Advertisment

தூத்துக்குடி! தெரிந்தே சுட்டுக்கொன்ற எடப்பாடி!

ss

டந்த 2018-ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மே-22, 23 ஆகிய தினங்களில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், உண்மைத் தன்மையை அறிய நீதியரசர் அருணா ஜெகதீசனின் தலைமையில்கீழ் ஒருநபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. கடந்த மூன்றரை ஆண்டு விசாரணைக்குப் பின், விசாரணை அறிக்கையானது 2022, அக்டோபர் 18 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட, இவ்வறிக்கை அரசியல் வட்டாரத்தில் பல எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.

Advertisment

tuty

மண்ணையும், காற்றையும் மாசுபடுத்திய ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் தொடக்கத்திலிருந்தே மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாக "நக்கீரன்' மக்களுடனேயே நின்றது. "எதனால் சுட்டார்கள்? யார், யார் சுட்டது..?' என அவ்வப்போது விலாவாரியாக பிரத்யேகச் செய்திகளை வெளியிட்டிருந்தோம். நீதியரசர் அருணா ஜெகதீசனின் வேண்டு கோள்படி நக்கீரன் சேகரித்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்களை ஆணையத்தின் முன் வைத்திருந்தோம். அது ஆணையத் திற்கு பெருமளவில் உறு துணையாக இருந்தது அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள

டந்த 2018-ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியவர்கள் மே-22, 23 ஆகிய தினங்களில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், உண்மைத் தன்மையை அறிய நீதியரசர் அருணா ஜெகதீசனின் தலைமையில்கீழ் ஒருநபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. கடந்த மூன்றரை ஆண்டு விசாரணைக்குப் பின், விசாரணை அறிக்கையானது 2022, அக்டோபர் 18 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட, இவ்வறிக்கை அரசியல் வட்டாரத்தில் பல எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.

Advertisment

tuty

மண்ணையும், காற்றையும் மாசுபடுத்திய ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் தொடக்கத்திலிருந்தே மக்களின் உணர்வுகளுக்கு ஆதரவாக "நக்கீரன்' மக்களுடனேயே நின்றது. "எதனால் சுட்டார்கள்? யார், யார் சுட்டது..?' என அவ்வப்போது விலாவாரியாக பிரத்யேகச் செய்திகளை வெளியிட்டிருந்தோம். நீதியரசர் அருணா ஜெகதீசனின் வேண்டு கோள்படி நக்கீரன் சேகரித்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்களை ஆணையத்தின் முன் வைத்திருந்தோம். அது ஆணையத் திற்கு பெருமளவில் உறு துணையாக இருந்தது அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது. அத்துடன் ஆணை யம் சம்மன் அனுப்பி அழைத்தபோது, நக்கீரன் நிருபர் நாகேந்திரன், அருணா ஜெகதீசனின் கமிஷ னில் ஆஜராகி சாட்சியமும் அளித்தார்.

இவ்வேளையில், சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட விசாரணை அறிக்கையில், "கபில்குமார் சரத்கர் உத்தரவின் பேரில் ராஜா என்பவர் கார்த்திக் கையும், கபில்குமார் சரத்கர் மற்றும் திருமலை உத்தரவின் பேரில் சங்கர் அல்லது எஸ்.ஐ. ரென்னீஸ் ஆகியோரில் ஒருவர் தமிழரசனையும், மேற்கண்ட அதே டீமால் கந்தையாவும், சைலேஷ்குமார் யாதவ் மற்றும் கபில்குமார் சரத்கர் உத்தரவின் பேரில் சொர்ண மணி அல்லது சுடலைக்கண்ணு ஆகிய இருவரில் ஒருவர் ரஞ்சித்குமாரையும், லிங்க திருமாறன், கபில்குமார் சரத்கர் உத்தரவின் பேரில் தாண்டவ மூர்த்தி அல்லது சுடலைக்கண்ணு ஆகிய போலீஸார் இரக்கமேயில்லாமல் தலையில் குறிவைத்து ஸ்னோலினையும், மணிராஜையும், சைலேஷ்குமார் யாதவ், கபில்குமார் சரத்கர் உத்தரவின் பேரில் சுடலைக்கண்ணு அல்லது சதீஷ்குமார் உள்ளிட்ட போலீஸார் கிளாஸ்டன், ஜெயராமன் மற்றும் சண்முகத்தையும், எஸ்.பி. மகேந்திரன் உத்தரவின் பேரில் போலீஸ் சுடலைக்கண்ணு அந்தோணி செல்வராஜ் மற்றும் ஜான்சிராணியையும், அதே எஸ்.பி. மகேந்திரன் உத்தரவின் பேரில் காளியப்பனையும் சுட்டுக்கொன் றது எடப்பாடி பழனிச்சாமியின் அன்றைய காவல்துறை. அத்தோடு இல்லாமல் எஸ்.பி. மகேந்திரன் உத்தரவின் பேரில் காவலர் மதிவாணன் செல்வசேகரை தடியால் பலமாக தாக்கிக்கொன்றதும் குறிப்பிடத்தக்கது. "இவர்களே துப்பாக்கிச்சூடு மற்றும் கொடூர தாக்குதல் நடத்தி படுகொலைகளுக்கு வித்திட்டவர்கள்'' என்கின்றது அந்த அறிக்கை.

