யர் ஃபயர் பண்ணிய ஜாலியன்வாலாபாக் துயரம் நடந்து நூறாம் ஆண்டு தொடங்கியிருக்கும் நிலையில்...

Advertisment

"ஸ்டெர்லைட் ஆலையால் பலவித நோய்கள் வருது.... தினம் தினம் அணுஅணுவா சாகுறோம்... ஆலையை மூடு' என போராடிய தூத்துக்குடி மக்களை... "தினம் தினம் ஏன் சாகுற? "சட்'டுனு செத்துப்போ' என சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள்... இரட்டை அரசின் காக்கிகள்.

prakashrajஇந்தத் துயரத்தை சமூகவலைப் பக்கங்களில் கோபத்துடன் பதிவு செய்திருக்கிறார்கள் திரைப் பிரபலங்கள்...

போராடிய சொந்த மக்களைக் கொன்றதற்கு தமிழ்நாடு வெட்கப்பட வேண்டும். முதுகெலும்பு இல்லாத அரசு. ஆட்சியை பாதுகாக்க மத்திய அரசின் மெட்டுக்கு நடனமாடிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.

-பிரகாஷ்ராஜ்

Advertisment

pa.ranjithரசு எப்போதும் மக்களுக்கானதாக இல்லவே இல்லை. அரசு என்பது வன்முறை -அதிகாரம் -கொடுங்கோலன் & பயங்கரவாதம். நிலம், நீர் & மக்களின் ரத்தம் உறிஞ்சிக் கொழிக்கும் கார்ப்பரேட்டுகளின் அரசே! நீ ஒருபோதும் கவலை கொள்ளமாட்டாய். உனக்குத் தெரியும்... மறதிக் கலையில் கைதேர்ந்தவர்கள் நம் மக்கள் என்று.

-டைரக்டர் பா.ரஞ்சித்

karthiஆலைக் கழிவால் உயிருக்கு ஆபத்து எனப் போராடிய மக்களின் உயிரை அரசின் நடவடிக்கையே பறித்திருப்பது எந்தவிதத்திலும் நியாயமற்றது, நேர்மையற்றது. மனசாட்சி கொண்ட எவருடைய மனதையும் உலுக்கக்கூடிய கொடூரத்தை அரசே செய்திருப்பது மன்னிக்க முடியாதது. நல்ல மூச்சுக்காற்றுக்காக போராடிய மக்களின் மூச்சை அரசே நிறுத்தியிருக்கும் கொடூரத்தை மக்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.

-கார்த்தி

vijaysethupathiட்டமோ, அரசாங்கமோ எவையும் மக்களின் நலன்/பாதுகாப்புக்காக வேண்டியே. அவையே மக்களின் உயிர்க்கொல்லியாக மாறினால் எதற்கு ஒரு அரசாங்கம்?

நியாபகம் இருக்கட்டும்

கடைசித் தமிழனின் ரத்தம்

எழும். வீழாதே!

-விஜய்சேதுபதி

Advertisment

gvprakash

சில நூறுபேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும். வரலாற்றுப் பிழை செய்துவிட்டீர்கள்.

-ஜீ.வி.பிரகாஷ்

danushஇப்படி ஒரு சம்பவத்திற்குக் காரணமானவர்கள் கண்டிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும்.

-தனுஷ்

samuthirakani

எல்லாரையும் கொன்னுட்டு நல்லா இருங்க...

-சமுத்திரக்கனி

மக்கள் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். 50,000 மக்கள் சேர்ந்து ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்றால் கண்டிப்பாக மக்கள், பொதுஜன நலத்துக்காகத்தான் vishalபோராடுகிறார்கள். மரியாதைக்குரிய பிரதமர் கண்டிப்பாக தன்னுடைய அமைதியான மன நிலையை கலைக்க வேண்டிய நேரம் இது.

-விஷால்

rajumurugan

இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை. இந்த அரசும் அதிகாரமும் முற்றாக துடைத்தெறியப்பட வேண்டும்.

-டைரக்டர் ராஜுமுருகன்

vishal

மனிதாபிமானமற்ற செயல்.

-நடிகர் சங்கம்

நம் மண்ணின் மைந்தர்கள் மரணிப்பதை பார்ப்பதைவிட சோகம் வேறு எதுவும் இல்லை. அந்த நச்சு ஆலை இனியாவது மூடப்படட்டும்.

-விவேக்vivek

பிணநாயகம்

துப்பாக்கி வெடிக்கும் -தெரிந்தும்

புரட்சி வெடிக்கும் -தெரியாமலும்

அதிகாரம் ஜனநாயகத்தை

ஒடுக்க நினைக்கிறது

பசியால்

மார்பை நாடிவரும் சிசுவை

முலைக்காம்பே தோட்டாவாக

இயங்கி சிதைத்து ரத்தமூட்டுதல்

போல... தம் மக்களை தாயே

(அரசே) கொன்று குவித்தால்?

parthiban

உலகையே உலுக்கும் இந்த இழவு சரித்திரம்

காக்கிச் சட்டையணிந்த

தூத்துக்குடியினருக்கு

உறுத்தாதா?

...னால் அந்தநாள்

rsprabhu

துப்பாக்கிகள் வெடிக்கும் சர்வாதிகாரத்திற்கு எதிராக

-பார்த்திபன்

அரசு தனது வன்முறையும் கொலைகளும் மக்கள் போராட்டத்தை மௌனித்துவிடுமென நினைப்பது ஜனநாயக படுகொலையின் உச்சம்.

-தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

-ஆர்.டி.எ(க்)ஸ்