிருக்கிறார். இதனையடுத்து அந்த செயலியை த.வெ.க.வின் பூத் ஏஜெண்டுகளிடம் கொடுத்து அதன்மூலம் 2 கோடி உறுப்பினர்களை பதிவுசெய்யும் அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகியிருக்கிறார் விஜய். 


அட்டை மற்றும் படங்கள் : ஸ்டாலின்

nkn160725
இதையும் படியுங்கள்
Subscribe