"துப்பறியும் ஆனந்த்'’படக் கதை சம்பந்தமாக அஜீத்திற்கும், டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. பிறகு ‘"உன்னை அறிந்தால்'’ படம் மூலம் இருவரும் இணைந்தார்கள்.

"துப்பறியும் ஆனந்த்'’படக் கதை சம்பந்தமாக சூர்யாவுக்கும், டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது? இருவரும் சமரசமாகி ஒரு படத்தில் இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது.

touringtalkies

ஜெயம்ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாஸன் நடிக்க சுந்தர்.சி. இயக்கத்தில், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்ட "சங்கமித்ரா'’படம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டதாகத் தெரிகிறது. சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் சுந்தர்.சி.

சிவகார்த்திகேயனின் "சீமராஜா'’படத்தை விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட விரும்புகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தேதி ஒதுக்கித் தரவில்லை.

பாலியல் குற்றச்சாட்டுகளால் சினிமாவை பதறவிட்ட... ஸ்ரீரெட்டி, தான் விரும்பியதுபோலவே கோலிவுட்டில் வாய்ப்பைப் பெற்றுவிட்டார்.

"ரெட்டி டைரி'’என்பதுதான் படத்தின் தலைப்பு.

ஸ்ரீரெட்டியின் சொந்த வாழ்க்கையைத் தழுவித்தான் இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

""என்னோட வாழ்க்கைச் சம்பவங்களை ஒரு பாகத்தில் சொல்லிவிட முடியாது. குறைந்த பட்சம் ஐந்து பாகங்களாவது எடுக்கப்பட வேண்டும்''’எனச் சொல்லியுள்ளார் ஸ்ரீ.

Advertisment

depika

""நானும் என் கணவர் டேனியல் வெப்பரும்... ஒரு பார்ட்டியில சந்திச்சு, காதல் வயப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நான் கனடாவில் நீலப்பட நடிகையா இருந்தேன். இந்த செக்ஸ் படங்கள்ல வேற ஆண்களோட நான் நடிக்கிறது... என் கணவருக்கு பிடிக்கல. ’"நானே உன்கூட நடிக்கிறேன்'னு சொன்னார். அப்புறம் ரெண்டுபேரும் சேர்ந்து நிறைய அந்த மாதிரி படங்கள்ல நடிச்சோம்''’என கணவரோடு சேர்ந்து கசமுசா படங்கள்ல நடிச்சதுக்கான காரணத்தைச் சொல்லியிருக்கிறார்... சன்னி லியோன்.

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை தன் அம்மாவுடன் சென்று கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். இந்திய அளவில் அதிக நிதி கொடுத்த நடிகராக இருக்கிறார் லாரன்ஸ்.

srireddy

டிக்க வாய்ப்புத் தருவதாகச் சொல்லி... லாரன்ஸ் மீது புகார் சொல்லியிருந்தார் ஸ்ரீரெட்டி. "உங்கள் நடிப்புத் திறமையை நிரூபித்து ஒரு வீடியோவில் பதிவு செய்து தந்தால்... எனது அடுத்த படத்தில் உங்களை நடிக்க வைக்கிறேன்'’என லாரன்ஸ் அறிக்கைவிட்டார். ஸ்ரீரெட்டி அந்த சவாலை ஏற்கவில்லை. இந்நிலையில்... "பிளாக்மெயில் செய்யும் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்புத் தரவேண்டாம்...'’ என லாரன்ஸுக்கு சினிமா உலகிலிருந்து சிலர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

பாலிவுட்டில் இது திருமண சீஸனாக இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா சர்மா, தன் காதலர் விராட்கோலியை திருமணம் செய்துகொண்டார். சோனம் கபூர் தன் பாய்ஃப்ரெண்ட் ஆனந்த்தை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா சோப்ராவுக்கும், அமெரிக்க பாடகர் நிக்கிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. தீபிகா படுகோனேவுக்கும், ரன்வீர் சிங்கிற்கும் நவம்பர் மாதம் இத்தாலியில் திருமணம் நடக்கவிருக்கிறது.

தீபிகாவுக்கு சில தோஷங்கள் இருப்பதாகவும், அதனால் தோஷம் நீங்கி அவரின் வாழ்க்கை சிறப்பாக அமைய தீபியின் பெங்களூரு வீட்டில் யாகம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார் தீபியின் அம்மா.

-ஆர்.டி.எ(க்)ஸ்