ஹாலிவுட் படத்தில் மட்டுமே நடக்கும் காட்சிகள் அச்சு அசலாக, அமெரிக்காவின் பார்லிமெண்ட் கட்டடத்துக்கு முன்பாக நடந்ததில் உலகமே ஆடிப்போயிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின்படி அமெரிக்காவின் புதிய அதிபர் தேர்வை உறுதிசெய்ய பாராளுமன்றக் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருக்கையில், ட்ரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு, அமெரிக்க ஜனநாயகத்தையே நடுநடுங்க வைத்துவிட்டனர்.
2020, நவம்பர் 3-ல் தேர்தலில் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்காக தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகும்போது ஆரம்பம் முதலே, ஜோ பைடனின் கை ஓங்கியிருந்தது. அதிபர் ட்ரம்ப், தான் வெற்றி பெறு வோம் என எதிர்பார்த்த விஸ்கான் சின், மிக்சிகன், அரிசோனா மாகாணங்களிலும் பைடனின் கை ஓங்கியதால், "வாக்குச் சாவடிகளில் தகராறு, வாக்கு எண்ணிக்கை நிறுத்தம், நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்' என சாத்தியமான வழிகளிலெல்லாம் இடைஞ்சல்களை ஏற்படுத்தினார். அத்தனையையும் தாண்டி ஜோ பைடனின்
ஹாலிவுட் படத்தில் மட்டுமே நடக்கும் காட்சிகள் அச்சு அசலாக, அமெரிக்காவின் பார்லிமெண்ட் கட்டடத்துக்கு முன்பாக நடந்ததில் உலகமே ஆடிப்போயிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின்படி அமெரிக்காவின் புதிய அதிபர் தேர்வை உறுதிசெய்ய பாராளுமன்றக் கூட்டுக் கூட்டம் நடந்துகொண்டிருக்கையில், ட்ரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்றக் கட்டடத்தை முற்றுகையிட்டு, அமெரிக்க ஜனநாயகத்தையே நடுநடுங்க வைத்துவிட்டனர்.
2020, நவம்பர் 3-ல் தேர்தலில் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்காக தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகும்போது ஆரம்பம் முதலே, ஜோ பைடனின் கை ஓங்கியிருந்தது. அதிபர் ட்ரம்ப், தான் வெற்றி பெறு வோம் என எதிர்பார்த்த விஸ்கான் சின், மிக்சிகன், அரிசோனா மாகாணங்களிலும் பைடனின் கை ஓங்கியதால், "வாக்குச் சாவடிகளில் தகராறு, வாக்கு எண்ணிக்கை நிறுத்தம், நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்' என சாத்தியமான வழிகளிலெல்லாம் இடைஞ்சல்களை ஏற்படுத்தினார். அத்தனையையும் தாண்டி ஜோ பைடனின் வெற்றி உறுதியானது. அமெரிக்க உச்சநீதிமன்றமும் ட்ரம்புக்கு கைவிரித்துவிட்டது.
இந்நிலையில்தான் ஜனவரி 6-ஆம் தேதி அதிபர் ஜோ பைடனும் துணை அதிபர் கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்குவதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை கூடின. இதையடுத்து பாராளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் துணை அதிபர் மைக் பென்ஸை வைத்து, ஜோ பைடனின் வெற்றி செல்லாது என அறிவிக்கத் திட்டமிட்டிருந்தார் ட்ரம்ப். அதற்கு பென்ஸ் மறுப்புத் தெரிவித்துவிட்டார். சான்றிதழ் வழங்கும் பணி மட்டும் முடிந்துவிட்டால், அதன்பிறகு செய்வதற்கு ஏதுமில்லையென நினைத்த ட்ரம்ப் கடைசி மற்றும் வலுவானதொரு முயற்சியில் இறங்கினார். உண்மையில் அது முயற்சியே இல்லை. அத்துமீறல்.