நடந்த கலவரங்களுக்குக் காரணமாக காவல்துறையின் தற்போதைய காவலர் நலத்துறை யின் ஏ.டி.ஜி.பி. சைலேஷ்குமார் யாதவ், சென்னை நகர உதவி ஆணையரான டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், சென்னை துணை ஆணையராகவுள்ள எஸ்.பி. மகேந்திரன், ஏ.டி.எஸ்.பி. லிங்கதிருமாறன், இன்ஸ்பெக்டர்கள் ஹரிகரன், பார்த்தீபன், திருமலை, எஸ்.ஐ.க்கள் ரென்னீஸ், சொர்ணமணி மற்றும் போலீஸார் சுடலைக்கண்ணு, ராஜா, சங்கர், டி.ஐ.ஜி.யின் காவலர் தாண்டவமூர்த்தி, சதீஷ்குமார், ஏ.ராஜா (மஞ்சள் கலர் டீசர்ட்), கண்ணன், மதி வாணன் (அண்ணா நகரில் சுட்டவர்) உள்ளிட்ட 17 நபர்களும், வருவாய்த்துறை தரப்பில் துணை தாசில்தாராகப் பணியாற்றிய சேகர், ஆயத் துறை மண்டல அலுவலராகப் பணியாற்றிய கண்ணன், மண்டல துணை தாசில்தாராகப் பணியாற்றிய சந்திரன் ஆகியோரும் அன்றைய மாவட்ட ஆட்சியருமான வெங்க டேஷுமே குற்றவாளிகள்.

Advertisment

dd

கூடுதலாக, கலவரங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் மக்களின் போராட்டங்கள் குறித்து அன்றைய முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமிக்கு உளவுத்துறை மூலமாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. காவல்துறை ஏற்படுத்திய கலவரத்தின் அத்தனை விவரங்களும் நிமிடத்திற்கொரு முறை தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. தொடங்கி அன்றைய முதல்வர் வரைக்கும் கூறப்பட்டிருக்கின்றது. "டி.வி.யை பார்த்துதான் கலவரத்தை தெரிந்துகொண்டேன்' எனக் கூறுவது ஏற்புடையது அல்ல என்கின்றது அவ்வறிக்கை. இதன்மூலம் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கொலைக்குற்றவாளி என ஊர்ஜிதமாகியுள்ளது. இதே வேளையில், இவ்வறிக்கை மீதான விவாதத்தில் தற்பொழுது "துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட போலீஸாரின் மீது துறைரீதியான நடவடிக்கை பாய்ந்துள்ளது' என சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ஆலைக்கெதிரான போராட்டத்தில் பங்குகொண்ட மெரினா பிரபுவோ, "நீதியரசர் அருணா ஜெகதீசனின் அறிக்கையை மகிழ்வோடு வரவேற்கின்றோம். கலெக்டர் அலுவலகத்தைக் கொளுத்தினார்கள். சூறையாடினார்கள். அதனால் தான் சுடவேண்டியாதாயிற்று என்றது காவல்துறை. அதற்கான சி.சி.டி.வி. புட்டேஜ் இருப்பதாக அறிவித்தும் அவர்களை அடையாளம் காண் பிக்கவில்லை காவல்துறை. சி.பி.ஐ.க்கும் இதே நிலைதான். இதனை ஆணையத்தில் ஒப்புக் கொண்டுள்ளனர். அப்படியெனில் அன்று கலெக்டர் அலுவலகத்தை சூறையாடியது யார்? என்கின்ற கேள்வியை எழுப்பி மக்களாகிய எங்களை குற்றவாளிகள் பழியிலிருந்து மீட்டிருக்கின்றார் நீதியரசர். கொலையாளிகள் மீது துறைரீதியான நடவடிக்கை என்பதனை விடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட, குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கொலைக்குற்ற வழக்கைப் பதிவுசெய்வதையே நாங்கள் விரும்புகின்றோம். இதில் டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என பொறுப்பே இல்லாமல் கூறிய எடப்பாடி பழனிச்சாமியையும் கொலைக்குற்றவாளி பட்டியலில் சேர்ப்பது மிக அவசியமான ஒன்று'' என்கிறார் அவர்.

nkn221022
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe