த்ரிஷாவுக்கு திட்டு!

trisha

சமீபத்தில் துபாய்க்கு ஜாலி ட்ரிப் அடித்த த்ரிஷா, அங்கு பொழுதுபோக்கு பூங்காவில் மனிதர்களுடன் விளையாட பயிற்சி பெற்ற டால்பினுடன் நீச்சல் குளத்தில் முத்தமிட்டுக் கொஞ்சி மகிழ்ந்தார். அந்தப் புகைப்படங்களைக் ‘கண்டதும் காதல்’ என தனது சமூக வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

Advertisment

"விலங்குகளை துன்புறுத்தக்கூடாது... அவற்றை அதன் போக்கில் வாழவிடவேண்டும்'’ என கோஷமிடும் "பீட்டா'’அமைப்பின் தூதுவராக இருக்கும் த்ரிஷா, டால்பினோடு விளையாடியதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

"உங்களை மாதிரி பணக்காரர்களுடன் விளையாட டால்பின்கள் பழக்கப்படுத்தப்படுகிறது. இது விலங்குகளின் இயல்பான தன்மைக்கு எதிரானது'’என கண்டித்திருக்கிறார்கள்.

ஆனால் "கடலில் தவறி தத்தளிப்போரை கரை சேர்க்க உதவும் குணம் இயற்கையிலேயே டால்பின்களுக்கு உண்டு என்றும், அதனால்தான் பொதுவாகவே மீனவர்கள் டால்பின்களை வேட்டையாடுவதில்லை' என்றும் சொல்லப்படுகிறது.

Advertisment

அவர்கள் த்ரிஷாவை கண்டித்தாலும், த்ரிஷாவின் கன்னத்தில் மிக உற்சாகமாகத்தான் டால்பின் முத்தமிடுகிறது.

சிம்புவுக்கு ’ரெட்’டு?

simbu

மாஜி எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்த "அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'’படம் பெரிய நஷ்டத்தை சந்தித்தது. "சிம்பு சரிவர ஷூட்டிங் வராததுதான் காரணம்...' என ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார் ராயப்பன்.

சிம்பு இப்போது மனமாற்றம் அடைந்து ஷூட்டிங்கிற்கு சரியாக வர ஆரம்பித்திருப்பதால், சிம்புவின் மார்க்கெட் மறுபடி சூடு பிடித்திருக்கிறது.

சுந்தர்.சி. இயக்கத்தில் "அத்தை வீட்டுக்கு போற வழி'’எனும் அர்த்தம் வரும்... பவன் கல்யாண் நடித்த தெலுங்குப் பட ரீ-மேக்கில் நடித்துவருகிறார் சிம்பு.

சிம்பு மார்க்கெட் சூடு பிடித்ததால், ராயப்பனின் புகாரும் சூடு பிடிச்சிருக்கு.

"எனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு சிம்பு ஈடு தரணும். அதுவரைக்கும் படங்கள்ல நடிக்க சிம்புவுக்கு ரெட் போடணும்'’என தயாரிப்பாளர் சங்கத்தில் மறுபடி புகார் அளித்திருக்கிறார் ராயப்பன்.

அதிகாரிகளுக்கு கொட்டு!

பிரபுவும், உதயாவும் நடித்திருக்கும் "உத்தரவு மகாராஜா'’படத்தில் ஒரு குதிரைக் காட்சி. குதிரையை பயன்படுத்தினால்... விலங்குகள் நல வாரியத்திடமிருந்து ‘"படப்பிடிப்பில் குதிரையை கஷ்டப்படுத்தவில்லை'’என தடையிலா சான்று வாங்கி சென்ஸார் போர்டில் சமர்ப்பிக்க வேண்டும். படப்பிடிப்பின்போதும்... வி.ந.வா. ஆள் ஒருவரை உடன் வைத்திருக்க வேண்டும். "இந்த அலைச்சல் எதுக்கு?'னு கிராபிக்ஸில் குதிரையை உருவாக்கினர்.

"இது கிராபிக்ஸ் குதிரைதான்'’என ஏற்றுக்கொண்டு சான்றிதழ் தர சென்ஸார் போர்டு இழுத்தடித்ததால்... படம் ரிலீஸ் தேதியிலேயே குழப்பம் வந்துவிட்டது.

"ரொம்பத்தான் லொள்ளு பண்றாங்க'’என சென்ஸார் அதிகாரிகளை கடிந்துகொண்டிருக்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.

சிவகார்த்திகேயனுக்கு மெட்டு!

siva

சிவகார்த்திகேயன், ராகுல் பிரீத்சிங் நடிக்கும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதற்காக விசேஷமாக ஒரு பாடலுக்கு மெட்டுப் போட்டிருக்கிறார் ரஹ்மான். இதைக்கேட்டு வியந்த சிவகார்த்தி, ‘"இந்தப் பாடலை நீங்களே பாடணும்'’ என கேட்டுக்கொண்டதால்... ரஹ்மானும் சம்மதித்திருக்கிறார்.

-ஆர்.டி.எ(க்)ஸ்