தனது ஆதரவாளர்களை பெருமளவில் வாஷிங்டனில் திரளச் செய்து, ட்ரம்பின் வெற்றியை பைடன் தரப்பு திருடிவிட்டதாகவும், பைடனின் வெற்றியை பாராளுமன்றம் ஒப்புக்கொள்ளக்கூடாதெனவும் கோஷமிட்டபடி பேரணி நடத்தச் செய்தார். பல்லாயிரக் கணக்கில் திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட காவலர்கள் திகைத்துப்போயினர். அவையில், வெற்றிபெற்ற பிரதிநிதிகளின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
அமெரிக்க அதிபராக பைடனை தேர்வுசெய்வதற்கான வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருப்பதை அறிந்த கூட்டத்தினர் ஆவேசமாக பாராளுமன்றத்துக்குள் நுழையமுயன்றனர். இதனால் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் "தள்ளுமுள்ளு' ஏற்பட்டது. பேரணியில் வந்தவர்கள் கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் வைத்திருந்ததோடு தீவைப்பிலும் சிலர் இறங்கினர். ஒருகட்டத்தில் பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப் புகைக்குண்டு, துப்பாக்கி போன்றவற்றை பிரயோகிக்கும் நிலை ஏற்பட்டது.
சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த முற்றுகையின்போது, அதிபர் தேர்வு நடைமுறை பாதியில் நிறுத்தப்பட்டு, பாராளுமன்ற வாசல்களை அடைத்துவிட்டு உள்ளேயிருந்த உறுப்பினர்களை பாதுகாப்பாக பாதாள ரகசிய அறைக்கு அழைத்துச்சென்றனர் அதிகாரிகள்.
பாதுகாப்புப் படையினருக்கும் ட்ரம்ப் ஆதரவாளருக்கும் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கானோருக்கு காயம் ஏற்பட்டதோடு ஐந்துபேர் பலியாகவும் செய்தனர். அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட 52 பேர் கைது செய்யப்பட்டனர். நிலைமை கட்டுக்குள் வந்ததையடுத்து, நள்ளிரவில் மீண்டும் கூட்டம் தொடங்கப்பட்டு தேர்தல் சபை உறுப்பினர்களின் வாக்குகள் எண்ணப்பட்டது மொத்தமுள்ள 538 உறுப்பினர்களில் 306 வாக்குகள் பெற்ற பைடன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டது. வரும் ஜனவரி 20-ஆம் தேதி ஜோ பைடனும் கமலா ஹாரிசும் பதவியேற்க உள்ளனர்.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னும் தன் தோல்வியை ஏற்க மறுத்து, கலவரக் காட்சிகளை டி.வி.யில் பார்த்தபடி இருந்த ட்ரம்ப், ""நான் தேர்தல் முடிவுகளில் உடன்படவில்லை. ஆனாலும் ஜனவரி 20-ஆம் தேதி அதிகார மாற்றம் முறையாக நடக்கும்''’என தன் தோல்வியை அரைமனதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
போராட்டத்துக்குப் பின்பும் ட்ரம்ப் வெளியிட்ட ட்விட் செய்தி, ""நீங்கள் மிகுந்த மனவேதனையில் இருப்பீர்கள் எனத் தெரியும். மோசடித் தேர்தல் நடந்துள்ளது. அவர்களிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது. இருப் பினும் அனைவரும் அமைதியுடன் வீடு திரும்புங்கள்''’என தெரிவித்தார்.
மேலதிக பிரச்சினைகளைத் தவிர்க்க, ட்ரம்பின் பல்வேறு செய்திகளை ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் நீக்கியதோடு, அவரது கணக்கையும் முடக்கிவைத்தன.
மாறாக ஜோ பைடனோ, "பார்லி மெண்டுக்குள் அத்துமீறி நுழைந்து, கண்ணாடிகளை உடைப்பது, தீ வைப்பது போராட்டமல்ல... ஜனநாயகத்தின் கலங்கரை விளக்கமான அமெரிக்காவில் இது நடப்பது வேதனையளிக்கிறது''’என ஆவேசப்பட்டார். உலகத் தலைவர்களின் வரிசையில், ""ஜனநாயக நட வடிக்கைகளை சட்டவிரோதச் செயல்களால் சீரழிக்க முடியாது''’என ஆட்சேபம் தெரிவித்தார் பிரதமர் மோடி.
அதிகாரப் பித்து என்னவெல்லாம் செய்யும் என்பதை ஈராக், ஆப்கானிஸ் தான், வியட்நாம் ஆக்கிரமிப்பு விவகாரங் களில் உணராத அமெரிக்கர்கள், பாராளுமன்ற முற்றுகையின்போது கொஞ்சமாவது உணர்ந்திருப்பார்கள்; அத்துடன் டிரம்ப்பின் ஒரிஜினல் முகத்தையும்.
-க.சுப்பிரமணியன்